முட்டை, உருளைக்கிழங்கு , தேயிலை

தியா ஒரு சுட்டிப்பெண் அவளுக்கு ஒருநாள் வாழ்க்கை ரொம்ப விரக்தியா இருந்துச்சு

தன்னால மேலும் வாழ முடியாதுன்னு அவுங்க அப்பாகிட்ட போயி சொல்லுச்சு தியா

தியாவோட இந்த வாதத்த கேட்ட அவுங்க அப்பா

ஒரு மூணு அடுப்பை பத்த வைக்க சொன்னாரு ,

மூணு அடுப்புலயும் மூணு சட்டி வச்சு அதுல தண்ணி ஊத்தி சுட வச்சாரு

ஒரு அடுப்புல முட்டையை போட்டாரு ,

இன்னொரு அடுப்புல தேயிலையை போட்டாரு ,

கடைசி அடுப்புல உருளைக்கிழங்கை போட்டாரு

இத பாத்த தியாவுக்கு ஒண்ணுமே புரியல

இது என்ன அப்பா செய்யுறாருனு கவலையோட பாத்துகிட்டே இருந்தா

பத்து நிமிசத்துக்கு அப்புறமா அடுப்பை அனைச்சாறு

இப்ப எல்லா பொருளையும் எப்படி இருக்குன்னு பார்க்க சொன்னாரு

இந்த முட்டையை பாத்தியா லேசான முட்ட இப்ப கடினமான முட்டையை மாறிடுச்சு

கடினமான உருளைக்கிழங்கு இப்போ லேசான உருளைக்கிழங்கா மாறிடுச்சு

இந்த தேயிலை பாத்தியா தன்னை சுடவச்ச தண்ணியவே சுவையானதா மத்திடிச்சு

இதுமாதிரி வாழ்க்கையில துன்பம் வரும்போது ,நெளிவு சுழிவோட நடந்துக்கிட்டம்னா வாழ்க்கைல நல்லபடியா வலாம்னு தியாவுக்கு புரிய வச்சாரு அவுங்கப்பா

பழமொழி :நாணல் போல் வளைந்து சிகரம் போல் எழு