How Old is Mulla’s Wife? – முல்லாவின் மனைவி

How Old is Mulla’s Wife? – முல்லாவின் மனைவி :-முல்லா ஒரு நாள் சந்தையில மும்முரமா வியாபாரம் பார்த்துகிட்டு இருந்தாரு ,அப்ப அங்க வந்த பஞ்சாயத்து தலைவர் எல்லாரையும் கூப்பிட்டாரு

Mulla at the Market

எல்லாருகிட்டயும் பஞ்சாயத்து தலைவரு சொன்னாரு ,இந்தாங்க இந்த விண்ணப்பத்தை ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கோங்கன்னு எல்லாருக்கும் ஒரு விண்ணப்பம் கொடுத்தாரு ,கொடுத்துட்டு இது புதுசா அரசாங்கம் கொடுக்குற குடும்ப அட்டை வாங்குதாரத்துக்கான விண்ணப்பம் ,இதுல உங்க பேரு ,உங்க வயசு ,உங்க பிறந்ததேதி ,உங்க வீட்டுல இருக்கவங்க பேரு ,அவுங்க வயசு ,அவுங்களோட பிறந்த தேதி எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சு நாளைக்கு கொண்டு வந்து என்கிட்ட கொடுங்கன்னு சொன்னாரு

Panchayat Leader Distributing Forms

விண்ணப்பித்த வாங்கிகிட்ட முல்லா வீட்டுக்கு வந்தாரு ,டேபிள்ல உக்காந்து அவரோட பேரு ,வயசு ,பிறந்த தேதியை எழுதுன அவரு ,அடுத்ததா அவரோட மனைவி பேர எழுத்துனாரு ,அடுத்ததா அவுங்களோட வயச எழுதும்போதுதான் அத தான்மறந்துட்டது நினைவுக்கு வந்துச்சு ,

Mulla Filling the Form at Home

அடடா இப்ப போயி மனைவிகிட்ட உன் வயசு என்னனு கேட்டா சண்டைக்கு வருவாளேன்னு நினச்ச முல்லா கொஞ்சம் தைரியத்த வர வச்சிக்கிட்டு உன்னோட வயசு என்னனு கேட்டாரு அவரோட மனைவிகிட்ட ,உடனே கோபப்பட்டு கத்த ஆரம்பிச்சுட்டாங்க

Mulla Asking His Wife's Age

இது குடும்ப அட்டை வாங்குற விண்ணப்பம் இதுல கண்டிப்பா உன்னோட வயச எழுதணும் தயவு செஞ்சு சொல்லுன்னு கெஞ்சி கெஞ்சி கேட்டாரு ,உடனே கோபத்துல இருந்த முல்லாவோட மனைவி எனக்கும் மறந்து போச்சுனு சொன்னாங்க

Mulla Pleading and Wife's Admission

அதுக்கு முல்லா வீட்டுல எத்தனை கரண்டி இருக்கு ,எத்தன பூச்சு இருக்கு ,எத்தனை சட்டி இருக்குனு எல்லாம் ஞாபகம் வச்சிருக்கயிலனு கேட்டு சிரிச்சாரு ,உடனே அவரோட மனைவி நினைச்சாங்க ,முல்லா மறுபடியும் தன்னை முட்டாளாக்க பார்க்குறாருனு புரிஞ்சிகிட்ட முல்லாவோட மனைவி , இந்தாங்க இங்க பாருங்க அரிசி மூட்ட இதுல எத்தனை அரிசி இருக்குனு உங்களுக்கு தெரியுமா ,அது மாதிரிதான் எனக்கு எல்லாமே மறந்து போச்சுன்னு சொன்னாங்க

 Mulla Teasing and Wife's Retort

இத கேட்ட முல்லா ஓஹ் நீ என்ன முட்டாளாக்க பக்கிரியான்னு தனக்குள்ள நினைச்சுகிட்டு ,இதுல ஒன்பது லட்சத்தி பதிமூணாயிரத்து ஏழு அரிசி இருக்கு ,எனக்கு கணக்கு சரியா தெரியும் நீ வேணும்னா எண்ணி பாருன்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டாரு

Mulla's Exaggerated Response

மறுபடியும் முல்லா கிட்ட வாய கொடுத்து தான்தான் தோத்துட்டோம்னு நினைச்ச முல்லாவோட மனைவி அந்த விண்ணப்பத்தை அவுங்களே நிரப்பி வச்சுட்டாங்க

Wife Filling the Form

1 thought on “How Old is Mulla’s Wife? – முல்லாவின் மனைவி”

Comments are closed.