முல்லா நஸ்ருதீன் நகைச்சுவை கதைகள் குழந்தைகளுக்கு: வேடிக்கையான நீதிக் கதைகள்:-முல்லா ஒருநாள் தன்னோட தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு ,

அப்ப அங்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் முல்லா உங்களுக்கு விஷயம் தெரியுமா ,நம்ம கிராமத்து தெருவுல இருக்குறவங்க எல்லாம் ஒண்ணா கூடி திருவிழா கொண்டாடுறத பத்தி பேச போறோம் ,அதுக்கு அப்புறமா எல்லாருக்கும் சூப் விருந்தும் இருக்குனு சொன்னாரு

அத கேட்ட முல்லா இருங்க நானும் வர்றேன்னு சொல்லிட்டு தோட்டத்து வேலைய அப்படியே போட்டுட்டு பக்கத்து வீட்டுக்காரர் கூட மெதுவா நடந்தே கூட்டம் நடக்குற இடத்துக்கு போனாரு

கூட்டத்துக்கு போகணும்ங்கிற ஆவல்ல தன்னோட உடைய கூட மாத்தாம அந்த கூட்டத்துக்கு போனாரு அவரு ,அவரோட சட்டையில் அப்பத்தான் தோட்டத்துல வேலை செஞ்சுட்டு வந்ததால வியர்வை வடையும் ,சேத்து அழுக்கும் இருந்துச்சு ,இத கவனிச்ச பக்கத்து வீட்டுக்காரர் முல்லா கிட்ட சொல்லலாம்னு நினைச்சாரு ,ஆனா அதுக்குள்ள எல்லாரும் இருக்குற கூட்டம் நடக்குற இடம் வந்துடுச்சு

முல்லா கூட்டத்துக்கு வந்திருக்கிறத பார்த்த எல்லாரும் அடடா இந்த ஆள் வந்தாலே எதாவது விஷமம் செய்வரெனு சந்தேக பட்டாங்க ,அப்ப அங்க இருந்த வியாபாரி அடடா முல்லா என்னது இது குளிக்காம வந்திருக்கீங்களானு கிண்டலா கேட்டாரு ,அத கேட்ட எல்லாரும் சத்தமா சிரிச்சிட்டாங்க ,

அப்பத்தான் கூட்டத்துக்கு வர்ற அவசரத்துல துணி கூட மாத்தாம கூட்டத்துக்கு வந்தத உணர்ந்தாரு ,தன்னை எல்லாரும் கிண்டல் செய்றாங்கன்னு புரிஞ்சிகிட்டு அங்க இருந்து மெதுவா வெளிய வந்தாரு , யார் யாருலாம் தன்னை பார்த்து சிரிச்சாங்கன்னு பார்த்து வச்சிக்கிட்டு வீட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சாரு அவரு

நேரா வீட்டுக்கு வந்த முல்லா நேரா தோட்டத்து பக்கம் போயி கிணத்துல இருந்து நிறய தண்ணி எடுத்து அழுக்குபோக குளிச்சாறு ,நேரா குடிசைக்குள்ள வந்த அவரு சந்தனமும் ஜவ்வாதும் எடுத்து பூசிக்கிட்டாரு ,

அப்புறமா பீரோவை தொறந்து அரசர் தனக்கு பரிசு கொடுத்த விலை உயர்ந்த சட்டையையும் வேட்டியையும் எடுத்து போட்டுக்கிட்டாரு ,விலையுயர்ந்த காலணிகளையும் அணிஞ்சுகிட்டு கூட்டம் நடக்குற இடத்துக்கு போனாரு

கூட்டம் இன்னும் கலையாம நடந்துகிட்டு இருந்துச்சு ,அப்ப உள்ள வந்த முல்லாவ பார்த்ததும் அரசரே வந்தது மாதிரி இருந்துச்சு ,எல்லாரும் முல்லாவோட உடையையும் தோரணையும் பார்த்து வியந்து போனாங்க ,அப்பதான் தன்னை பார்த்து சிரிச்ச பெரியவர்கிட்ட போயி உக்காந்தாரு முல்லா

கூட்டம் முடிஞ்சதும் எல்லாருக்கும் சூப் கொடுக்க ஆரம்பிச்சாங்க ,அப்ப அரசருக்கு சூப் கொடுக்குற வெள்ளி பாத்திரத்துல சூப் ஊத்து அவருக்கு கொடுத்தாங்க ,இத பார்த்த எல்லாரும் வியந்து போனாங்க ,

ஆனா முல்லா சூப் குடிக்காம எல்லாரையும் ஒருதடவ பார்த்தாரு ,அப்ப எல்லாரும் பாக்குற மாதிரி தன்னோட சட்டையை கழட்டி கீழ போட்டாரு அதுமேல தனக்கு கொடுத்த சூப்ப ஊத்துனாரு

அதைப்பார்த்த எல்லாரும் அலண்டு போனாங்க ,அடடா முல்லா நீங்க என்ன செய்யுறீங்கன்னு கேட்டாங்க ,அதுக்கு முல்லா சொன்னாரு ,நீங்க எனக்கு மரியாதையா கவுரவிக்கிற மாதிரி அரசருக்கு கொடுக்குற வெள்ளி பாத்திரத்துல சூப் கொடுத்தீங்க ,ஆனா அத எனக்கு கொடுக்கல ,என்னோட கவுரவத்தை உயர்த்தி காட்டுன என்னோட சட்டைக்குத்தான் கொடுத்தீங்க அதனால தான் அந்த சட்டையே அந்த கவுரவத்தை ஏத்துக்கிடட்டும்னு அதுக்கே கொடுத்துட்டேன்னு சொன்னாரு

அத கேட்ட எல்லாரும் தலை குனிஞ்சாங்க ,அடடா ஒரு மனுஷனோட உள்ளத்தையும் ,திறமையும் பாக்காம அவரோட வெளித்தோற்றத்தை பார்த்து சிரிச்சிட்டோமேன்னு எல்லாரும் வெட்கப்பட்டாங்க ,