The Real King – Birbal Story in Tamil- யார் உண்மையான அரசர்

The Real King – Birbal Story in Tamil- யார் உண்மையான அரசர் :- உலகம் முழுவதும் அக்பர் மற்றும் புகழ் பரவி இருந்ததால ,ஈரான் நாட்டு அரசருக்கு பீர்பால சந்திக்கணும்னு ஒரே ஆசையா இருந்துச்சு

அதனால தன்னோட அமைச்சரையே நேரடியா அக்பரை சந்திச்சு பீர்பாலை தன்னோட அரண்மனைக்கு கூட்டிவர அனுப்பிச்சாரு

அரண்மனை தோட்டத்துல இருந்த அக்பர் கிட்ட வந்த அந்த அமைச்சர் தன்னோட அரசர் கொடுத்த கடிதத்த கொடுத்தாரு ,அத படிச்ச அக்பர் உடனே சம்மதிச்சாரு

பீர்பால் கிட்ட சொன்னாரு ஈரான் நாட்டு அரசர் உங்கள சந்திக்கணுமாம் அங்க போய் நம்ம நாட்டோட புத்திசாலி தனத்தை காட்டி அவர சந்தோச படுத்திட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சாரு

ஈரானுக்கு போன பீர்பாலை வரவேற்க்க எல்லாரும் தயாரா ஆனாங்க ,அப்பதான் அவரோட அறிவை சோதிச்சு பாக்கணும்னு அந்த அரசருக்கு ஒரு யோசன வந்துச்சு .உடனே அத செயல்படுத்த தன்னை மாதிரியே சிலர உடை உடுத்தி பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டாரு ,பீர்பால் உன்மையான அறிவாளினா என்ன கண்டுபிடிக்கட்டும்னு நினைச்சாரு

அரண்மனைக்கு வந்த பீர்பாலுக்கு ஒரே அதிர்ச்சி ,ஏன்னா அரசர் மாதிரியே உடை அணிஞ்ச ஏழுபேர் அங்க இருந்தாங்க ,அடடா இதுல யார் உண்மையான அரசர்னு ஒரே குழப்பமா இருந்துச்சு பீர்பாலுக்கு

அப்பத்தான் புரிஞ்சது பீர்பாலுக்கு அடடா என்ன சோதிக்க பாக்குறாரா அரசர் ,இந்த போட்டியில நான் வெற்றி பெற்று காட்டுறேன்னு தனக்குள்ள நினைச்சுகிட்டு பீர்பால் அந்த ஏழு பேத்தயும் உன்னிப்பா பாக்க ஆரம்பிச்சாரு

ஒரு முடிவுக்கு வந்த பீர்பால் உண்மையான அரசர்கிட்ட போய் வணக்கம் சொன்னாரு ,எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யமா போச்சு ,அப்ப அரசர் பேசுனாரு உங்களோட திறமையை சோதன பண்ணுனதுக்கு மன்னிச்சிடுங்க ,என்ன எப்படி உண்மையான அரசர்னு கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாரு அரசர்

அதுக்கு அக்பர் சொன்னாரு இங்க இருக்குற எல்லாரும் உங்கள மாதிரியே உடை ,நகை எல்லாம் போட்டிருந்தாலும் உங்க கிட்ட இருந்த அந்த கம்பீரத்தை யாருகிட்டயும் பாக்க முடியல ,அவுங்க எல்லாரும் அடிக்கடி உங்களையே பாத்தாங்க ஆனா நீங்க மட்டும் தான் என்னையே பாத்தீங்க அதனால கண்டிப்பா நீங்கதான் அரசரா இருக்க முடியும்னு எனக்கு தோணுச்சுன்னு சொன்னாரு

இத கேட்ட எல்லாரும் வியந்து போனாங்க