The Bees & Wasps, & the Hornet – குளவி வண்டு தேனீ :- ஒரு அடர்ந்த காட்டு பகுதியில நிறைய மலை பெஞ்சது
அதனால அங்க வாழ்ந்துகிட்டு இருந்த பூச்சிகள் எல்லாம் பக்கத்து காட்டுக்கு போச்சுங்க

அப்படி போகுறப்ப வண்டு கூட்டமும் தேனீ கூட்டமும் ஒரு பெரிய தேன் கூட்டை பார்த்துச்சுங்க
அதுல நிறய தேன் இருந்துச்சு ஆனா வேற பூச்சி எதுவுமே அங்க இல்ல
அதனால அந்த பெரிய தேன் கூடு தங்களுக்குத்தான் சொந்தம்னு வண்டு கூட்டமும் தேனீ கூட்டமும் சண்டை போட்டாங்க

அப்பதான் குளவி அரசன் அங்க வந்தாரு ,இந்த தேன் கூடு யாருக்கு வேணுமோ அவுங்க இதேமாதிரி சின்ன கூட்ட கட்டுங்க அதுல யாரு ஜெயிக்குறாங்களோ அவுங்களுக்கு இந்த பெரிய கூடு பரிசா கொடுக்கப்படும்னு சொன்னாரு

உடனே தேனீ கூட்டம் அதே மாதிரி குட்டி தேன் கூட்ட சுலபமா கட்டி போட்டியில ஜெயிச்சிடுச்சுங்க
அதனால அந்த பெரிய தேன் கூட்ட தேனீ கூட்டத்துக்கு பரிசா கொடுத்துட்டாரு குளவிகள் அரசன்
நீதி : திறமை உடைய செயலை செய்தால் வெற்றி நிச்சயம்