ஜெல்லி மீன் மற்றும் குரங்கு (The Jelly Fish and the Monkey)-குழந்தைகள் கதை :-ஜப்பான் இலக்கிய குழந்தைகள் கதைகளில் இந்த கதை சொல்லப்படுகிறது ,ஜெல்லி மீன் எப்படி எலும்பு இல்லாமல் நெலு நெலு என இருக்குதுனு தெரியுமா

ஒருகாலத்துல கடல்ல வாழுற ஜெல்லி மீன் எல்லாத்துக்குக்கும் முதுகெலும்பும் கால் எலும்புகளும் இருந்துச்சு ,அப்ப அந்த கடல ஒரு மிகப்பெரிய சுறா மீன் குடும்பம் ஆட்சி செஞ்சுகிட்டு வந்துச்சு

அந்த மீன் குடும்பத்தோட பெரியவரான மிக பெரிய சுறா மீன் அந்த கடலையே தன்னோட ஆட்சியில வச்சிருந்துச்சு ,ஒருநாள் வேட்டைக்கு போன சுறா மீனுக்கு அதோட மகளான குட்டி சுறாவுக்கு உடம்பு சரி இல்லைனு சொல்லி அனுப்புச்சாங்க மந்திரி மீன்கள் ,அத கேள்விப்பட்ட சுறா ரொம்ப கோபமாகி அரண்மனைக்கு திரும்பி வந்துச்சு

அங்க வந்து பார்த்தா அதோட குட்டி மீன் தன்னோட உடம்பு முழுசும் பலகீனமாகி படுத்து இருந்துச்சு ,அத பார்த்த அரசர் சுறா மீனுக்கு ரொம்ப கொபமாகிடுச்சு ,உடனே தன்னோட அரசவைய கூப்பிட்டு ,இந்த கடல்ல இருக்குற எல்லா மீனுக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் ,இங்க இருக்குற மீன்கள்ல யார் என்னோட குட்டி மகளான சுறாவ வைத்தியம் செஞ்சு காப்பாத்துறாங்களோ அவுங்கள அரசவையில் பெரிய மந்திரி பதவி கொடுத்து வச்சுக்கிடுவேன்னு சொல்லுச்சு

இந்த செய்தி கடல்ல இருக்குற எல்லா மருத்தவம் பாக்குற மீன்களுக்கும் தெரிவிக்கப்பட்டுச்சு , இத கேள்விப்பட்ட எல்லா மருத்துவம் பக்குர மீன்களும் வரிசையா வந்து அரசரை பாத்து ,குட்டி மீனுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சுச்சுங்க ,யார் எப்படி வைத்தியம் பார்த்தாலும் குட்டி மீனுக்கு உடம்பு சரியாகவே இல்ல ,

அதனால ரொம்ப வருத்தப்பட்டாரு சுறா அரசர் ,அப்ப அங்க ஒரு ஆமை வைத்தியர் வந்தாரு ,அவரு சொன்னாரு அரசே நில பகுதியில ஒரு வைத்திய முறை இருக்கு ,அதுல அங்க வாழுற குரங்குகளோட ஈரலை எடுத்துட்டு வந்து குட்டி சுறாவுக்கு கொடுத்தா அதுக்கு சரியாகிடும்னு சொல்லுச்சு

இத கேட்ட அரசருக்கும் கோபம்தான் வந்துச்சு ,நாம எல்லாம் கடல் வாழ் உயிரினங்கள் நாம எப்படி கடலை விட்டு வெளிய போயி ஒரு குரங்க பிடிக்க முடியும்னு கேட்டாரு ,அதுக்கு அங்க இருங்க நண்டு மந்திரி சொல்லுச்சு ,அரசே இந்த பகுதியில தன்னை பெரிய புத்திசாலினு சொல்லிக்கிட்டு ஒரு ஜெல்லி மீன் கூட்டம் இருக்கு

அதோட அரசன்னு சொல்லிட்டு ஒருத்தன் சுத்துறான் ,அவன் தன்னால நில பகுதிக்கு போக முடியும் உங்களால போக முடியாதுனு சொல்லி எல்லாரு கூடவும் சண்ட போட்டுக்கிட்டு இருக்கான் , எனக்கு என்னவோ அவன அனுப்புச்சா குரங்கை எப்படியாவது கடலுக்கு கூட்டிட்டு வந்திட முடியும்னு தோணுதுன்னு சொல்லுச்சு

