The Wolf & the Lion – ஓநாயும் சிங்கமும் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு சிங்கமும் ஒரு ஓநாயும் வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க
ஒருநாள் ஓநாய் அங்க மேஞ்சுக்கிட்டு இருந்த ஆட்டு குட்டிய பிடிச்சிட்டு ஓடுச்சு
அப்படி ஓடுறப்ப சிங்கம் அத பார்த்துடுச்சு
ஒரே அடி அடிச்சி அந்த ஆட்ட ஓநாய்கிட்ட இருந்து பிடுங்கிக்கிடுச்சு அந்த சிங்கம்
உடனே ஓநாய் என்னோட சொத்தை நீங்க எப்படி பிடுங்கலாம்னு கேட்டுச்சு
அதுக்கு சிங்கம் என்னது உன்னோட சொத்தா ,இது நீ வளர்த்த ஆடா ,இல்ல ஆடு மேய்கிறவரு உனக்கு கொடுத்தாரான்னு கேட்டுச்சு
தான் திருடுனது தனக்கு கிடைக்காத கோபத்துல அங்க இருந்து போய்டுச்சு ஓநாய்
நீதி : தீமையில் விளைந்த நன்மை நீடிக்காது
நீதி : வல்லவனுக்கு வல்லவன் உண்டு