Updated on: 13-December-2025
தொட்டது தங்கமாக – Midas Touch Story in Tamil Font:- முன்னொரு காலத்துல ஒரு மிகப்பெரிய பேரரசு இருந்துச்சு இந்த பேரரசை மிடாஸ்னு ஒரு அரசன் ஆட்சி செய்து கொண்டு வந்தான்

ஒவ்வொரு மாசமும் பௌர்ணமி அப்ப நகர்வலம் போறது அவரோட வழக்கம், அப்படி ஒரு நாள் போகும்போதுதான் ஒரு காட்டு பாதையை பார்த்தாரு அரசர் மிடாஸ்,உடனே அந்த பாதையில் போய் பார்க்கலாம்னு நினைச்சாரு. கொஞ்சம் தூரம் போனதுக்கு அப்புறம் அங்க யாருமே நடமாட்டம் இல்லாமல் இருந்ததும் மிடாசுக்கு லேசா பயம் வந்துச்சு

அப்பத்தான் அவருக்கு முன்னாடி திடீர்னு வன தேவதை வந்து நின்னாங்க வன தேவதையை பார்த்ததும் மிடாஸ் பயபக்தியோட வணங்கினாரு,உடனே பேரரசர் மிடாஸ் கிட்ட உனக்கு ஏதாவது வரம் வேணுமா அப்படின்னு கேட்டுச்சு வனதேவதை

உடனே மிடாஸ் அரசர் கொஞ்சம் கூட யோசிக்காம நான் தொட்டதெல்லாம் தங்கமா மாறனும் அப்படின்னு ஒரு வரத்தை கேட்டாரு ,அடுத்த நிமிஷம் நீ கேட்ட வரம் உனக்கே சொந்தம் அப்படின்னு சொல்லிட்டு டக்குனு மறைஞ்சு போச்சு அந்த வனதேவதை

தொட்டதெல்லாம் தங்கமா மாறும்ங்கிற வரத்தை வாங்குன மிடாஸ் அரசர் அதைச் சோதிச்சு பார்க்க நினைச்சாரு பக்கத்துல இருந்த ஒரு கல்லத்தொட்டாரு அது உடனே தங்கமா மாறிடுச்சு ,உடனே ரொம்ப சந்தோசமா மாறிட்டாரு அரசர் மிடாஸ்,உடனே அந்த தங்க கல்ல எடுத்துக்கிட்டு வேகமா அரண்மனைக்கு ஓடுனாரு

அரண்மனைக்கு வந்த அரசர் தான் நினைச்ச பொருளை எல்லாம் தங்கமா மாத்துனாரு பக்கத்தில் இருந்த பொம்மையை தொட்டு தங்கமா மாத்துனாரு தான் சாப்பிடற தட்டை தொட்டு தங்கமா மாத்துனாரு தான் படுக்கிற கட்டுல தொட்டு தங்கமா மாத்துனாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அவருக்கு லேசா பசிக்க ஆரம்பிச்சுச்சு வேகமா போயி மேஜையில் இருந்த பழத்தை எடுத்து சாப்பிட போனாரு மிடாஸ் அரசர் பழத்த தொட்டதும் அதுவும் தங்கமா மாறிடுச்சு

அவரால எந்த உணவையும் சாப்பிட முடியல அவர் தொட்ட எல்லா உணவும் தங்கமா மாறிடுச்சு அப்பத்தான் அரசரோட மகன் அங்கு வந்தான் ஏதோ நினைவுல அவனையும் தொட்டுட்டாரு மிடாஸ் அடுத்த நொடி அவனும் தங்கமா மாறிட்டான்
அப்பத்தான் தான் அவசரப்பட்டு வாங்குனது வரமில்ல சாபம் அப்படின்றது அவருக்கு புரிஞ்சுச்சு மீண்டும் காட்டுக்கு போன மிடாஸ் என்னோட மகன் மட்டும் உயிரோட வந்தா போதும் அப்படின்னு விரதம் இருந்து வன தேவதையை நோக்கி தவம் இருக்க ஆரம்பிச்சாரு

உழைப்புக்கு முன்னாடி கடவுள் கொடுக்கிற வரம் ரொம்ப சாதாரணமானது அப்படின்னு புரிஞ்சுகிட்ட மிடாஸ்க்கு வனதேவதை திரும்பி வந்து அவரோட மகனை திருப்பித் தந்தாங்க
Older Version Published on : 2020
ஒரு காலத்துல மிடாஸ் னு ஒரு அரசன் வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவரு கட்டு வழிய போகும்போது அங்க வாழுற வன தேவதைய பாத்தாரு
உடனே அந்த தேவதைய பாத்து வணங்குனாரு
உடனே அந்த தேவதை உனக்கு ஏதாவது வரம் வேணுமான்னு கேட்டுச்சு
உடனே மிடாஸ் அரசன் நான் தொட்டது எல்லாம் தங்கமா மாறணும்னு கேட்டாரு
அந்தே தேவதை அவர் கேட்ட வரத்தை கொடுத்துச்சு
தேவதை கொடுத்த வரத்தை சோதிச்சு பாக்க நினைச்ச மிடாஸ் பக்கத்துல இருக்குற கல்ல தொட்டாரு உடனே அந்த கல் தங்கமா மாறிடுச்சு
அரண்மனைக்கு வந்த அரசர் தான் நினைச்ச பொருளை எல்லாம் தங்கமா மாத்துனாரு
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அவருக்கு பசிச்சிச்சு
தட்டுல இருக்குற பழத்தை எடுத்தாரு ஆனா அந்த பழமும் தங்கமா மாறிடுச்சு
அவரால எந்த உணவையும் சாப்பிட முடியல அவரு எத தொட்டாலும் அது உடனே தங்கமா மாற ஆரம்பிச்சு
அரசரோட மகன் வேகமா வந்து அப்பாவ தொட்டான் தவறுதலா அவனையும் தொட்டாரு அவரு
அரசரோட மகனும் தங்கமா மாறிப்போனான்
அப்பத்தான் தான் அவசரப்பட்டு வரத்துக்கு பதிலா சாபத்த வாங்கிட்டத நினச்சு வறுத்த பட்டாரு
1 thought on “தொட்டது தங்கமாக – Midas Touch Story in Tamil Font”
Comments are closed.