Short Story About Christmas With Moral Lesson- கிறிஸ்துமஸ் பரிசு :- ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறை அன்னைக்கு தாமஸ் நல்லா தூங்கிட்டு இருந்தான்
அப்ப ஜன்னல் கதவை யாரோ தட்டுற மாதிரி சத்தம் கேட்டுச்சு அவனுக்கு
முழிச்சு பார்த்த தாமசுக்கு ஒரே ஆச்சர்யம் அங்க அவன மாதிரியே ஒரு தேவ தூதன் போல ஒரு பையன் நின்னுகிட்டு இருந்தான்
நான் இந்த ஊருல இருக்குற எல்லாருக்கும் கிறிஸ்த்துமஸ் பரிசு கொடுக்க வந்திருக்கேன், என் கூட வந்து வழிகாட்டி எனக்கு உதவி செய்ய முடியுமான்னு கேட்டான் அந்த மந்திர பையன்
உடனே தாமசுக்கு ரொம்ப ஆர்வமா போச்சு ,உடனே தன்னோட தொப்பி ஸ்வட்டர் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு ஜன்னல் வழிய வெளிய வந்தான்
அங்க அந்த மந்திர பையன் ஒரு வண்டி நிறய பரிசு பொருள் வச்சுக்கிட்டு நின்னான் ,தாமஸை பார்த்ததும் பின்னாடி வந்து அந்த வண்டிய தள்ள சொன்னான்
உடனே தாமசும் வண்டிய ரொம்ப கஷ்டப்பட்டு தள்ள ஆரம்பிச்சான்,அப்பத்தான் அந்த மந்திர பையன் கேட்டான் உங்க தெருவுல யாரு யாருக்கு என்ன என்ன எல்லாம் பரிசு கொடுக்கலாம்னு
அப்பா தாமஸ் சொன்னான் இங்க ஒரு மாமா இருக்காரு அவரு ரொம்ப கஷ்ட பட்டு வேலை செய்யுறவரு அவருக்கு நிறய பழங்களை பரிசா கொடுக்கலாம்னு சொன்னான்
உடனே ஒரு கூடை நிறய பழங்களை எடுத்து கொடுத்து நீயே கொண்டுபோய் அவரு வீட்டு முன்னாடி வச்சிட்டு வானு சொன்னான் அந்த மந்திர பையன், தாமசும் அந்த பழ கூடையை அந்த மாமா வீட்டு முன்னாடி கொண்டுபோய் வச்சிட்டு வந்தான்
அடுத்ததா இங்க ஒரு பாட்டி இருக்காங்க ,அவுங்களுக்கு சொந்த காரங்களே இல்ல அதனால் மருந்து களும் கொஞ்சம் சாப்பிடற பொருளும் கொடுக்கலாம்னு சொன்னான் , உடனே அந்த மந்திர பையனும் ஒரு கூடையில் அவன் கேட்டத எல்லாம் எடுத்து கொடுத்தான்
அந்த பாட்டி வீட்டு வாசலுக்கு போன தாமஸ் அந்த பரிசு கூடையை வச்சிட்டு திரும்ப வந்தான் ,அன்னைக்கு முழுசும் யார் யாருக்கு எல்லாம் தாமஸ் பரிசு கொடுக்கணும்னு சொன்னானோ அவுங்களுக்கு எல்லாம் பரிசு கொடுத்துட்டு திரும்ப வந்து படுத்து தூங்கிட்டான்
மறுநாள் காலையில எழுந்திரிச்ச தாமஸ் நேத்து ராத்திரி நடந்ததை அவுங்க அம்மா கிட்ட சொன்னான் , அதுக்கு அவுங்க அம்மா சொன்னாங்க நம்ம வீட்டு ஜன்னலைதான் திறக்கவே முடியாதே நீ எப்படி வெளியில போனனு கேட்டாங்க
தாமசுக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு ,அப்பத்தான் அவுங்க அம்மா சொன்னாங்க அது உன்னோட கனவா இருக்கலாம் , இருந்தாலும் நீ பரிசு கொடுக்கணும்னு விருப்ப பட்ட எல்லாரும் ரொம்ப நல்லவங்க ,அதனாலதான் உன்னோட ஆழ்மனசு அவுங்களுக்கு பரிசு கொடுக்குற மாதிரி கனவுல வந்திருக்கு
அதனால நீ கொடுக்கணும்னு விருப்ப பட்ட எல்லாத்தையும் நான் வாங்கி தாரேன் நீ கொண்டுபோய் நிஜமாவே அவுங்கள பார்த்து கொடுத்துட்டு வானு சொன்னாங்க
ரொம்ப சந்தோஷமான தாமஸ் , அந்த கஷ்டப்படுற மாமா வீட்டுக்கு போய் பழ கூடைய கொடுத்தான் ,அவருக்கு ரொம்ப சந்தோசமா போச்சு ,தாமசுக்கு ரொம்ப நன்றி சொன்னாரு அந்த மாமா
அடுத்ததா அந்த பாட்டி வீட்டுக்கு போன தாமஸ் ,தன்னோட அம்மா கொடுத்துவிட்ட பலகாரங்களையும் மருந்து பொருட்களையும் அவுங்களுக்கு கொடுத்தான்
தனிமையில இருக்குற அந்த பாட்டிக்கு ரொம்ப சந்தோசம் வந்துடுச்சு ,அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த தாமசை அவனோட அம்மாவும் அப்பாவும் மந்திர பையன்னு கூப்பிட்டாங்க
என்ன ஏன் மந்திர பையன்னு கூப்புடுறீங்கன்னு கேட்டான் தாமஸ் ,நீ கனவுல பார்த்த அந்த மந்திர பையன்தான் உன்னோட நல்ல குணங்கள் , அந்த குணங்கள் உன்கிட்ட சொல்ல வேண்டியத எல்லாம் எப்பவும் இந்த மாதிரி கனவு அல்லது நினைப்பு மூலமா சொல்லும் ,அதனால நீ தான் அந்த மந்திர பையன் ,
நீ தொடர்ந்து நல்ல எண்ணங்களை வளர்த்துக்கிட்டே வந்தனா உன்னோட குணங்களும் வளரும் ,நீ தொடர்ந்து நல்லது செய்ய ஆரம்பிச்சுடுவ அதனால உனக்கு நல்லதே நடக்கும்னு சொன்னாங்க