Home Sweet Home: The Wild Lesson of Gratitude-காட்டுக்குப் போன வீட்டு விலங்குகள்-காட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன கிராமத்துல ஒரு அழகான ஒரு பெரிய குடிசை வீடு இருந்துச்சு அந்த வீட்டுல இருந்த குடும்பத்தினர் நிறைய வீட்டு விலங்குகளை வளர்த்துக்கிட்டு வந்தாங்க

அந்த வீட்டில ஒரு குட்டி நாய் இருந்துச்சு அதுக்கு சாப்பாடு போட்ட அந்த வீட்டு அம்மா அந்த நாய்க்குட்டிய சாப்பிட வான்னு கூப்பிட்டாங்க வேகமா ஓடி வந்த குட்டி நாய் அவசரத்துல சிந்தி சிந்தி சாப்புடுச்சு உடனே அதோட கையில அவங்க கையில வச்சிருந்த தட்டால செல்லமா ஒரு அடி அடிச்சாங்க,

உடனே அந்த குட்டி நாய்க்கு கோவம் வந்துருச்சு நாம மட்டும் காட்டுக்குள்ள இருந்தா நம்ம இஷ்டப்படி இருந்து இருக்கலாம் நம்ம செஞ்ச சின்ன தப்புக்கு எல்லாம் நம்மள இப்படி அடிக்கிறாங்களே அப்படின்னு நினைச்சுச்சு அந்த குட்டி நாய்

அப்பத்தான் அங்க இருந்த பூனைக்குட்டிக்கு பாலு ஊத்துனாங்க அந்த வீட்டுக்காரர் அம்மா பால் குடிச்ச பூனை தன்னோட வாய அந்த அம்மாவோட சேலையில தொடச்சுச்சு உடனே அந்த பூனைக்குட்டியயும் செல்லமா காலால எத்தினாங்க அந்த வீட்டுக்காரம்மா

உடனே பூனை கிட்ட போன அந்த குட்டி நாய் பார்த்தியா உனக்கு சாப்பாடு கொடுத்துட்டு உன்னை அடிக்கவும் செய்றாங்க வா நம்ம ரெண்டு பேரும் காட்டுப்பக்கம் போயிறலாம் அங்க போய் சுதந்திரமா நமக்கு தேவையான உணவு தேடி நல்லபடியா வாழலாம் அப்படின்னு சொல்லிச்சு குட்டி நாய்

குட்டி நாயும் குட்டி பூனையும் வீட்டை விட்டு வெளியில வந்து தோட்டத்து பக்கம் போச்சுங்க அங்க பசியோட இருந்த கோழியை பார்த்த நாய் என்ன உனக்கு சாப்பாடு வைக்க மறந்துட்டாங்களா ,

பார்த்தியா இப்படித்தான் அடிக்கடி உனக்கு சாப்பாடு வைக்க மறந்துடராங்க நாங்க காட்டுக்கு போயி சுதந்திரமா வாழ போறோம் நீ எங்க கூட வந்தேனா சுதந்திரமா வாழலாம் அப்படின்னு சொல்லிச்சு உடனே கோழி அவங்களோட சேர்ந்து நடக்க ஆரம்பிச்சுருச்சு

அப்பத்தான் அந்த வீட்டுக்காரம்மா வளர்த்துக்கிட்டு வந்த கிளி கூண்டுல இருந்து கத்துச்சு உடனே அதை திறந்து விட்ட குட்டி நாய் வா நீயும் இன்னிலிருந்து சுதந்திரமா இரு எங்களோட வந்து காட்டுல சுதந்திரமா வானத்துல பறக்கலாம் அப்படின்னு சொல்லி கூப்பிட்டுச்சு கிளியும் அவங்களோட சேர்ந்து பயணத்தை ஆரம்பிச்சுச்சு

காட்டு மண் பாதை வழியா காட்டுக்குள்ள போன அவங்க நாலு பேரும் ரொம்ப சோர்ந்து போனாங்க ரொம்ப தூரம் நடந்ததால அவங்களுக்கு ரொம்ப தண்ணி தாகம் எடுத்துச்சு அப்பத்தான் அங்க ஒரு குளம் இருக்கிறத பார்த்துச்சுங்க உடனே வேகமாக ஓடிப் போயி குளத்துல தண்ணி குடிக்கலாம்னு பார்க்கிறப்ப தான் தெரிஞ்சது அந்த ஒரு யானை அங்க நின்னு தண்ணி குடிக்கிறது

