Mulla and the Mischievous Mutt! 🐶 முல்லாவும் குறும்பு நாயும்! :-முல்லா ஒரு நாள் பக்கத்து ஊரு திருவிழாக்கு போயிட்டு ராத்திரி ரொம்ப லேட்டா தன்னோட வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தாரு

அப்பத்தான் பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கிற ஒரு சேட்டைக்கார நாய் அவரை கடிச்சிருச்சு, மறுநாள் காலையில அந்த நாய் வளர்க்கிறவர் கிட்ட போயி சண்டை போட்டாரு முல்லா

என்னப்பா நாய் வளர்க்கற இத்தனை வருஷமா நான் இதே தெருவுலதான் வாழ்ந்துகிட்டு வரேன் என்ன கூட அதற்கு அடையாளம் தெரியாம ராத்திரி நேரத்துல என்ன கடிச்சிருச்சு தயவு செஞ்சு இந்த நாய வேற எங்கேயாவது கொண்டு போய் விட்டுரு அப்படின்னு முல்லா சொன்னாரு

அதுக்கு அந்த வீட்டுக்காரர் சொன்னாரு அய்யய்யோ என்னோட நாய்க்குட்டி ரொம்ப நல்ல நாய் குட்டி இங்க பாருங்க நான் சொன்னா அது எது வேணாலும் செய்யும் அப்படின்னு சொல்லிட்டு ஏய் நாய்க்குட்டி இங்க வா அப்படின்னு கூப்பிட்டாரு உடனே அந்த நாய் நல்ல புள்ள மாதிரி வந்து அவர் பக்கத்தில வந்து உக்காந்து கிடுச்சு .

இதே மாதிரி நீங்களும் கூப்பிடுங்க நாய் நல்லபடியா உங்க கிட்ட நடந்துக்கும் அப்படின்னு சொன்னாரு அந்த வியாபாரி ஏற்கனவே நாய் கிட்ட கடிபட்ட முல்லா இத கோபத்தோட பாத்துட்டு இருந்தாரு

தொடர்ந்து அந்த வியாபாரி முல்லா பேசாம ஒன்னு செய்யுங்க என் நாய் பார்க்கறப்ப எல்லாம் ஒரு பிரட் குடுங்க என்னோட நாய் உங்க கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சுடும் அதுக்கப்புறம் உங்களுக்கு எந்த தொந்தரவு இருக்காது அப்படின்னு சொன்னாரு அந்த வியாபாரி

ஆமாடா என்ன கடிக்குற நாய்க்கு நான் பிரட் போடுவேன் நாளைக்கு அது ஊர்ல இருக்க நாய்ங்க கிட்ட எல்லாம் போயி இந்த ஆளை கடிச்சா உங்களுக்கு பிரட் கிடைக்கும் அப்படின்னு சொல்லும் ஊர்ல இருக்க எல்லா நாயும் என்னை கடிக்க வரும் அப்படின்னு கோவமா சொல்லிட்டு அங்க இருந்து போயிட்டாரு

முல்லா ஓட கோபத்தை பார்த்த அந்த வியாபாரி அதுக்கப்புறம் ராத்திரி நேரத்துல தன்னோட நாயை வீட்டுக்குள்ளே பாதுகாப்பா வச்சு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கிட்டாரு