கிணத்து நீர் பீர்பால் கதைகள்

ஒரு கிராமத்து விவசயிக்கு ரொம்ப தண்ணீர் கஷ்டம்

அவரால தன்னோட தோட்டத்துக்கு சரியா தண்ணி விட முடியல

உடனே பக்கத்துக்கு தோட்டத்து கிணறு விலைகொடுத்து வாங்குனாரு அந்த விவசாயி

மறுநாள் தோட்டத்துக்கு தண்ணிவிட போன அந்த விவசாயியை தடுத்தாரு பக்கத்துக்கு தொட்டத்துகாரர்

உனக்கு நான் கிணத்த வித்தேனே ஒழிய கிணத்து தண்ணிய விக்கலை

அதனால நீ கிணத்து தண்ணிய எடுக்க முடியாதுன்னு சொன்னாரு

இதைக்கேட்டு சோகமான அந்த விவசாயி கிட்ட நீ உடனே பீர்பால் கிட்ட போயி நடந்தத சொல்லுன்னு மத்த விவசாயிங்க எல்லாரும் சொன்னாங்க

உடனே பீர்பால் கிட்ட போயி நடந்த விசயத்த எல்லாத்தையும் சொன்னாரு அந்த விவசாயி

உடனே பக்கத்துக்கு தோட்டக்காரரை வரச்சொன்ன பீர்பால்

உன்னோட கிணத்த நீ வித்ததால் இனிமே அந்த கிணறு அவருக்கு சொந்தம்

அவருக்கு சொந்தமான கிணத்துல தண்ணி வைக்க நீதான் அவருக்கு வாடகை கொடுக்கணும்

இல்லன்னா உன்னோட தண்ணிய வேற இடத்துல கொட்டிட்டு கிணத்த மட்டும் அவருகிட்ட கொடுன்னு சொன்னாரு

இதைக்கேட்டு தலை குனிந்த அந்த பக்கத்துக்கு தொட்டத்துகாரர் தன்னோட துர்நோக்கம் செயல் படாம பொணத்த நினைச்சு வறுத்த பட்டர்

உடனே பீர்பால் கிட்டயும் அந்த விவசயி கிட்டயும் மன்னிப்பு கேட்டாரு அந்த தோட்டக்காரர்

1 thought on “கிணத்து நீர் பீர்பால் கதைகள்”

Comments are closed.