Mulla Asks the Donkey – முல்லாவின் இரண்டு கழுதைகள்

Mulla Asks the Donkey – முல்லாவின் இரண்டு கழுதைகள்:-முல்லா தன்னோட வியாபாரத்துக்காக துணைக்கு ஒரு கழுதையை வளர்த்துக்கிட்டு வந்தாருன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும், அந்த கழுதையில சந்தைக்கு போற பொதி எல்லாத்தையும் ஏத்திக்கிட்டு சந்தைக்கு போயி வியாபாரம் செய்யுறது அவருடைய வழக்கம்

Intro: Mulla's usual routine with one donkey

ஒரு நாள் சாமான ஏத்துறதுக்கு ஒரு கழுதையும் தன்னை கூட்டிட்டு போறதுக்கு ஒரு கழுதையும் இருந்தா நல்லா இருக்கணும்னு நினைச்சாரு முல்லா உடனே பக்கத்து ஊருக்கு போன முல்லா இன்னொரு கழுதை வாங்கினாரு

Mulla thinks about needing a second donkey

முல்லா இரண்டு கழுதை வைத்திருக்கிறதை பார்த்ததும் அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் தினமும் ஒவ்வொருத்தர் வந்து ஒரு ஒரு கழுதைய ஓசி வாங்க ஆரம்பிச்சாங்க இதை பார்த்த முல்லா அடடா நம்ம தேவைக்காக இன்னொரு கழுத வாங்குனா அது தினமும் ஓசி போகுதே அப்படின்னு நினைச்சாரு.

Mulla decides and heads to buy the second donkey

இனிமே கழுதையை இரவல் கொடுக்க கூடாதுன்னு நினைச்சாரு. அப்பத்தான் பக்கத்து வீட்டுல வசிச்ச இன்னொரு வியாபாரி முல்லா கிட்ட வந்து முல்லா நீங்க தான் ரெண்டு கழுத வச்சிருக்கீங்க இல்ல எனக்கு இன்னைக்கு ஒரு கழுதைய ஓசி குடுங்க நான் பக்கத்து ஊரு சந்தைக்கு போயி வியாபாரம் பார்க்க போக போறேன் அதுக்கு அது உதவியா இருக்கும் அப்படின்னு சொன்னாரு

Mulla returns with the second donkey; neighbors notice

அப்பத்தான் முல்லா கேட்டாரு பக்கத்து ஊரு சந்தைக்கு போறதுன்னா உங்களுக்கு நல்ல கழுதை வேணும் என் இரண்டு கழுத்தையும் ஒவ்வொரு விதத்துல திறமைசாலியா இருக்குது அதனால நீங்களே ஒரு நல்ல கழுதைய தேர்ந்தெடுத்து அதை இழுத்துகிட்டு போங்க அப்படின்னு சொன்னாரு முல்லா

Neighbors start coming daily to rent donkeys

இதைக் கேட்ட அந்த வியாபாரிக்கு இதுல எப்படி நல்ல கழுதைய தேர்ந்து எடுக்கிறதுன்னு புரியல உடனே கேட்டாரு இந்த முதல் கழுத நல்லா பொது சுமக்குமா? அப்படின்னு கேட்டாரு அதற்கு முல்லா ஆமா இந்த கழுதை தான் ரொம்ப நல்லா பொதி சுமக்கும் அப்படின்னு சொன்னாரு,

Mulla realizes the problem and decides no more renting

உடனே அந்த வியாபாரி அப்ப இந்த இரண்டாவது கழுதை அப்படின்னு கேட்டாரு அதுக்கும் முல்லா சொன்னாரு ஆமாம் இந்த ரெண்டாவது கழுதையும் நல்லா பொதி சுமக்கும் அப்படின்னு சொன்னாரு

Neighboring merchant approaches Mulla to rent a donkey

இதைக் கேட்ட அந்த வியாபாரிக்கு குழப்பம் தான் வந்துச்சு, அதனால திரும்பவும் இந்த முதல் கழுதை நல்லா வேகமா நடக்குமா அப்படின்னு கேட்டாரு ,அதுக்கு முல்லா ஆமா ஆமா இந்த கழுதை ரொம்ப வேகமா நடக்கும் அப்படின்னு சொன்னாரு உடனே அந்த வியாபாரி அப்ப இரண்டாவது கழுதை அப்படின்னு கேட்டாரு அதுக்கும் முல்லா சொன்னாரு ஆமா ஆமா இந்த கழுதையும் நல்லா வேகமா நடக்கும் அப்படின்னு சொன்னாரு

Mulla offers the merchant to choose the 'better' donkey

இதைக் கேட்ட அந்த வியாபாரிக்கு லேசா கோபம் வர ஆரம்பிச்சுருச்சு இந்த முதல் கழுத ரொம்ப தூரம் நடக்குமா அப்படின்னு கேட்டாரு அதுக்கு முல்லா ஆமா ஆமா இந்த கழுதை தான் ரொம்ப நேரம் நடக்கும் அப்படின்னு சொன்னாரு உடனே அப்ப இந்த இரண்டாவது கழுதை அப்படின்னு கேட்டாரு அந்த வியாபாரி அதுக்கு முல்லா சொன்னாரு ஆமாமா இந்த ரெண்டாவது கழுதையும் ரொம்ப தூரம் நடக்கும் அப்படின்னு சொன்னாரு

Merchant asks about first donkey's load-carrying; Mulla praises it—then same for second

இதைக் கேட்க கேட்க கோபத்தோட உச்சத்துக்கு போனாரு அந்த வியாபாரி ஐயா சாமி உன் கிட்ட கழுதை கேட்க வந்தது தப்புதான் அதுக்காக இப்படி என்னை போட்டு குழப்பாத உங்க கழுதைய நீங்களே வச்சுக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு

Merchant asks about speed and endurance; Mulla praises both equally, building frustration

இந்த ஐடியா வேலை செஞ்சதுனால அவர்கிட்ட யார் கழுத்தை ஓசி கேட்டு வந்தாலும் இதே மாதிரி பேசி குழப்பி அவங்கள அனுப்பிக்கிட்டே இருந்தாரு முல்லா

Merchant gets angry and leaves; Mulla's trick works ongoing