The Gold Coin -Akbar Birbal Story in Tamil

The Gold Coin -Akbar Birbal Story in Tamil:-ஒரு ஊருல ஒரு சந்தை இருந்துச்சு ,அந்த சந்தைல நிறையபேர் வியாபாரம் செஞ்சுகிட்டு வந்தாங்க

அவுங்கள்ல ஒருத்தரு நெய்வியாபாரம் செஞ்சுகிட்டு வந்தாரு ,ஒருநாள் அவருக்கு பணம் தேவ பட்டுச்சு அதனால பக்கத்து நெய் கடைக்காரர் கிட்ட கடன் வாங்குனாரு

ரொம்ப நாள் ஆகியும் அந்த பணத்தை தராம இழுத்தடிச்சாரு ,இதனால ரொம்ப வருத்தப்பட்ட பக்கத்துக்கு நெய் கடை காரரு அக்பர் அரசவைக்கு வந்து தன்னோட பணத்தை வாங்கி தர சொன்னாரு

அங்க வந்த நெய் வியாபாரி தனக்கு அவர் பணம் கொடுக்க வே இல்லைனு சொன்னாரு

உடனே அக்பர் பீர்பால் கிட்ட இந்த பிரச்னையை ஒப்படைச்சாரு

நீங்க போய் உங்க வியாபாரத்தை கவனிங்க கொஞ்ச நாளுக்கு அப்புறமா உங்கள்ள யாரு பொய் சொல்றீங்கனு கண்டு பிடிக்கிறேன்னு சொல்லி அனுப்பிச்சாரு

ஒருநாள் சந்தைக்கு வந்து ஒரு அங்க இருந்த நெய் கடைகாரர்கள் எல்லாத்தையும் கூப்பிட்டாரு

எல்லார் கிட்டயும் ஒவ்வொரு நெய் டப்பாவ கொடுத்து ,இதுல அரண்மனைல இருக்குற பசு மாடுகளோட பால்ல செஞ்ச நெய் இருக்கு ,இதோட விலையை யாரு சரியா மதிப்பிடுறீங்கன்னு பாப்போம்னு சொன்னாரு

அப்படி சரியா மதிப்பிடுறவங்களுக்கு மிக பெரிய பரிசு காத்திருக்கு ,நாளைக்கு அரண்மனைக்கு வந்து வாங்கிக்கோங்கன்னு சொன்னாரு

அப்படி கொடுக்குறப்ப அக்பர் கிட்ட வந்த ரெண்டு வியாபாரிங்க கிட்ட மட்டும் நெய் டப்பாக்குள்ள ஒவ்வொரு தங்க நாணயத்த யாருக்கும் தெரியாம போட்டாரு

சில காவலாளிகளை மறுவேஷத்துல அவுங்கள கண்காணிக்கவும் உத்தரவு போட்டாரு

வீட்டுக்கு வந்த அந்த நல்ல நெய்வியாபாரி அதுல தங்கம் இருக்குறத பாத்ததும் உடனே அரண்மனைக்கு வந்து கொடுத்துட்டாரு

ஆனா அந்த கேட்ட நெய் வியாபாரி தன்னோட மகன் கிட்ட அந்த தங்க காச கொடுத்துட்டு பத்திரமா வைக்க சொன்னாரு

அவரு அந்த தங்க காச தன்னோட மகன் கிட்ட கொடுத்தத பக்கத்துல ஒளிஞ்சிருந்த காவல்காரர் பாத்துட்டு பீர்பால் கிட்ட வந்து சொல்லிட்டாரு

மறுநாள் அரண்மனைக்கு வந்தாரு அந்த கருமி நெய் வியாபாரி

உடனே பீர்பால் அவருகிட்ட இந்த நெய் டப்பாவுல இருந்த தங்க காசு எங்கன்னு கேட்டாரு

அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு இதுல நெய் தவிர வேற எதுவுமே இல்லைனு சொன்னாரு

இதக்கேட்ட பீர்பால் இவரோட மகனை கூட்டிட்டு வர சொன்னாரு ,அந்த பையன் வந்ததும் நேத்து நெய் டப்பாவுல இருந்து எடுத்த அஞ்சு தங்க காசுகள் எங்கன்னு கேட்டாரு

ஐயா அதுல ஒரு தங்க காசுதான் இருந்துச்சுனு சொன்னான் அந்த பையன்

அங்க இருந்த எல்லாரும் பீர்பால் எப்படி சமர்த்தியமா உண்மைய வரவச்சாருனு புகழ்ந்தாங்க

அதுக்கு அப்புறமா அவரை காவலாளிகள் பிடிச்சி ,அவரோட வீட்ட சோதன செஞ்சு நல்ல நெய் வியாபாரியோட காச திருப்பி கொடுத்தாங்க