அத கேட்ட சுறா அரசர் உடனே அந்த ஜெல்லி மீன் தலைவனை அரண்மனைக்கு வர சொன்னாரு ,என்னமோ ஏதோனு பயந்து போய் அரண்மனைக்கு வந்த ஜெல்லி மீன் தலைவனுக்கு ,குரங்க பிடிச்சிட்டு வானு அரசர் உத்தரவு போட்டதும் என்ன செய்யுறதுனே தெரியல

அடடா தன்னால நிலத்துலயும் வாழ முடியும்னு உதார் விட்டு கிட்டு அலைஞ்சதுக்கு சரியான தண்டனை கிடைச்சிடுச்சு ,இப்ப போயி குரங்கை பிடிச்சிட்டு வரலைனா தன்னோட கூட்டத்தையே கடலை விட்டு வெளிய போயி நிலத்துல வாழ சொல்லி அனுப்புச்சுடுவாங்களேன்னு நினைச்சு ரொம்ப பயந்துடுச்சு ஜெல்லி மீன் தலைவன்
என்ன செய்யுறதுனே தெரியாத அந்த ஜெல்லி மீன் தலைவன் தன்னோட , கூட்டத்தை கூப்பிட்டு நடந்தத சொல்லுச்சு ,அத கேட்ட எல்லா ஜெல்லி மீனும் கவலை பட்டுச்சுங்க ,இந்த ஆபத்துல இருந்து நம்மள யார் காப்பாத்துவாங்கனு கேட்டுச்சுங்க ,

அப்பத்தான் அங்க வந்த குட்டி ஜெல்லி மீன் ஒன்னு ,நம்மளவிட இந்த உலகத்துல யாரும் புத்திசாலி கிடையாது அதனால நான் போயி எப்படியாவது குரங்கை ஏமாத்தி கடலுக்குள்ள கூட்டிகிட்டு வர்றேன் அப்ப நம்ம எல்லாரும் அத புடிச்சி அரசர் கிட்ட கூட்டிகிட்டு போகலாம்னு சொல்லுச்சு
இத கேட்ட ஜெல்லிமீன் கூட்டம் கடற்கரை பக்கம் போச்சுங்க ,அப்ப அங்க ஒரு குரங்கு கரத்துமேல இருந்து தேங்கா புடிங்கி தின்னுகிட்டு இருந்துச்சு ,அத பார்த்த குட்டி ஜெல்லிமீன் அத கூப்பிட்டுச்சு

இது என்ன ஒரு மீன் நம்மள கூப்புடுதுனு அங்க வந்த குரங்குக்கு அந்த மீன் பேசுறத பார்த்ததும் ஆச்சர்யமா போச்சு ,அப்ப அந்த மீன் வந்து சொல்லுச்சு குரங்காரே நான் இந்த கடலோட மந்திரி ,எங்க ராஜாவுக்கு இன்னைக்கு பொறந்தநாள் ,அதனால எல்லா மிருகங்களையும் கூப்பிட்டு விருந்து வைக்கிறாரு ,நீங்களும் அங்க வாரீங்களானு கேட்டுச்சு
இத கேட்ட குரங்கு அடடா நான் கடலுக்குள்ள வந்தா என்னால மூச்சு வாங்க முடியாதேன்னு சொல்லுச்சு ,அதுக்கு அந்த ஜெல்லி மீன் சொல்லுச்சு ,அடடா குரங்கரே எங்க அரசரோட அரண்மனை கடலுக்கு உள்ள இல்ல இங்க இருந்து கொஞ்ச தூரத்துல இருக்குற தீவுல இருக்கு அதனால நீங்க சுலபமா மூச்சு விடலாம் ஒன்னும் ஆகாதுன்னு சொல்லுச்சு

இத கேட்ட குரங்குக்கு ரொம்ப ஆவலா போச்சு ,எப்படினாலும் அந்த அரண்மனைக்கு போயி இன்னைக்கு அரசரோட விருந்துள கலந்துக்கிட்டு நல்லா சாப்பிட்டு வந்துடணும்னு முடிவு பண்ணுச்சு ,அப்பத்தான் அதுக்கு ஞாபகம் வந்துச்சு அடடா எனக்கு நீச்சல் கொஞ்சம் தானே தெரியும்னு
அத கேட்டதும் ஜெல்லி மீன்கள் சொல்லுச்சு பரவா இல்லை குரங்காரே எங்க கூட்டம் எல்லாம் வருஷயா இங்க நிக்குறோம் எங்க மேல ஏறி நடந்தே அரண்மனைக்கு போகலாம்னு சொல்லுச்சு ,இத கேட்டதுக்கு அப்புறம்தான் குரங்குக்கு லேசா சந்தேகம் வந்துச்சு

