Mulla and the Ocean – கடலில் முல்லா – சிறுவர்மலர் கதை :- முல்லா ஒருநாள் வீட்டுல படுத்துகிட்டு இருக்கிறப்ப ஒரு விஷயம் அவரோட ஞாபகத்துக்கு வந்துச்சு

நாம பொறந்து இத்தன வருஷம் ஆச்சு இன்னும் நாம கடல நேர்ல பாக்கலையேன்னு யோசிச்சாறு ,இந்த வருஷம் அறுவடை முடிஞ்சதும் அந்த பணத்தை எடுத்துக்கிட்டு கடற்கரை இருக்குற ஊருக்கு போயி சுத்தி பாத்துட்டு வரணும்னு முடிவு செஞ்சாரு

உடனே அதுக்கான பயண செலவுக்கு ஒரு உண்டியல்ல பணமும் சேர்க்க ஆரம்பிச்சாரு ,அந்த வருஷம் அறுவடை முடிஞ்சதும் அந்த உண்டியல திறந்து பார்த்தாரு நிறய பணம் சேர்ந்து இருந்துச்சு

சந்தோசமான முல்லா தன்னோட நண்பரையும் கூட்டிகிட்டு கடல் இருக்குற ஊருக்கு போனாரு ,அங்க போய் கடல பார்த்ததும் முல்லாவுக்கு ரொம்ப சந்தோசமா ஆகிட்டாரு ,குடு குடுன்னு ஓடிப்போய் கடல்ல கால் நனைச்சாரு முல்லா

ரொம்ப சந்தோசமான முல்லா கொஞ்சம் தண்ணிய எடுத்து குடிச்சாரு ,ரொம்ப உப்பு கச்சதும் அந்த தண்ணிய துப்புன முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,தான் வச்சிருந்த குடிக்கிற தண்ணி பாட்டில்ல இருந்து கொஞ்சம் தண்ணிய கடல்ல ஊத்துனாரு

இத இல்லாம கடற்கரையில இருந்து பார்த்துகிட்டு இருந்த முல்லாவோட நண்பர் கேட்டாரு ,என்ன முல்லா நல்ல தண்ணி ஊத்தி இவ்வளவு பெரிய உப்பு கடலை நல்ல தண்ணியா மாத்திட முடியும்னு நம்புறீங்களானு கேட்டாரு

அதுக்கு சிரிச்சிகிட்டே முல்லா சொன்னாரு ,அப்படி இல்ல நல்ல தண்ணியோட சுவை என்னானு இந்த கடல் தெரிஞ்சிக்கிடனும்ல,அதுக்குதான் கொஞ்சம் நல்ல தண்ணிய அதுக்கு கொடுத்தேன்னு சொன்னாரு

முல்லா தொடர்ந்து சொன்னாரு சிறு துளி பெரு வெள்ளம்னு கேள்வி பட்டு இருக்கீங்களா ,அது சிறு துளி உப்பு நீர் எல்லாம் ஒண்ணா சேர்ந்து இந்த கடல் உப்பா இருக்கு ,ஒருநாள் சிறு சிறு துளிகளான நல்ல தண்ணி எல்லாம் ஒண்ணா சேர்ந்து ,கடல் முழுசும் நல்ல தண்ணியா மாறும் போது நான் கொடுத்த இந்த சிறு துளியும் உதவும்லன்னு சொன்னாரு

இத கேட்ட நண்பர் முல்லாவோட தொலைநோக்கு சிந்தனையை பார்த்து வியந்தாரு

நல்ல பண்புகள், நம்பிக்கையை மீக எளிமையாக கூறும் வகையில் அமையப் பெற்ற கதை முட்டாள்தனமாக தோன்றினாலும் அது மைய பொருள் பண்பையும் நம்பிக்கை வலியுறுத்தி உள்ளது
சிந்தனையை தூண்டும் கதைகள்.
எவ்வளவு மழை பொழிந்தாலும் கடல் நீர் நல்ல நீராக மாறாது காரணம் நீர் ஆவியாக செல்லும் போது அதன் உப்புக்களை விட்டுட்டு நல்ல நீர் மட்டுமே ஆவியாக மாறுகிறது
எவ்வளவு மழை பொழிந்தாலும் கடல் நீர் நல்ல நீராக மாறாது காரணம் நீர் ஆவியாக செல்லும் போது அதன் உப்புக்களை விட்டுட்டு நல்ல நீர் மட்டுமே ஆவியாக மாறுகிறது