Mulla Takes Sides , முல்லா கேட்ட சண்டை கதை

Mulla Takes Sides , முல்லா கேட்ட சண்டை கதை :- முல்லா வாழ்ந்துகிட்டு வந்த கிராமத்துல ரெண்டு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க

Introduction to the Village and the Two Friends

அவுங்க எப்பவும் ஒற்றுமையா இருப்பாங்க , அவுங்களுக்குள்ள எப்பவுமே சண்டை வராதுன்னு எல்லாரும் பேசிக்கிடற அளவுக்கு ரொம்ப நட்பா இருந்தாங்க

The Friends' Unity

ஒருநாள் அவுங்க ரெண்டு பேரும் ஒரு ஆத்து மேல பாலம் மாதிரி இருந்த தென்னைமரத்து மேல நடந்து ஆத்த கடந்துக்கிட்டு இருந்தாங்க ,அப்ப ரெண்டு பேரும் தடுமாறுனாங்க ஒருத்தரோட கைய ஒருத்தர் பிடிக்க முயற்சி செய்யும் போது பிடிக்க முடியாம ஆத்துல விழுந்துட்டாங்க

Crossing the River on the Coconut Tree Bridge

முழுதா ஆத்து தண்ணியில நனைஞ்ச அவுங்க ரெண்டுபேரும் நீச்சல் அடிச்சி கரைக்கு வந்தாங்க அப்ப ஒரு நண்பர் சொன்னாரு நான் விழுங்கும்போது நீ ஏன் என்ன பிடிக்கலைனு கேட்டாரு ,அதுக்கு இன்னொருத்தர் கேட்டாரு நீ ஏன் என் கைய பிடிக்கல அதனால தான் நான் தண்ணியில விழுந்தேனு சொன்னாரு

Falling into the River and Swimming to Shore

இத கேட்ட ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் குறை சொல்ல ஆரம்பிச்சாங்க ,அப்ப அங்க வந்த மத்த நண்பர்கள் சொன்னாங்க ,நீங்க ரெண்டுபேரும் சிறந்த நண்பர்கள் ,சண்ட போடாம பிரச்னைய தீக்கணும்னு நீங்க முல்லா கிட்ட போயி நடந்தத சொல்லுங்கன்னு சொன்னாங்க

Starting to Argue and Advice from Other Friends

நேரா முல்லா கிட்ட போனதும் அவுங்க ரெண்டு பேர் சொல்றதையும் தனி தனியா விசாரிச்சார் முல்லா கூட பஞ்சாயத்து தலைவர் மட்டும் முல்லா கூட இருந்தாரு

Going to Mulla for Inquiry

முதல்ல ஒரு நண்பர் வந்த அவன நான் ரொம்ப நம்புனேன் அவன் என் கைய பிடிக்காம விட்டுட்டானு சொன்னாரு ,இத கேட்ட முல்லா நீங்க சொல்றதுதான் உண்மை ,நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க , அவர மன்னிச்சி விட்டுடுங்கனு சொன்னாரு

First Friend's Complaint to Mulla

அடுத்த நான்பார் வந்து பேசுறப்பவும் முல்லா நீங்க சொல்றதுதான் உண்மை ,நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க , அவர மன்னிச்சி விட்டுடுங்கனு சொன்னாரு , இத கேட்ட பஞ்சாயத்து தலைவர் சொன்னாரு அது எப்படி முல்லா ரெண்டுபேரு சொல்றதும் உண்மையா இருக்கும்னு கேட்டாரு ,

Second Friend's Complaint and Panchayat Leader's Question

அதுக்கு முல்லா சொன்னாரு நீங்க சொல்றதுதான் உண்மை ,நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்கனு ,இத கேட்ட பஞ்சாயத்து தலைவர் சொன்னாரு என்ன முல்லா ரெண்டுபேரு கிட்டயும் இப்படி பச்சோந்து மாதிரி நடந்துக்கிறீங்க எப்படி ஞாயம் சொல்ல போறீங்கன்னு கேட்டாரு

Mulla's Response to the Panchayat Leader and Leader's Further Question

அதுக்கு முல்லா சொன்னாரு இது ஒரு சின்ன விஷயம் ,எவ்வளவோ சண்டைகளை தாண்டி இவுங்க நண்பர்களா இருக்காங்க ,அவுங்களோட சின்ன சண்டைய பலூன் மாதிரி பெருசா ஊதி ,அத உடைக்க நான் விரும்பலைன்னு சொன்னாரு ,

Mulla's Explanation

ரெண்டுபேரும் பேசிக்கிட்டே வெளிய வந்து பார்த்தா ,அந்த ரெண்டு நண்பர்களும் தங்களோட சண்டைய மறந்து தோள்ல கை போட்டுக்கிட்டு நடந்து போனாங்க ,அப்பதான் முல்லா சொன்னது சரினு பஞ்சாயத்து தலைவருக்கு புரிஞ்சிச்சு

Resolution Outside the Hut