அப்பத்தான் அந்த வீட்டு மிருகங்கள் கவனிச்சுங்க யானை அந்த குளத்தை நல்லா உளப்பி குளம்முழுசும் சகதி தண்ணியா இருக்கு இது நம்ம வீட்டுல குடிக்கிற மாதிரி நல்ல தண்ணியா இல்லையே இதை எப்படி குடிக்கிறது அப்படின்னு அதுங்களுக்கு உள்ளவே பேசுசுங்க அப்பத்தான் இதுகளை கவனிச்ச அந்த யான ஓ வீட்டு விலங்குகளா உங்களுக்கு என்னப்பா நல்ல தண்ணி யாராவது வந்து உங்களுக்கு வச்சிருவாங்க அதுக்காக நீங்க என்ன வேணா செய்யலாம் அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுச்சு அந்த யானை

அப்பத்தான் அந்த காட்டு மிருகங்கள் நெனச்சுச்சுங்க அடடா இந்த காட்டுல நிறைய அருவிகளும் வற்றாத ஆறும் எங்க பாத்தாலும் குளங்களும் இருக்கும்ன்னு நினைச்சோமே ஆனா இங்க என்ன நமக்கு குடிக்கிறதுக்கு அழுக்கு தண்ணி தான் கிடைக்குது அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டுச்சுங்க

வேற வழி இல்லாம அந்த கலங்கலான செகதி தண்ணிய குடிச்சிட்டு காட்டுக்குள்ள தொடர்ந்து நடத்துங்க அந்த வீட்டு மிருகங்கள்,

அப்பத்தான் குட்டி பூன சொல்லிச்சு எனக்கு ரொம்ப பசிக்குது எனக்கு இப்ப சாப்பிடணும் போல இருக்கு அப்படின்னு சொல்லி கேட்டுச்சு

அவங்க திடீர்னு வீட்டை விட்டு வந்ததுனால பயணத்துக்கு தேவையான உணவு எதுவுமே எடுத்துட்டு வரல அப்பத்தான் அவங்க ஒரு குரங்கை பார்த்தாங்க அது மரத்தும கிளையில தலைகீழா தொங்கிக்கிட்டு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு

பசியோட இருந்த நாலு பேத்தையும் பார்த்த அந்த குரங்கு அட வீட்டு மிருகங்கள் காட்டுக்கு வந்து இருக்கீங்களா காடு ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி எங்க பாத்தாலும் உணவு இருக்கிற இடம் கிடையாது ஒவ்வொரு பழமரத்தையும் நீங்க தேடி அலைஞ்சாதான் உங்களுக்கு ஒரு வேலையாவது சாப்பாடு கிடைக்கும் போனா போகுது இந்தாங்க நான் சாப்பிட்டது போக மிச்சமிருக்கிற வாழைப்பழங்களை சாப்பிடுங்க அப்படின்னு சொல்லி நாலு வாழை பழத்தை எடுத்து கீழ இருக்குற வீட்டு மிருகங்களுக்கு கொடுத்துச்சு

அடடா இந்த காட்டுக்குள்ள நிறைய பல மரங்கள் இருக்கும் நிறைய செடி கொடிகள் இருக்கும் எண்ணில் அடங்காத உணவுப் பொருட்களும் காய்கறிகளும் இருக்கும் நினைச்சுட்டு இங்க வந்தோமே ஆனால் அப்படி எதுவும் காட்டுலஇல்ல இதுல எப்படி இவங்க வாழறாங்க அப்படின்னு நினைச்சுட்சுங்க நாலு காட்டு மிருகங்களும்
அந்த வாழை பழங்களை வாங்கி சாப்பிட்ட நாலு வீட்டு மிருகங்களும் தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சுசுங்க அப்பத்தான் சூரியன் மறஞ்சி ரொம்ப இருட்ட ஆரம்பிச்சுச்சு அவங்களுக்கு மேலும் நடக்கிறது பாதையே தெரியல பக்கத்துல இருந்த ஒரு மரத்துக்கு பின்னாடி போயி நாலு பேரு ஒழிஞ்சிக்கிட்டாங்க
அப்பத்தான் புலி உறுமுற சத்தம் அவங்களுக்கு கேட்டுச்சு நாலு குட்டி மிருகங்களும் ரொம்ப பயந்து போச்சு அடடா நம்மள வேட்டையாடி சாப்பிடறதுக்கு இந்த புலி வந்திருச்சு இனிமே இது கிட்ட இருந்து நம்ம இப்படி தப்பிப்போம் அப்படின்னு தங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருந்துச்சுன்னா அப்பத்தான் அங்க இருந்த ஒரு காட்டு அணில் அருகில் இருந்த தன்னோட குகைக்குள்ள கூட்டிட்டு போச்சு

