எம்.ஜி.ஆர். பூ பொட்டலம்

1977-ஆம் ஆண்டு

மாரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி என்ற காரில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

பெரும் திரளாக மக்கள் கூடியிருந்த பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் கொண்டிருந்தார் அப்போது யாரோ ஒரு விஷமி அவரை நோக்கி ஒரு காகிதப் பொட்டலத்தை வீசினான்.

தற்செயலாக எம்.ஜி.ஆர்., விலக அந்தப் பொட்டலம் அவர் அருகில் நின்று கொண்டிருந்த அவரது பாதுகாவலர் ஒருவரின் கையில் பட்டுக் கீழே விழுந்தது. அதிலிருந்து மாட்டுச் சாணம் தெறித்துக் கீழே விழுந்ததைப் பார்த்த சிலர் மிகவும் கொதிப்படைந்தனர்.

தலைவர் மீது எவனோ மாட்டுச் சாணத்தை வீசிவிட்டான். அவனைத் தேடிப் பிடியுங்கள் என்று ஒருவர் கத்தினார்

அது மாட்டுச் சாணம் என்பதைத் தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., உடனே மைக்கில், “யாரும் ஆத்திரப்பட வேண்டாம். என் மீது எறியப்பட்டது மாட்டுச் சாணம் அல்ல; பூ பொட்டலம்” என்றார்

உடனே அருகிலிருந்த மக்கள், “இல்லை ! இதோ பாருங்கள்… மாட்டுச் சாணம்தான்” என்று கூறி சாணத்தை அவருக்குச் சுட்டிக் காட்டினர்.

அதற்கு எம்.ஜி.ஆர்., “அதனாலென்ன அந்தச் சாணத்தை பூவாக நினைத்துக் கொள்வோம். என்ன குறைந்து விடப் போகிறது” என்றார் அவரது பெருந்தன்மையான பேச்சைக் கேட்ட

மக்கள், வேறு எதுவும் போத் தோன்றாது அப்படியே

வாயடைத்து நின்றனர்