Mulla Payment in Kind – கழுதை கடி முல்லா கதை :- முல்லா ஒருநாள் வீட்டுல படுத்து தூக்கிகிட்டு இருந்தாரு ,அப்ப யாரோ கதவ தட்டுற சத்தம் கேட்டுச்சு

உடனே எழுந்த முல்லா யார் கதவை தட்டுனதுனு பார்த்தாரு ,அங்க பக்கத்து வீட்டுக்காரரை கோபமா நின்னுகிட்டு இருந்தாரு

அவருகிட்ட என்ன ஆச்சு எதுக்கு இப்படி கோபமா இருக்கீங்கன்னு கேட்டாரு முல்லா ,அதுக்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு ,எல்லாம் உங்க கழுதையால வந்தது ,இன்னைக்கு காலையில சமையல் வேலை செஞ்சுகிட்டு இருந்த என்னோட பொண்டாட்டிய கழுதை கடிச்சு வச்சிடுச்சுனு சொன்னாரு

இத கேட்ட முல்லாவுக்கு அதிர்ச்சியா போச்சு , அடடா இது என்ன புது பிரச்சனைன்னு யோசிச்சாறு உடனே இதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு யோசிச்சாரு அப்பதான் அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நாளைக்கு என்னோட கழுதை சமையல் வேலை செய்யும்போது உங்க பொண்டாட்டிய வந்து என் கழுதைய கடிச்சிகிட சொல்லுங்க எனக்கு ஒரு பிரச்னையும் கிடையாதுன்னு சொன்னாரு

இத கேட்ட அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு இன்னும் கோபம் வந்துச்சு ,இருந்தாலும் இதுக்குமேல முல்லா கிட்ட வாதாடி ஜெயிக்க முடியாதுனு தெரிஞ்ச அவரு சோகமா வீட்டுக்கு போயி நடந்தத தன்னோட மனைவி கிட்ட சொன்னாரு

உடனே கோபப்பட்ட அந்த அம்மா சொன்னாங்க ,அப்படியா சொன்னாரு அந்த ஆளு ,நீங்க போயி அதுக்கு நான் ரெடின்னு சொல்லுங்க ,இன்னைக்கு சாயந்தரம் வந்து அந்த கழுதைய நான் கடிக்கிறேன் ,கழுதைக்கு என்ன ஆனாலும் என்ன கேக்க கூடாதுனும் சொல்லிட்டு வாங்கனு சொன்னாரு

இதே வேகமா முல்லாவோட வாசலுக்கு வந்து சத்தம் போட்டு சொன்னாரு அந்த கணவர் ,இத கேட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் அடடா இன்னைக்கு ஒரு நாடகம் நடக்க போகுது போல ,முல்லா எப்படி தன்னோட கழுதையை மனுஷ கடியில இருந்து காப்பாத்த போறாருனு ஆவலோடு காத்து இருந்தாங்க

சாயந்தரம் ஆனதும் அந்த கணவரும் மனைவியும் அங்க வந்தாங்க ,கூட்டம் ஆர்வதோட பார்த்துகிட்டு இருந்துச்சு ,உடனே வெளியில வந்த முல்லா எல்லாம் தயாரானு கேட்டாரு ,அந்த அம்மா நான் தாயாருனு சொல்லுச்சு

உள்ள பொய் கழுதையை பார்த்துட்டு அத வெளிய இழுத்துகிட்டு வந்த முல்லா ,உங்க பொண்டாட்டி சமையல் வேலை செய்யும் போது தான கடிச்சிச்சு ,அதே மாதிரி இந்த சோம்பேறி கழுதை இன்னும் கொஞ்ச நேரத்துல சமையல் செய்ய ஆரம்பிச்சிடும் ,அப்ப இத கடிங்கனு சொன்னாரு

அதோட ஒரு அடுப்பையும் , விறகையும் ,சில பாத்திரங்களையும் கழுதைக்கு முன்னாடி வந்து வச்சாரு ,இத பார்த்த கூட்டத்துல இருந்த எல்லாரும் சொன்னாங்க அந்த முல்லா வழக்கம்போல தன்னோட வாத திறமையால தன்னோட கழுதைய காப்பாத்திட்டாருனு
