Twig in the Thief’s Beard – திருடன் தாடியில் முடிச்சு – Bibral Tamil Stories

Twig in the Thief’s Beard – திருடன் தாடியில் முடிச்சு – Bibral Tamil Stories:- அக்பர் ஒருநாள் பீர்பாலை சோதிக்க நினைச்சாரு ,அதனால தன்னோட மோதிரத்தை ,அரசவையில இருக்குற ஒரு மந்திரி கிட்ட கொடுத்துட்டு பீர்பலுக்காக காத்திருந்தாரு

பீர்பால் வந்ததும் ,என்னோட மோதிரம் காணாம போச்சு ,குளிக்க போறதுக்கு முன்னாடி தான் கழட்டி வச்சேன் ,அப்ப அது இந்த அரண்மனையில இப்ப இருக்குற ஒருத்தர்கிட்டதான் இருக்குனு சொன்னாரு

இது என்னோட அப்பா எனக்கு கொடுத்த மோதிரம் ,இத எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்க பீர்பால்னு சொன்னாரு அக்பர்

அதுக்கு பீர்பால் கேட்டாரு நீங்க மோதிரத்தை கழட்டி எங்க வச்சீங்கனு கேட்டாரு ,அலமாரில வச்சேன்னு அக்பர் பதில் சொன்னாரு

உடனே அலமாரி கிட்ட போன பீர்பால் எல்லாரையும் பாத்துகிட்டே தன்னோட காத அலமாரி மேல வச்சு உன்னிப்பா கேட்டாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அரசே உங்க மோதிரத்தை திருடுனவன் தாடியில ஒரு முடிச்சி இருக்காம் அத இந்த அலமாரி பாத்துச்சாம்ன்னு சொன்னாரு

உடனே அக்பர் கிட்ட மோதிரத்த வாங்கியிருந்த மந்திரி தன்னோட தாடிய சரிசெஞ்சாரு

அத பார்த்த பீர்பால் நேர அவர்கிட்ட போயி மோதிரத்தை கொடுக்க சொன்னாரு

அதுக்கு அப்புறமா நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னாரு அந்த மந்திரி

எப்பயும் போல அக்பரோட திட்டம் இந்த தடவையும் பீர்பாலோட திறமையால ஒன்னும் இல்லாம போச்சு