ஊதாரி இளைஞனும் சிட்டுக்குருவியும் -The Spendthrift & the Swallow:- முன்னொரு காலத்துல எகிப்திய ராஜாங்கம் ஒன்னு இருந்துச்சு
அதுல ஒரு பணக்காரர் இருந்தாரு அவருக்கு ஒரு ஊதாரி மகன் இருந்தான்
இன்றைக்கு நல்லா இருந்தா போதும்னு எதிர்காலத்த பத்தி யோசிக்காம இருக்குற பணத்தை எல்லாம் செலவு செஞ்சான் அவன்
அவுங்க அப்பா மறைவுக்கு பிறகும் அவன் திருந்தவே இல்ல
தங்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் செலவு செஞ்சு ஏழ்மை நிலைய விரைவாவே அடஞ்சான் அவன்
கடைசியா அவன்கிட்ட ஒரே ஒரு சட்டையும் ஒரு கம்பளியும் மட்டுமே இருந்துச்சு
ஒருநாள் ரோட்ல நடந்து போய்கிட்டு இருக்கிறப்ப வெயில் காலங்களில் தென்படுகிற சிட்டுக்குருவி ஒன்னு மரத்துல இருக்குறத பார்த்தான்
அடடா வெயில்காலம் வந்திடுச்சு போல ,இனிமே இந்த கம்பளி நமக்கு தேவைப்படாதுனு சொல்லி அந்த கம்பளிய வித்து அந்த பணத்தையும் அன்னைக்கே செலவு பண்ணிட்டேன்
ஆனா வானிலை மோசமாகி வெயில்காலம் தள்ளி போச்சு , குளிர்ந்த காற்று வீசி அன்னைக்கு பனிமலை பெஞ்சுச்சு
ஊதாரியான அந்த முட்டாள் இளைஞன் அந்த பனிமலைக்கு பலியானான்
நீதி : சகுனங்களை நம்ப கூடாது
நீதி : ஊதாரி போக்கு உதவாமல் போகும்