The Spotted Friends – Giraffe Cow Story- ஒட்டகசிவிங்கியும் பசு மாடும்

The Spotted Friends – Giraffe Cow Story- ஒட்டகசிவிங்கியும் பசு மாடும் :- ஒரு காட்டுல நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அங்க ஒரு பசு மாடும் ஒட்டக சிவிங்கியும் நண்பர்களா இருந்துச்சுங்க

ஒருநாள் ஒட்டக சிவிங்க இறை தேடி போறப்ப ஒரு குழிக்குள்ள விழுந்துடுச்சு

அப்ப அதுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு ,அடடா இப்படி குழிக்குள்ள விழுந்துட்டமே நம்மள யாரு காப்பாத்துவானு வருத்தப்பட்டுச்சு ,

நேரம் ஆக ஆக அதோட பயம் ரொம்ப கூடிகிட்டே போச்சு ,அடடா நம்மள நம்ம நண்பரான பசு மாடு கூட கண்டுபிடிக்க முடியாம போய்டுமோனு பயந்துச்சு

கொஞ்சம் கொஞ்சமா தன்னோட நம்பிக்கையை இழந்த ஒட்டகச்சிவிங்கி முன்னாடி வந்து நின்னுச்சு பசு மாடு

அடடா பசு நண்பரே என்ன எப்படி கண்டு பிடிசீங்க ,நீங்க யாரும் என்ன கண்டுபிடிக்க மாட்டீங்கனு நான் ரொம்ப பயந்து போயிட்டேன்னு சொல்லுச்சு

அத கேட்ட பசுமாடு சிரி சிரின்னு சிரிச்சிச்சு ,நீதான் பனை மரம் மாதிரி வளர்ந்திருக்கயில இந்த காட்டுல எங்க இருந்து பார்த்தாலும் உன்ன கண்டுபிடிச்சிடலாம்

உன்னோட பலம் என்னனு நீ தெரியாமயே சுத்திகிட்டு இருக்க ,இந்த குழி சின்ன குழிதான் மேல ஏறி வானு சொல்லுச்சு

அப்பத்தான் அந்த ஒட்டக சிவிங்கிக்கு புரிஞ்சிச்சு அடடா நாம பயத்துல இந்த குழிய கவனிக்காம விட்டுட்டமேன்னு சொல்லிட்டு ஒரு அடி எடுத்துவச்சு சுலபமா வெளியில வந்துடுச்சு

அப்பத்தான் பசுமாடு சொல்லுச்சு நாட்டுல இப்படித்தான் நிறய பேரு தன்னோட பலம் புரியாம அவுங்கள அவுங்களே மட்டம் தட்டிகிட்டு முன்னேறாம இருக்காங்கனு சொல்லுச்சு