The Christmas Gift story – கிறிஸ்துமஸ் பரிசு :- ஒரு சின்ன கிராமத்துல டேனியல்னு ஒருத்தர் வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவருகிட்ட தங்கத்தால ஆன பரிசு பொருள் சுத்துற பேப்பர் கட்டு இருந்துச்சு, அது தங்கத்தால அதுனால அது ரொம்ப அழகா இருக்கும்

அந்த பேப்பர அவுங்க பாட்டி அவரு சின்ன வயசா இருக்கும்போது கொடுத்தாங்க ,அத ரொம்ப பத்திரமா வச்சிருந்தாரு டேனியல்

யாருக்கு பரிசு கொடுக்கிறதா இருந்தாலும் அந்த தங்க பேப்பர்ல தான் சுத்தி கொடுப்பாரு டேனியல்

கிறிஸ்துமஸ் விடுமுறை அப்ப ஒருநாள் அந்த தங்க பேப்பர் கொஞ்சம் காணாம போயிருந்தத பார்த்தாரு டேனியல்

உடனே தன்னோட மகளை கூப்பிட்டு என்னோட தங்க பரிசு பொருள் சுத்துற பேப்பர யார் எடுத்ததுனு கேட்டாரு அவரு

நான் தான் என்னக்கு முக்கியமான ஒருத்தருக்கு பரிசு கொடுக்க அந்த தங்க பேப்பர பயன்படுத்திகிட்டேனு சொல்லுச்சு அந்த பாப்பா

உடனே ரொம்ப கோபமான டேனியல் அவளை திட்டி அனுப்பிச்சிட்டாரு , அப்பத்தான் ஒரு பரிசு பொருள் கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில இருக்குறத பார்த்தாரு

அத பார்த்ததும் அவருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு அதனால அத பார்க்காமலேயே எடுத்து வேற பக்கம் வச்சுட்டாரு

கிறிஸ்துமஸ் அன்னைக்கு அந்த பரிசு பொருளை எடுத்து அவுங்க அப்பாகிட்டவே கொடுத்தா அந்த குட்டி பொண்ணு

அப்பத்தான் அந்த பரிசு பொருள் மேல அன்பான அப்பாவுக்குனு எழுதி இருக்குறத பார்த்தாரு டேனியல்

உடனே அந்த பரிசு பொருளை பிரிச்சி பார்க்க ஆரம்பிச்சாரு அவரு

அந்த உறைக்குள்ள ஒரு பெரிய பெட்டி இருந்துச்சு ,அந்த பெட்டிய ஆவலா திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சியா இருந்துச்சு

ஏன்னா அந்த பெட்டிக்குள்ள ஒண்ணுமே இல்ல ,இப்படி வெறும் பெட்டிய கொடுக்கவா என்னோட தங்க பேப்பரை வேஸ்ட் பண்ணுனனு சொல்லி திரும்பவும் திட்ட ஆரம்பிச்சாரு

அப்பதான் அந்த பாப்பா சொல்லுச்சு ,அது வெறும் பெட்டி இல்ல நான் அதுல நிறய முத்தம் கொடுத்து அத அப்படியே மூடி உங்களுக்கு பரிசா கொடுத்திருக்கேன்னு சொல்லுச்சு

அப்பத்தான் தன்னோட குட்டி பொண்ணு அவளோட பாசத்தை விலைமதிக்க முடியாத பரிசா தனக்கு கொடுத்திருக்கானு புரிச்சிக்கிட்டாரு

விலைமதிக்க முடியாத இந்த முத்த பெட்டிய இந்த தங்க பேப்பர் மட்டுமில்லாம உலகத்துல உள்ள விலை உயர்ந்த பேப்பர் எத வச்சு அலங்காரம் செஞ்சிருந்தாலும் இதுக்கு ஈடு இணை கிடையாதுன்னு புரிஞ்சிகிட்டாரு

உடனே தன்னோட மகள் கிட்ட மன்னிப்பு கேட்டாரு டேனியல் ,அதுக்கு அப்புறமா அவுங்க சிறப்ப கிறிஸ்துமஸ் கொண்டானுனாங்க