The Princess Rose-Bedtime Stories in Tamil – கருப்பு ரோஜா

The Princess Rose-Bedtime Stories in Tamil – கருப்பு ரோஜா :- ஒரு ராஜியத்துல ஒரு அழகான இளவரசி இருந்தா ,அவ ரொம்ப அழகாவும் ரொம்ப புத்திசாலியாவும் ,ரொம்ப நல்லவளாவும் இருந்தா

The Princess Rose-Bedtime Stories in Tamil

அவளோட அழகை பார்த்து அங்க வேலை செய்யுற ஒரு வேலைக்காரிக்கு ரொம்ப பொறாமையா இருந்துச்சு, உண்மையாவே அந்த வேலைக்காரி ஒரு சூனியக்காரி யோட பேத்தி

The Princess Rose-Bedtime Stories in Tamil

அவளுக்கு இளவரசி மேல பொறாமை இருந்ததால தன்னோட சூனியக்கார பாட்டிகிட்ட அந்த இளவரசிய ஒளிச்சு கட்டணும்னு சொன்னா

The Princess Rose-Bedtime Stories in Tamil

இளவரசி எப்பவும் ரோஜா பூ தலையில வச்சுக்கிடுறத ஒருநாள் கவனிச்சா ,அதனால மந்திர கருப்பு ரோஜா பூவ இளவரசி கிட்ட கொடுத்து அவளுக்கு ஆபத்து ஏற்படுத்தணும்னு முடிவு பண்ணுனா

The Princess Rose-Bedtime Stories in Tamil

ஒருநாள் தோட்டத்துல நடந்துகிட்டு இருந்த இளவரசிகிட்ட வந்தாங்க அங்க வந்த சூனியக்காரி , ஒரு கருப்பு ரோஜாவ கொடுத்து தலையில வச்சிக்கிட்ட சொன்னா

The Princess Rose-Bedtime Stories in Tamil

இறக்கமுடிய இளவரசி எதுவும் பேசாம அந்த கருப்பு ரோஜாவ வாங்கி பார்த்தாங்க

The Princess Rose-Bedtime Stories in Tamil

அதுரொம்ப அழகா இருந்ததால அத தன்னோட தலையில வச்சுக்கிட்டாங்க ,அப்பத்தான் அந்த கருப்பு ரோஜா அந்த இளவரசியை விழுங்கிடுச்சு ,டக்குனு இளவரசி அந்த ரோஜாக்குள்ள போய்ட்டாங்க

The Princess Rose-Bedtime Stories in Tamil

அதுக்கு அப்புறமா அடிச்ச காத்துல அந்த கருப்பு ரோஜா பறந்து வேற இடத்துக்கு போய்டுச்சு ,ரொம்ப காலம் அந்த ரோஜாக்குள்ள சிறைப்பட்டு கிடந்தாங்க அந்த இளவரசி

The Princess Rose-Bedtime Stories in Tamil

ரொம்ப காலத்துக்கு பிறகு அந்த கருப்பு ரோஜாவ ஒரு இளவரசர் பார்த்தாரு ,அடடா இது என்ன புதுவிதமான ரோஜாவா இருக்கேனு அத கையில எடுத்து தன்னோட தோட்டத்துல போய் நட்டு வச்சாரு,தினமும் தோட்டக்காரனை விட்டு அந்த செடிக்கு தண்ணி ஊத்த சொன்னாரு

The Princess Rose-Bedtime Stories in Tamil

ஆனா அந்த அபூர்வமான கருப்பு ரோஜா வளரவே இல்ல ,அதனால அந்த இளவரசருக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு

The Princess Rose-Bedtime Stories in Tamil

ஒருநாள் அந்த ரோஜா செடிக்கு அவரே தண்ணி ஊத்துனாரு ,உடனே டக்குனு இளவரசி தன்னோட சாபம் தீர்ந்து வெளியில வந்தா ,அத பார்த்த இளவரசருக்கு ரொம்ப ஆச்சர்யமா போச்சு

The Princess Rose-Bedtime Stories in Tamil

ஒரு வேலைக்காரியோட பொறாமையினால கஷ்டப்பட்ட அந்த இளவரசியை அவுங்களோட அப்பா அம்மாகிட்ட பத்திரமா அனுப்பி வச்சாரு அந்த இளவரசர்