The Fox And The Crab – நரியும் நண்டும் குழந்தைகள் கதை

The Fox And The Crab – நரியும் நண்டும் குழந்தைகள் கதை :- ஒரு பெரிய கடல்ல ஒரு நண்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ஒரு நாள் அந்த நண்டுக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு ,உடனே இந்த உலகத்தை சுத்திப்பார்க்க போறேன்னு சொல்லிட்டு தண்ணிக்கு வெளிய வந்துச்சு

வெளி உலக ரசிச்ச நண்டு கொஞ்ச தூரம் நடந்து பாக்கலாம்னு , புல்வெளியில நடக்க ஆரம்பிச்சுச்சு

அப்பத்தான் ஒரு நரி அந்த நண்ட பார்த்துச்சு , உடனே அந்த நண்ட பிடிச்சி திங்க நினச்சுச்சு அந்த நரி

ஆனா அந்த நண்டு ரொம்ப சுறுசுறுப்பா அங்குட்டும் இங்குட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சு , அதோட என்ன பிடி பாப்போம்னு சொல்லி அந்த நரியவே கோபப்பட வச்சுச்சு

ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த நண்டு ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த நரி சொல்லுச்சு ,இவ்வளவு நேரம் உன்ன ஆட விட்டது எதுக்கு தெரியுமா ,நீ இப்ப உன்னோட இடத்துல இல்ல ,அதனால உனக்கு நீ சாப்புடற உணவு இங்க கிடைக்காதுனு எனக்கு தெரியும் அதனால தான்

உணவு கிடைக்காம இப்ப நீ சோர்வாகிட்ட பார்த்தியா ,இப்ப என்கிட்ட இருந்து ஓடு பார்க்கலாம்னு சொல்லுச்சு நரி ,ஆனா ரொம்ப சோர்வான நண்டால நடக்க கூட முடியல

இப்ப அந்த நண்ட தின்னுச்சு நரி ,தேவையில்லாத இடத்துக்கு வந்து ,தேவையில்லாத வேலை செஞ்ச தனக்கு இது நல்ல தண்டனைத்தானு நினச்சுகிட்டே அந்த நரிக்கு உணவா மாறி செத்து போச்சு அந்த நண்டு