கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God’s Own People

கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God’s Own People:-அக்பருக்கு ஒரு நாள் ஒரு விசித்திர சிந்தனை தோன்றியது ,கடவுள் ஏன் மக்களை காக்க நேரில் வரவேண்டும்,ஏன் அவர் தனது தூதுவர்களை அனுப்பி வைத்தால் போதுமானது தானே என்பது தான் அந்த கேள்வி

கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God's Own People

அந்த கேள்வியை தனது அரசவையில் கேட்டார் அக்பர் பாதுஷா ,இதனை கேட்ட பீர்பால் இதற்கான விடையை தெரிந்துகொள்ள நீங்கள் சிறிதுநேரம் காத்திருக்க வேண்டும் அரசே என்று கூறினார்

அதற்கு ஒப்புக்கொண்ட அரசர் தினமும் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார்

கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God's Own People

ஒருநாள் அக்பரும் தமது குடும்பத்தாரும் ஒரு படகில் அண்டை ஊர்களுக்கு நதிமார்க்கமாக சென்றுகொண்டு இருந்தனர் ,அந்த படகில் சில மந்திரிமார்களும் பீர்பாலும் இருந்தனர்.

படகு சென்றுகொண்டிருந்த போது அரசரின் பேரன்களில் ஒருவரை தூக்கி நதிக்குள் போட்டார் பீர்பால் ,இதை கண்ட அரசர் வேகமாக நதிக்குள் குதித்து குழந்தையை காப்பாற்றினார் ,இதனை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது

கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God's Own People

படகில் எறிய அக்பர் பீர்பாலிடம் கேட்டார் எதற்கு குழந்தையை தூக்கு நதி நீரில் போட்டீர்கள் என்று கேட்டார்

அதற்கு பீர்பால் ஏன் அரசரே இத்துணை படை வீரர்கள் ,படை தளபதியாகிய நான் ,மற்றும் அரண்மனை சேவகர்கள் இத்துணை பேர் இருக்கும்போது நீங்களே நதியில் குதிக்க என்ன காரணம் என்று வினவினார்

கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God's Own People

இதை கேட்ட அக்பர் இது என்ன கேள்வி குழந்தையை காப்பாற்ற உங்களை எதிர்பார்த்தால் குழந்தை மூழ்கிவிடாதா ,எனதருமை பேரனை காப்பாற்ற உங்கள் உதவியை நாட வேண்டுமா என்று கோபமாக கூறினார்

இதனை கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே சொன்னார்,இதுதான் அரசே உங்கள் கேள்விக்கான பதில் ,இந்த உலகத்தின் மனிதர்கள் எல்லோரும் கடவுளுக்கு குழந்தைகள் போல் அல்லவா ,அவர் படும் துயரத்தை கண்ட கடவுள் நேரில் வருவது இயல்பே அன்றி தமது தூதுவர்களை அனுப்ப யோசிக்க மாட்டார் ,என்று பதில் உரைத்தார்.

கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God's Own People

இதனை கேட்ட அரசருக்கு அவரது விடையில் இருந்த ஆழ்ந்த கருத்தை புரிந்து கொண்டு சந்தோசம் கொண்டார்