தந்திர சிலந்தி vs பலசாலி முதலை – Modern Tamil Kids Moral Stories-Thirukural Kadhai-தந்திர சிலந்தியை முதலை எப்படி ஏமாற்றியது? How Did the Alligator Outsmart the Tricky Spider?:- ஒரு ஆப்பிரிக்க காட்டுக்குள்ள ஒரு மிக பெரிய முதலை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

அதுங்க பக்கத்துலயே பெரிய சிலந்தி கூட்டமும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த சிலந்திங்க கொஞ்சம் புத்திசாலியா இருந்ததால அந்த முதலை கூட்டத்துல இருக்குற எல்லா முதலைகளையும் பலசாலியா இருந்தாலும் புத்தி கூர்மையா பயன்படுத்தி அதுங்கள ஏமாத்தி ,கிண்டல் செஞ்சுக்கிட்டே இருந்துச்சுங்க

அப்பத்தான் ஒரு பெரிய முதலை அந்த காட்டு ஆத்துல நீந்திக்கிட்டு இருந்துச்சு ,அத பார்த்த ஒரு சிலந்திக்கு இந்த முதலய இன்னைக்கு கொஞ்சம் ஏமாத்தி விளையாடலாம்னு சொல்லுச்சு ,

உடனே அதுகிட்ட வந்த சிலந்தி முதலையாரே எனக்கு உங்க மேல சவாரி செய்யணும்னு ஆச என்ன உங்க முதுகுல ஏத்திக்கிட்டு போறீங்களானு கேட்டுச்சு

அதுக்கு அந்த முதலை கேட்டுச்சு அதனால எனக்கு என்ன லாபம்னு கேட்டுச்சு ,அந்த சிலந்தி சொல்லுச்சு என்னோட இடத்துல இன்னைக்கு ஒரு மிக பெரிய பெலாப்பழம் மரத்துல இருந்து தரையில விழுந்துச்சு ,அத யாருக்கும் தெரியமா இருக்கு அதுமேல என்னோட சிலந்தி வலய பின்னி மறைச்சு வச்சிருக்கேன் ,

நீங்க என்னோட இடத்துல இறக்கி விட்டீங்கனா ,அந்த பெலாப்பழத்த உங்களுக்கு காமிக்கிறேன் அத நீங்க முழுசா தின்னுகொங்கனு சொல்லுச்சு

அத கேட்ட முதலைக்கு ரொம்ப ஆச வந்துடுச்சு ,ரொம்ப நாளா பெலாப்பழம் சாப்பிடணும்னு நினைச்சுகிட்டு இருந்த முதலை சிலந்தியோட உண்மையான நோக்கம் தெரியாம அத தன்னோட முதுகுல ஏத்திக்கிட்டு ஆத்துல பயணம் போச்சு ,கொஞ்ச தூரம் போனதும் அங்க ஒரு சிலந்தி கூட்டம் நிக்கிறத பார்த்துச்சு முதலை ,இதுதான் நீ வசிக்கிற இடமானு கேட்டுச்சு அதுக்கு சிலந்திலும் ஆமான்னு சொல்லிட்டு ,என்ன இங்கேயே இறக்கி விட்டுடுங்கனு சொல்லுச்சு

அதுக்கு அந்த முதலை சொல்லுச்சு எனக்கு முதல்ல பெலாப்பழம் இருக்குற இடத்தை காட்டு அப்பத்தான் உன்ன கரையில இறக்கி விடுவேன்னு சொல்லுச்சு ,இத கேட்ட சிலந்தி உடனே பக்கத்துல இருக்குற செடிக்கு பக்கத்துல ஒரு பெலாப்பழம் இருக்குறத காமிச்சுச்சு

உடனே சிலந்தியை இறக்கிவிட்டு முதலை பெலாப்பழம் கிட்ட போச்சு ,அந்த பெலாப்பழம் சிலந்தி வலை புடிச்சு தூசியா இருந்துச்சு ,பெலாப்பழம் சாப்புடற ஆசையில அந்த பழத்தை அப்படியா முழுசா கடிச்சுச்சு முதலை ,கடிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது அது ஏதோ கெட்டுப்போன புளிக்கிற பழம் இனிக்குற பெலாப்பழம் இல்லைனு ,

முதலயோட வாய் எல்லாம் ரொம்ப புளிக்க ஆரம்பிச்சுடுச்சு ,தூணு துப்புன முதலாய பார்து அந்த இருக்குற எல்லா சிலந்திகளை முட்டாள் முதலைகளா ,பெலாப்பழம் வேணுமா உங்களுக்குனு கேட்டு சிரிச்சிச்சுங்க

இத பார்த்த முதலைக்க்கு ரொம்ப அசிங்கமா போச்சு ,தன்னை இந்த சிலந்தி ஏமாத்தி கூட்டிட்டு வந்து அசிங்க படுத்திடுச்சுனு கவலையோட அங்க இருந்து போய்டுச்சு

அப்புறம் ஒருநாள் அந்த காட்டுல மிக பெரிய வெள்ளம் வர ஆரம்பிச்சுச்சு அப்ப அங்க இருந்த முதலைங்க எல்லா ஆத்து வெள்ளத்துல நிலையா இருக்க முடியமா அங்குட்டும் இங்குட்டும் இழுத்துட்டு கிடந்துச்சுங்க

