Updated On: 13- December – 2025
பால்காரரும் பகல் கனவும்-The Milkman and the Golden Hen: A Tamil Twist on “Don’t Count Your Chickens Before They Hatch” Moral Story:-முன்னொரு காலத்துல காட்டுக்கு பக்கத்துல ஒரு அழகான கிராமம் இருந்துச்சு அந்த கிராமத்துல ஒரு பால் காரர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவர் தினம் தன் வழக்கறி மாடு கட்ட இருந்து பாலக்கரந்து பக்கத்து ஊர் சந்தையில் போயி வித்து அதில் வர வருமானத்துல தன்னோட வாழ்க்கையை நடத்திக்கிட்டு வந்தாரு

பால் எல்லாத்தையும் சந்தையில போய் வித்து அதுல வர்ற பணத்தை வச்சு வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்கள் எல்லாத்தையும் வாங்கிட்டு ,மிச்சம் இருக்குற பணத்தை சேமிச்சு வைக்காம தேவையில்லாத ஏதாவது வாங்கி பணத்தை வீண் பண்றது அவரோட பழக்கமா இருந்துச்சு

அப்படி இருக்கிறப்ப ஒரு நாள் அவர் வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்த சந்தையில ஒரு கோழி வியாபாரி வந்து வியாபாரத்தை ஆரம்பிச்சாரு சட்டி நிறைய பால் கறந்து வியாபாரம் பார்க்கிறதுக்காக சந்தைக்கு வந்த பால்காரர் இதைப் பார்த்தாரு,அதைப் பார்த்த பால்காரருக்கு அடடா நம்ம ஏன் ஒரு கோழியை வாங்கி வளர்க்க கூடாதுன்னு தோணுச்சு

அப்படி கோழி வாங்கி வளர்த்தோம்னா அந்த கோழிகள் முட்டையிடும் அது பொருச்சி கோழிக்குஞ்சுகள் வரும் அது வேகமாக வளர்ந்து அதிகம் முட்டை போட ஆரம்பிக்கும் இப்படியே நிறைய கோழிகள் சேர்ந்துவிடும் நம்ம அதை எல்லாம் வித்து வேகமா பணக்காரனா ஆயிடலாம் அப்படின்னு பகல் கனவு கண்டு கிட்டு இருந்தாரு

பணக்காரனா வேகமா மாறுணும்னு நினைத்துக்கிட்டே இருந்தவரு தன் கையில வச்சிருந்தா பால் சட்டிய கீழே போட்டுட்டாரு வியாபாரத்துக்காக கொண்டு போன பால் எல்லாம் வீணா போச்சு

இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட மாதிரி வியாபாரத்துக்கு கொண்டு வந்த பால்புறா வீணானதும் ரொம்ப வருத்தப்பட்டார் அந்தப் பால் வியாபாரி ஒரு விஷயம் நடக்கிறதுக்கு முன்னாடி அதோட பலன் என்னன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம்னா எதுவுமே நடக்காது அதுக்காக எப்ப முழு உழைப்பை போடுகிறோமோ அப்பத்தான் அந்த வேலையோட பலன் நமக்கு கிடைக்கும்

Old Version
ஒரு பால்காரர் ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவரோட தினசரி வேலை என்னென்ன மாடுகள்ட்ட இருந்து பாலா கறந்து
பக்கத்துக்கு சந்தைல கொண்டு போயி வித்துட்டு வருவாரு
பால் வித்து சம்பாதிச்ச பணத்தை என்ன செய்றதுன்னு எப்பவுமே அவருக்கு குழப்பம் தான்
சிலநாள் அவருக்கு புடிச்ச பிரட் வாங்குவாரு சிலநாள் பழங்கள்வாங்குவர்
ஒரு நாள் அங்க ஒரு கோழியை பாத்தாரு
உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு
அடடா நாம ஏன் ஒரு கோழியை வாங்க கூடாது
நாம ஒரு கோழி வாங்குனம்னா அது நிறைய முட்ட போடும்
அந்த முட்டையை வித்திட்டு நிறைய பணம் சம்பாதிக்கலாம்
அந்த முட்டைல சில குஞ்சி பொரிக்கும் அந்த கோழி குஞ்சுங்க பெருசாகி
பெரிய கோழியா மாறும் அந்த கோழிங்க எல்லாம் இன்னும் நிறைய முட்ட போடும்
அந்த முட்டைங்க எல்லாத்தையும் வித்து நாம நல்ல பணக்காரனா
மாறலாம்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது அவரு கொண்டு வந்த பால் பாத்திரம் கீழ விழுந்து கொட்டி போச்சு
வெறும் கையோட வீட்டுக்கு வந்த அந்த பால் வியாபாரியோட அம்மா நடந்ததா எல்லாம் கேட்டு சிரிச்சாங்க
ஒரு விஷயம் நடக்குறதுக்கு முன்னாடி நிறைய யோசிக்க கூடாது ,அதுக்காக நிறைய உழைக்கணும் அப்பத்தா எல்லாமே நினைச்ச படி நடக்கும்