அழகிய மயில் – Peacock and the crane story

அழகிய மயில் – Peacock and the crane story:-ஒரு காட்டுல ஒரு மயில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அழகிய மயில் - Peacock and the crane story

அந்த மயிலுக்கு அழகான தோகை இருந்ததால அதுக்கு அதிக கர்வம் இருந்துச்சு ,அதனால எல்லா பறவைகள் கிட்டயும் போய் தன்னோட தோகையோட அழக பத்தி கர்வமா பேசிக்கிட்டே இருக்கும் அந்த மயில்.

அழகிய மயில் - Peacock and the crane story

ஒருநாள் காட்டுல ஒரு நாரய பாத்துச்சு ,அந்த நாரைகிட்ட போன மயில் ,என்ன? உன் தோகை வெறும் வெள்ளை நிறத்துல மட்டும் இருக்கு ,எனக்கு பாரு எவ்வளவு அழகான நிறத்துல தோகை இருக்குனு சொல்லி வம்பிழுத்தது மயில்

அழகிய மயில் - Peacock and the crane story

அப்ப அங்க வந்த வேடன் ஒருத்தன் தன்னோட வில்ல எடுத்து அம்பு விட ஆரம்பிச்சான் ,

இத பாத்த மயிலும் நாரையும் வானத்துல பறக்க ஆரம்பிச்சதுங்க ,நாரை வேகமா பறந்து போய்டுச்சு ,ஆனா கனமான நீண்ட தோகை வச்சிருந்த மயிலால வேகமா பறக்க முடியல

அழகிய மயில் - Peacock and the crane story

அப்ப வேடன் விட்ட அம்பு அதோட உடம்புல பட்டுடுச்சு,இத பாத்த நாரை சொல்லுச்சு ,ஒவ்வொரு பறவைக்கும் தேவையானத கடவுள் கொடுத்திருக்காரு.

உன்னோட அழகான தோகை உனக்கு அழகு வேணா கொடுக்கலாம் ஆனா உன்னால என்ன மாதிரி பறக்க முடிஞ்சுச்சா,உன்னோட தப்ப திருத்திக்கிற நேரத்தை நீ எப்பவோ தாண்டிட்டனு சொல்லிட்டு பறந்து போய்டுச்சு

அழகிய மயில் - Peacock and the crane story

அதுக்குள்ள அங்க வந்த வேடன் மயில கூண்டுல அடைச்சிட்டான் , மத்த பறவைகளை கிண்டல் பண்ணி வாழ்ந்த இந்த வாழ்க்கையை நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த மயில்