The Beggar and the Food Vendor – Mulla Tamil Font Stories,கோழி வாடை : முல்லா ஒருநாள் சாயந்தரம் சந்தைல நடந்து போய்கிட்டு இருந்தாரு

அப்ப அங்க இருந்த கோழி வறுத்து விக்கிற கடைகிட்ட ஏதோ சண்டை மாதிரி இருந்துச்சு ,என்னனு விசாரிக்க போன முல்லா அங்க அந்த கடைக்காரரும் ,ஒரு பிச்சை காரரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்குறத பார்த்தாரு ,அங்க இருந்த மத்த கடைகாரங்க எல்லாரும் இந்த சண்டையை விளக்கி விட முயற்சி செஞ்சாங்க.

இத பார்த்த முல்லாவுக்கு உற்சாகமாகிடுச்சு அடடா பொழுது போகலைனு நினைச்சோம் இன்னைக்கு இந்த சண்டையை வெடிக்க பார்த்து பொழுதை கழிச்சிடலாம்னு நினைச்சு அங்க இருந்த திண்ணையில உக்காந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு

அப்பத்தான் அங்க இருந்த எல்லாரும் இந்த சண்டையை விளக்கி விட முடியாது ,பேசாம பஞ்சாயத்து அதிகாரிய வர சொல்லி இங்கயே பஞ்சாயத்து பண்ணிடலாம்னு முடிவு செஞ்சாங்க ,நாடகம் பாக்குற மாதிரி இந்த் சண்டையை முல்லா படுத்திக்கிட்டே பார்க்க ஆரம்பிச்சாரு.

அங்க வந்த பஞ்சாயத்து அதிகாரி இங்க என்ன சண்டைனு கேட்டாரு ,அதுக்கு அந்த பிச்சைக்காரன் சொன்னான் ,ஐயா நானே பிச்சை எடுத்துதான் சப்புடறேன் இன்னைக்கு ஒருத்தர் ஒரு பெரிய கோதுமை ரொட்டியை பிச்சையா போட்டாரு

அத சாப்பிட்டுக்கிட்டே இந்த பக்கம் வந்தேன் ,இங்க இந்த ஆளு கோழிய வறுத்துகிட்டு இருந்தாரு ,அந்த வாடை எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது ,அந்த வாடைய பிடிச்சிகிட்டே என்னோட கோதுமை ரொட்டிய சாப்பிட ஆரம்பிச்சேன் ,எனக்கு கோழியை சாப்பிடறமாதிரி ஒரு திருப்தி இருந்துச்சு ,அத பார்த்துட்டு இந்த ஆளு என்னோட கோழியோட வாடைக்கு எனக்கு காசு கொடுன்னு சண்டை போடுறான்னு சொன்னாரு

இத கேட்ட அந்த கோழி கடைக்காரர் ,ஐயா கோழி என்னோடது ,அடுப்பு என்னோடது அதனால அந்த கோழியோட வாசனையும் என்னோடது ,எனக்கு இந்த பிச்சைக்காரன் பணம் தரணும் ,இல்லைனா என் கோழியோட வாசனையை திருப்பி கொடுக்க சொல்லுங்கன்னு சொன்னாரு

இத கேட்ட பஞ்சாயத்து தலைவர் இந்த விதண்டா வாதம் எப்பவும் முடிவுக்கு வராது , அந்த கோழி கடைக்காரர் கேக்குறதுல ஞாயமும் இருக்கு அநியாயமும் இருக்கு ,ஆனா அவரை நீங்க காசு கேக்க கூடாதுனும் சொல்ல முடியாது ,இப்ப இந்த பிரச்னையை எப்படி தீக்குறதுனு யோசிச்சாறு

அப்பதான் நல்லா படுத்துகிட்டு வெடிக்க பார்த்து ரசிச்ச முல்லாவ பார்த்தாரு , முல்லா நல்ல புத்திசாலி இருந்தாலும் குறும்புத்தனம் அதிகமா செய்ய கூடியவர் அவரை இந்த விசயத்துல இழுத்து விடலாம்னு முடிவு செஞ்சாரு

உடனே எல்லாருக்கும் கேக்குறமாதிரி ,இந்த மாதிரி பிரசனைகளை தீர்க்குறதுக்குனே நம்ம ஊருல இருக்குற புத்திசாலி நம்ம முல்லாதான் ,அவரை கூப்பிட்டு தீர்ப்பு சொல்ல சொல்லலாம்னு சொன்னாரு ,கூட்டத்துல இருந்த எல்லாரும் சரினு சொல்லிட்டு படுத்துகிட்டு இருந்த முல்லா கிட்ட போயி தீர்ப்பு சொல்ல சொன்னாங்க

அடடா பொழுது போகுதுனு சண்டைய வெடிக்க பார்த்துகிட்டு இருந்தா நம்மளையே பிரச்னையில் சிக்க வச்சுட்டாங்களேன்னு தயங்குன முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,உடனே அந்த கோழி கடைக்காரர் கிட்ட இவன் பிச்சைகாரன் அவனுக்கு பதிலா நான் காசு கொடுக்குறேனு சொன்னாரு

இத கேட்ட கூட்டத்துல இருந்த ஒருத்தர் சொன்னாரு இதுதான் முல்லாவோட அறிவா ,பிரச்னையை எப்படி முல்லா தீர்க்க போறாருனு ஆர்வமா பார்த்த எப்படி தப்பிக்கிறதுனு முல்லா பாடம் நடத்துறாருனு கிண்டலா சொன்னாரு ,உடனே அங்க இருந்தவங்க எல்லாம் சிரிச்சிட்டாங்க

இத எதையும் கண்டுக்காத முல்லா அந்த கோழி கடைக்காரர்கிட்ட வந்து தன்னோட பையில இருந்த காசு எல்லாத்தையும் எடுத்து அவன் காத்துக்கிட்ட போயி குலுக்குனாரு ,அப்ப காசோட சத்தம் கேட்டுச்சு

கோழியோட வாசனைக்கு ,காசோட சத்தம் சரியா போச்சுன்னு ,சொன்னாரு ,இத கேட்ட பஞ்சாயத்து தலைவரும் ,கூட இருந்தவர்களும் முல்லாவோட புத்திசாலிதனதால இந்த பிரச்சன தீர்ந்ததுனு திருப்தி பட்டாங்க
