Site icon தமிழ் குழந்தை கதைகள்

தொட்டது தங்கமாக

ஒரு காலத்துல மிடாஸ் னு ஒரு அரசன் வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவரு கட்டு வழிய போகும்போது அங்க வாழுற வன தேவதைய பாத்தாரு

உடனே அந்த தேவதைய பாத்து வணங்குனாரு

உடனே அந்த தேவதை உனக்கு ஏதாவது வரம் வேணுமான்னு கேட்டுச்சு

உடனே மிடாஸ் அரசன் நான் தொட்டது எல்லாம் தங்கமா மாறணும்னு கேட்டாரு

அந்தே தேவதை அவர் கேட்ட வரத்தை கொடுத்துச்சு

தேவதை கொடுத்த வரத்தை சோதிச்சு பாக்க நினைச்ச மிடாஸ் பக்கத்துல இருக்குற கல்ல தொட்டாரு உடனே அந்த கல் தங்கமா மாறிடுச்சு

அரண்மனைக்கு வந்த அரசர் தான் நினைச்ச பொருளை எல்லாம் தங்கமா மாத்துனாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அவருக்கு பசிச்சிச்சு

தட்டுல இருக்குற பழத்தை எடுத்தாரு ஆனா அந்த பழமும் தங்கமா மாறிடுச்சு

அவரால எந்த உணவையும் சாப்பிட முடியல அவரு எத தொட்டாலும் அது உடனே தங்கமா மாற ஆரம்பிச்சு

அரசரோட மகன் வேகமா வந்து அப்பாவ தொட்டான் தவறுதலா அவனையும் தொட்டாரு அவரு

அரசரோட மகனும் தங்கமா மாறிப்போனான்

அப்பத்தான் தான் அவசரப்பட்டு வரத்துக்கு பதிலா சாபத்த வாங்கிட்டத நினச்சு வறுத்த பட்டாரு

Exit mobile version