ஏன் இப்படி வீட்டை விட்டுட்டு காட்டுக்குள்ள வந்து இப்படி கஷ்டப்பட நினைக்கிறீங்க நீங்க நினைக்கிற மாதிரி சுதந்திரமா வேணா இருக்கலாம் ஆனா பாதுகாப்பா இருக்க முடியாது ஒவ்வொரு நாளும் வேட்டையாடி சாப்பிடற பழக்கம் இருக்குற நிறைய மிருகங்கள நீங்க சந்திச்சே ஆகணும் அவங்க கிட்ட இருந்து இது மாதிரி ஒளிஞ்சி வேனா தப்பிக்கலாமே ஒழிய சண்டை போட்டு தப்பிக்கவே முடியாது அப்படின்னு சொல்லுச்சு
அடடா இது என்ன காட்டுக்குள்ள இவ்ளோ பெரிய ஆபத்து இருக்குறது நமக்கு தெரியாம போச்சே நம்மள மாதிரி அவங்களும் ஒரு மிருகம் தானே நம்மள ஏன் வாழ விடாமல தொந்தரவு செய்யணும் அப்படின்னு நிறைய கேள்விகள் அந்த வீட்டு மிருகங்களுக்கு வந்துச்சு

அப்பத்தான் திடீர்னு மழை பெய்ய ஆரம்பிச்சுச்சு தொடர்ந்து இடிச்சத்தம் கேட்க ஆரம்பிச்சதும் நான்கு காட்டுமிருகங்களும் ரொம்ப பயந்து போச்சுங்க என்ன இதுக்கே பயப்படுறீங்க இதுக்கு முன்னாடி இடிச்சத்தம் நீங்க கேட்டதே இல்லையா அப்படின்னு கேட்டுச்சு அந்த காட்டு அணில்
உடனே அந்த கோழி சொல்லுச்சு நாங்க இதுக்கு முன்னாடி இடி சத்தம் கேட்டிருக்கோம் . ஆனா அப்ப எல்லாம் எங்களுக்காக வச்சிருந்த தூங்குற இடத்துக்கு போய் சுகமா படுத்து தூங்கிடுவோம் இந்த மாதிரி காட்டுக்குள்ள இருட்டுல மின்னலையும் இடியையும் நாங்க சந்தித்சதே இல்ல எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு அப்படின்னு சொல்லுச்சு கோழி
தொடர்ந்து தங்களோட பயணத்துல தீமைகளே நடந்துக்கொண்டிருக்கிறதுனால இதுக்கு மேலயும் இந்த காட்டுல நடக்குற இந்த நிலைமையை சமாளிக்க முடியாது நம்ம பேசாம நம்ம வாழற இடத்துக்கு போயி நம்ம கிராமத்திலேயேவும் வாழலாம் அப்படின்னு முடிவு செஞ்சுங்க அந்த வீட்டு மிருகங்கள்

என்னதான் நம்மள அடிச்சாலும் உதைத்தாலும் நம்ம தங்குவதற்கு நல்லபடியான ஒரு இடமும் பாதுகாப்பான சூழ்நிலையும் நேர நேரத்துக்கு உணவும் நல்ல குடிநீரும் காயம் பட்டா மருத்துவ வசதியும் கொடுக்கிற நம்ம வீட்டுக்கு நம்ம போயிரலாம்னு நெனச்சுச்சுங்க அந்த வீட்டு மிருகங்கள்
அப்பத்தான் அதுங்களுக்கு ஒரு மிகப்பெரிய உண்மை தெரிஞ்சுச்சு நம்ம ரொம்ப தூரம் காட்டுக்குள்ள வந்துட்டோம் இப்ப நம்ம வீட்ட தேடி போறது ரொம்ப கஷ்டம் இந்த நிலைமையில போகிறப்பையும் நமக்கு நல்ல தண்ணி தேவை உணவு தேவை பாதுகாப்பா துணைக்கு யாரவது தேவை அப்படி இல்லைனா நாம இந்த காட்டுலயே மாட்டிகிட்டு கிடைக்க வேண்டியது தான்னு நினைச்சுச்சுங்க

இவ்வளவு சிக்கல்களை சமாளிச்சு எப்படி நமக்கு கிடைச்ச இனிமையான கிராமத்து வீட்டுக்கு போக போறோம்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது தான் ஒரு காலடி சத்தம் கேட்டுச்சு அவங்க திரும்பி பார்த்தா அவங்களை இத்தனை நாள் வளத்துக்கிட்டு வந்த வீட்டோட ஐயா நின்னுகிட்டு இருந்தாரு

வீட்ல வளர்த்த தன்மிருகங்கள் காணாமல் போன வருத்தத்துல இருந்த அந்த வீட்டு குட்டி பையனுக்காக காட்டுக்கு வந்து தன்னோட வீட்ல வளர்த்த மிருகங்கள கூட்டிட்டு போக வந்திருந்த அந்த ஐயாவை பார்த்ததும் இந்த மிருகங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அவரோட வீட்டுக்கு திரும்பி வந்த அந்த வீட்டு மிருகங்கள் தொடர்ந்து அவங்களுக்கு விசுவாசமாக இருந்து சின்ன சின்ன சேட்டைகள் செஞ்சு ரொம்ப சந்தோசமா வாழ்க்கையை நடத்துங்கள்
