Mulla-Friends-Past and Present-நான்கு நண்பர்கள்

Mulla-Friends-Past and Present-நான்கு நண்பர்கள் :- முல்லா எப்போதும் நகைச்சுவையா பேசுறதால அவருக்கு நிறய நண்பர்கள் இருந்தாங்க ,அவரு போகுற இடத்துல எல்லாம் புது புது நண்பர்கள் கெடச்சிகிட்டே இருந்தாங்க.

Mulla's Many Friends

ஒரு நாள் முல்லா பக்கத்து ஊர் சந்தைக்கு போனாரு ,அப்படி போகுறப்ப ஒரு டீ கடைய பார்த்தாரு ,ரொம்ப தூரம் நடந்து வந்த முல்லா அந்த டீ கடையில கொஞ்ச நேரம் உக்காந்து இளைப்பாற நினைச்சாரு ,அந்த டீ கடைக்கு முன்னாடி ரெண்டு கயித்து கட்டில் இருந்துச்சு ,அதுல ஒரு கட்டில்ல ரெண்டு நண்பர்கள் உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க

Mulla Arrives at the Tea Shop

டீ கடைக்கு உள்ள போன தனக்கு ஒரு டீ வாங்கிட்டு வெளியில வந்து அவரு ஒரு கயித்து கட்டில்ல உக்காந்தாரு ,அப்பத்தான் எதிர்ல உக்காந்திருந்த நண்பர்கள் சோகமா உக்காந்து எதையோ பத்தி மும்முரமா பேசிகிட்டு இருக்குறத கவனிச்சாறு

Mulla Sits and Observes

முதல் நண்பன் சொன்னாரு என்னோட பழைய நண்பர் நேத்து சண்டை மட்டும் போடலைனா இந்நேரம் அவங்கூட உக்காந்து டீ குடிச்சிகிட்டு இருந்துஇருப்பேனு சொன்னாரு ,

First Friend's Lament

அதுக்கு இன்னொரு நண்பர் சொன்னாரு நானும் அதனால தான் இன்னைக்கு உன்கூட உக்காந்து டீ குடிக்கிட்டேன் போன வாரம் என்னோட சண்ட போட்ட என்னோட நண்பன் இன்னும் என்கூட பேசலைன்னு சொன்னாரு

Second Friend's Shared Sorrow

உடனே முதல் நண்பர் சொன்னாரு அவன் ரொம்ப நல்லவன்தான் ஆனா முன்கோபி எதுக்கு கோப படுறோம் என்னத்துக்கு சண்ட போடுறோம்னு தெரியாமலேயே கண்டபடி நடந்துக்குறானு சொன்னாரு ,

First Friend Defends His Friend

அதுக்கு ரெண்டாவது நண்பன் சொன்னாரு ஆமா ஆமா கோபம் இருக்குற இடத்துல தான் நல்ல குணம் இருக்கும்ங்கிற மாதிரி என்னோட நண்பனும் இப்படித்தான் தேவையில்லாத விசயத்துக்கு எல்லாம் சண்டை போடுவான்னு சொன்னாரு

Second Friend Agrees

அப்பத்தான் முல்லாவுக்கு புரிஞ்சது இவுங்க ஒவ்வொரு தருக்கும் தனி தனியா ஒரு நல்ல நண்பர் இருக்காங்க ,அவுங்களோட சின்ன சண்டை போட்டுட்டு அத தாங்க முடியாம ரெண்டு பேரும் மன பாரத்தோட இருக்காங்கனு புரிஞ்சிக்கிட்டாரு

Mulla's Realization

உடனே கட்டில்ல இருந்து எழுந்திரிச்ச முல்லா ,ஏம்பா இப்படி நாலு பேரு ஒரே கட்டில்ல உக்காந்து இருக்கீங்க ,கட்டில் உடைஞ்சிட போகுதுனு சொன்னாரு ,இத கேட்ட நண்பர்கள் ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே புரியல

Mulla's Witty Remark

நாங்க ரெண்டு பேரு தான கயித்து கட்டில்ல உக்காந்து இருக்கோம் எதுக்கு இந்த ஆளு இப்படி சொல்லுறாருனு யோசிச்ச நண்பர்கள் ரெண்டு பேரும் ,பெரியவரே நாங்க ரெண்டு பேரு தானே இருக்கோம் எதுக்கு நாலு பேருனு சொல்லறீங்கன்னு கேட்டாரு

Friends' Confusion

அதுக்கு முல்லா சொன்னாரு ,இங்க இருக்குறது என்னமோ நீங்க ரெண்டு பேருதான் ஆனா நீங்க உள்ளதால உங்களோட நண்பர நினைச்சுகிட்டு இருக்கீங்க ,என்னதான் சண்டை போட்டு உங்க நண்பரை விட்டுட்டு வந்திருந்தாலும் ,உங்க உள்ளதால அவுங்கள சுமந்துக்கிட்டே இருக்கீங்க

Mulla Explains the Burden

உங்க நண்பர்களை பத்தி எனக்கு தெரியாது ,அவரு நல்லவரா கெட்டவரான்னு கூட எனக்கு தெரியாது ,ஆனா அவரோட நட்பு வச்சிருந்த நீங்க எப்பயும் அவுங்களுக்கு ஒரு நல்ல நண்பர்தான் ,நீங்க போய் உங்க நண்பர்களை பாருங்க ,இந்த சின்ன சண்டைய பத்தி ஒரு வார்த்தை கூட கேக்காம உங்க கூட சேர்ந்துடுவாங்க

Resolution and Departure

நல்ல நண்பர்களை எப்பவும் தொலைச்சிடதீங்க ,உங்க வாழ்க்கை ரொம்ப நல்ல படியா இருக்கும்னு சொன்னாரு ,அப்பத்தான் அந்த நண்பர்களுக்கு புரிஞ்சது தங்களை பத்தியும் தங்களோட நண்பர்களை பத்தியும் தெரியாத ஒருத்தர் சொன்ன இந்த விஷயம் ரொம்ப பெருசுனு புரிஞ்சிகிட்டு ,முல்லாவுக்கு நன்றி சொல்லிட்டு அவர் அவர் நண்பர்களை பார்க்க கிளம்புனாங்க

Mulla's Advice on Friendship