இவ்வளவு மெனெக்கெட்டு தன்னை கூப்பிட்டு தனக்கு விருந்து வைக்கணும்னு அந்த அரசருக்கு என்ன அவசியம்னு தோணுச்சு குரங்குக்கு ,அப்பத்தான் அந்த குரங்குக்கு அறிவு வேலை செஞ்சுச்சு
ஆமா கடல் அரசருக்கு என்னால எந்த பரிசும் கொண்டு வர முடியாது ,அவருக்கு என்னோட உயிர கூட கொடுக்க விரும்புறேன் அவர் என்ன முழுசா சாப்பிட்டா கூட எனக்கு கவலை இல்லைனு லேசா பேச்சு கொடுத்துச்சு குரங்கு
அப்ப அந்த ஜெல்லி மீன் சொல்லுச்சு குரங்காரே உங்கள போயி யாராவது சாப்பிடுவாங்களா ,உங்க ஈரல் மட்டும் போதும்னு உலர ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் குரங்குக்கு புரிஞ்சது அடடா நம்மள புடிச்சு நம்ம ஈரலை புடிங்கி திங்கதான் இந்த எல்லா ஜெல்லி மீனும் முயற்சி செஞ்சு நம்மகிட்ட பொய் மேல பொய் சொல்லிக்கிட்டு இருக்காங்கனு புரிஞ்சிகிடுச்சு

உடனே குரங்கு சொல்லுச்சு அடடா என்னோட ஈரல மரத்து பொந்துக்குள்ளே வச்சிட்டு வந்துட்டனே ,பரவா இல்லை என்னையே முழுசா அரசருக்கு கொடுக்குறேன் என்னோட ,இதயம் ,நுரையீரல் ,கிட்னி எல்லாத்தையும் அவரை எடுத்துக்க சொல்லுங்கன்னு சும்மா பேச்சுக்கு சொல்லுச்சு
ஆனா அந்த ஜெல்லி மீன் குரங்காரே ஈரல்தான் முக்கியம் அது இல்லாம எப்படினு சொல்லுச்சு ,அத கேட்ட குரங்குக்கு புரிஞ்சி போச்சு தன்னோட ஈரலை புடிங்கி திங்கிறதுக்குத்தான் இந்த நாடகம்னு ,நீங்க வேணும்னு கொஞ்ச பேறு எங்கூட பக்கத்துல இருக்குற என்னோட மரத்துக்கு வாங்கனு சொல்லி கூபிடுச்சு ,உடனே மூச்ச பிடிச்சிக்கிட்டு பத்து ஜெல்லி மீன் மட்டும் குரங்கோட இடத்துக்கு போச்சுங்க

மர்த்துக்கிட்ட வந்த உடனே குரங்கு ஒரு பெரிய குச்சியை எடுத்து அந்த ஜெல்லி மீன்களை அடிக்க ஆரம்பிச்சுச்சு ,அந்த அடியிலே ஜெல்லி மீன்களோட முதுகெலும்பும் எலும்புகளும் உடைஞ்சு போச்சு ,
தப்பிச்சு போனா போதும்னு மெதுவா நீந்தி கடலுக்கு திரும்பி போன ஜெல்லி மீன்கள் சொன்ன எல்லாத்தையும் கேட்ட அரசருக்கு கோபம்தான் வந்துச்சு ,உடனே தன்னோட ஆட்களை விட்டு இந்த ஜெல்லி மீன்களோட எலும்பு எல்லாத்தையும் வெளியில புடிங்கி போட சொன்னாரு

ஏற்கனவே உடைஞ்சு போயிருந்த ஜெல்லி மீன்களோட எழும்னு எல்லாம் பிடிங்கி வெளிய போட்டதும் ஜெல்லி மீன்கள் எல்லாமே எலும்பு எல்லாமே நெளிவு சுழிவோட ,கொல கொல னு ஆகிடுச்சுங்க ,அந்த நாள்ல இருந்து ஜெல்லி மீன்களுக்கு எலும்போ முள்ளோ இல்லாம போகிடுச்சு