The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு :- ஒரு கிராமத்துல ஒரு ஆடுமேய்க்கிற சிறுவன் இருந்தான்

அவ்வன் காட்டுக்கு பக்கத்துல போயி ஆடு மேய்க்கிறது வழக்கம்
ஒருநாள் அவன் ஆடுமேச்சிகிட்டு இருக்கிறப்ப ஒரு ஆடு மட்டும் காட்டுக்குள்ள போயி மேய ஆரம்பிச்சுச்சு
அத பார்த்த அந்த பையன் ஓடி போயி அத இழுத்துட்டு வந்து பாதுகாப்பான எடத்துல மேய விட்டான்

கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் அதே ஆடு திரும்பவும் காட்டுக்குள்ள போக பாத்துச்சு
அத பார்த்த அந்த பையனுக்கு ரொம்ப கோபம் வந்துச்சு உடனே ஒரு கல்ல எடுத்து அந்த ஆட்ட குறிபார்த்து எறிஞ்சான்
அந்த கல்லு பட்டு ஆட்டோட கொம்பு ஒடஞ்சிபோச்சு
அத பார்த்த பையனுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு ஆட்டோட கொம்பு ஒடஞ்சு போனது தெரிஞ்சா அவுங்க அம்மா திட்டுவாங்கனு பயந்தான்

அதனால அந்த ஆட்டுக்கிட்ட போயி உன்ன கல்லால அடிச்சத யாருகிட்டயும் சொல்லாதனு சொன்னான்
அதுக்கு அந்த ஆடு சொல்லுச்சு நான் மாட்டேன் ஆனா என்னோட கொம்பு உண்மைய சொல்லும்னு சொல்லுச்சு
நீதி : தீய செயல்கள் மறைந்து இருக்காது
Wicked deeds will not stay hid.