அப்ப அத பார்த்த சிலந்தி கூட்டம் அடடா முதலையாரே அங்க பாருங்க நாங்க உங்களுக்காக ஒரு பெரிய கயிறு பின்னி அங்க தொங்க விட்டு இருக்கோம் அத புடிச்சி கரைக்கு வந்துடுங்கா நாம எல்லாரும் தப்பிச்சிடலாம்னு சொல்லுச்சு அத நம்புனா முதலை மெதுவா கஷ்டப்பட்டு கயிறு இருக்குற இடத்துக்கு நீந்தி தன்னோட வாயால அந்த கயிற பிடிச்சு மெதுவா கரை ஏற பார்த்துச்சு

அப்பத்தான் அந்த கயிறு அறுந்து திரும்பவும் ஆத்துக்குள்ள தடால்னு விழுந்துச்சு முதலை ,

அப்பத்தான் அந்த முதலைக்கு புரிஞ்சது இது கயிறு இல்ல இந்த சிலந்திங்க கயிறு மாதிரி வலை பின்னி நம்மள ஏமாத்திருக்குங்கனு புரிஞ்சிகிடுச்சு ,அத பார்த்து எல்லா சிலந்திகளை சிரிக்க ஆரம்பிச்சதும் அந்த இடத்தை விட்டு வேகமா வேற இடத்தை பார்த்து போச்சு

மெதுவா கரையேறுனப்பத்தான் ஒரு குரங்கு அந்த முதலாய பார்த்துகிட்டு இருக்குறத பார்த்துச்சு ,என்ன குரங்காரே நான் கஷ்டப்பட்டு நீந்தி கரையேறுறேன் என்ன இப்படி வெடிக்க பார்த்துகிட்டு நிக்குறீங்களேன்னு கேட்டுச்சு

அதுக்கு அந்த குரங்கு சொல்லுச்சு ,நீ தான் இந்த இடத்துலயே மிக பெரிய மிருகம் உன்ன எல்லா சிலந்திகளை கிண்டல் செய்யுறதும் ,ஏமாத்துறதும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேனு சொல்லுச்சு

அத கேட்ட முதலை ஆமாம் குரங்காரே அந்த சிலந்திங்க ரொம்ப புத்திசாலியா இருக்குதுங்க அதுங்க எப்ப பார்த்தாலும் என்ன ஏமாத்திக்கிட்டே இருக்குதுங்க ,நீங்கதான் இந்த காட்டுலயே மிக மிக புத்திசாலியாச்சே நீங்க எனக்கு அந்த சிலந்திகளை தோக்கடிக்க உதவி செய்ய கூடாதான்னு கேட்டுச்சு

அத கேட்டு தன் பலம் அறியாதவன்னு உன்ன பத்திதான் திருவள்ளுவர் ஒரு பாட்டு பாடி இருக்காரு
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
தன்னோட வலிமையும் ,மாற்றானோட வலிமையும் புரிஞ்சிகிட்டு உன்னோட செயலை செஞ்சீனாதான் உனக்கு உபயோகமா இருக்குனு அதுக்கு பொருள் உனக்கு விளங்குச்சான்னு கேட்டாரு

இல்ல இந்த சிலந்திங்க கொஞ்சூண்டு மூலையை வச்சுக்கிட்டு உன்ன இந்த பாடு படுத்துதுங்களே , அதுகளுக்கு உன்ன மாதிரி உடல் பலமும் இருந்துச்சுன்னா என்ன ஆகும்னு யோசிச்சியானு கேட்டுச்சு
அதுக்கு அந்த முதலை சொல்லுச்சு அடடா அப்ப எனக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுடுங்களேன்னு வருத்தத்தோட சொல்லுச்சு ,அதுக்கு குரங்கு சொல்லுச்சு ,உனக்கு இருக்குறது உடல் வலிமை ,அதுங்களுக்கு இருக்குறது புத்தி ,நீ எப்ப பாத்தாலும் அதுங்களோட புத்திசாலி தனத்தை முறியடிக்கனும்னே முயற்சி செய்யுற ,அதுதான் தப்பு
உன்னோட முழு பலமும் உடல்ல இருக்கு அத ஒரு தடவ பயன்படுதுனு சொல்லுச்சு ,அத கெட்டப்புறம்தாம் முதலைக்கு ஒரு தெளிவு வந்துச்சு ,
மறுநாள் ஆத்தோரதுல நீந்திக்கிட்டு இருந்த முதலை மெதுவா சிலந்திங்க இருக்குற இடத்து பக்கம் வந்துச்சு ,அப்ப சிலந்திங்க என்ன முதலையாரே இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இருக்குனு கேட்டுச்சு

அதுக்கு அப்படியா ஒரு வேள என்னோட வால் ரொம்ப சந்தோசமா இருக்கும் போல இருங்க என் வால் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வால மேல தொக்கி தண்ணியில ஒரு அடி அடிச்சுச்சு ,தடால்னு சத்தோட விழுந்த அந்த அடியில தண்ணி எல்லாம் தெறிச்சு அங்க இருந்த சிலந்தி கூடு முழுசும் பிஞ்சி கீழ விழுந்துடுச்சு

இத எதையுமே எதிர்பார்க்காத சிலந்திங்க சில ஆத்துக்குள்ளயே விழுந்துடுச்சுங்க ,அப்பத்தான் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காம முதலாய சீண்டுனது தப்புனு புரிஞ்சிகிடுச்சுங்க

அதுல இருந்து முதலை இருக்குற பக்கமே போக பயந்துச்சுங்க சிலந்திங்க