The Ant and The Dove – புறாவும் எறும்பும் குட்டி கதை

புறாவும் எறும்பும்
ஒரு காலத்துல ஒரு காட்டு பகுதியில் ஒரு எறும்பு நடந்து போய்கிட்டு இருந்துச்சு
ரொம்ப நேரம் நடந்ததால் அந்த எறும்புக்கு தண்ணி தவிச்சுச்சு
காட்டு பகுதியில் தண்ணி தேடி அலைஞ்ச அந்த எறும்பு கடைசியா ஒரு ஆத்த பாத்துச்சு
உடனே ஆவளோட தண்ணி குடிக்க இறங்குன அந்த எறும்பு தண்ணி குடிக்க முயற்சி பன்னுச்சு
அப்போ திடீர்னு கால் தவரி தண்ணிகுள்ள விழுந்துச்சு
காப்பாத்துங்க காப்பாத்துங்கன கத்துன அந்த எறும்பு கத்துனது யாருக்குமே கேக்கல
தண்ணியோட வேகம் அதிகமா இருந்ததனால அந்த ஆத்தோடயே அந்த எறும்பு இழுத்துட்டுப்பே ஈச்சு
கொஞ்ச தூரத்துல இருந்த இதப்பாத்த ஒரு புறா அடடா ஒரு எறும்பு தண்ணியில தவிச்சு கிட்டு
இருக்கேனு பாத்துச்சு
புத்திசாலியான அந்த புறா உடனே ஒரு இலைய பிடுங்கி அந்த எறும்புக்கு பக்கத்துல போட்டுச்சு உடனே சுதாரிச்ச அந்த எறும்பு அந்த இலைய பிடிச்சு அது மேல ஏறி உக்காந்துச்சு
அப்பாட நாம தப்பிச்சோம்னு நினைச்ச அந்த எறும்பு அந்த புறாவுக்கு கை காட்டி தன்னோட
நன்றிய தெரிவிச்சது
சில நாட்களுக்கு பிறகு ஒரு நாள் அந்த எறும்பு காட்டு வழியா நடந்து போறப்ப ஒரு வேடன பாத் துச்சு
அந்த வேடன் மரத்து மேல உக்காந்து இருந்த அந்த புத்திசாலி புறாவ கொள்ரதுக்கு வில்ல வ-ை
லச்சு குறிபாத்துகிட்டு இருந்தான்
அடடா நம்மள காப்பாத்துன புறாவுக்கு இப்போ ஆபத்து வந்துருக்கு இத உடனே தடுக்கனும்னு நினைச்சுச்சு
உடனே வேகமா அந்த வேடன் கால் மேல ஏறி பலமா கடிச்சுச்சு
அப்பத்தான் அம்பு எய்ரதுக்கு குறிபாத்திருந்த வேடன் வலிதாங்காம டக்குனு அந்த வில்ல விட்டான்
உடனே திசை மாரிப்போன அந்த அம்பு புறாவுக்கு பக்கத்துல போயி விழுந்துச்சு
அடடா நம்மள காப்பாத்துனது யாருனு பாத்துச்சு ஆகா நம்ம நன்பன் எறும்பு தான் நம்மள காப்பாத்துனதானு பாத்து அந்த எறும்பு நன்றி
சொல்லுச்சு
அதுக்கு அப்புறமா அந்த எறும்பும் புறாவும் ரொம்ப நல்ல நன்பர்களா வாழ்ந்து வந்தாங்க
குழந்தைகளா இந்த கதையில் நாம் என்ன தெரிஞ்சுகிட்டோம்னா நீங்க நன்மை செஞ்சிங்கன்னா உங்களுக்கு நல்லதே நடக்கும்