Biting Your Own Ear – Mulla Story – காதை கடித்த மனைவி முல்லா கதை

Biting Your Own Ear – Mulla Story – காதை கடித்த மனைவி முல்லா கதை :- முல்லா வாழ்ந்துகிட்டு வந்த கிராமத்துல அவரு வீட்டுக்கு பக்கத்துல நிறைய குடும்பங்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க

Introduction to the Village

அவுங்களுக்குள்ள எதாவது சின்ன சின்ன பிரச்சனைகள் வரும்போது எல்லாம் புத்திசாலி பெரியவரான முல்லாகிட்ட ,பஞ்சாயத்துக்கு வந்தாங்க ,அறிவாளியான முல்லா அந்த குடும்ப பிரச்னையை சுமூகமான தீர்த்து வச்சாரு

Villagers Seeking Mulla's Advice

ஒருநாள் முல்லா தன்னோட வீட்டு வாசல்ல நின்னுகிட்டு இருந்தாரு அப்ப ஒரு அம்மா தன்னோட புருஷன் காதை பிடிச்சு இழுத்துகிட்டு வந்துச்சு ,இத பார்த்த முல்லா என்னம்மா என்ன ஆச்சு எதுக்கு உன்னோட புருசனோட காத புடிச்சி இழுத்துகிட்டு வர்றன்னு கேட்டாரு

Wife Dragging Husband to Mulla

அப்ப அந்த அம்மா அதோட காதை காமிச்சுச்சு ,அந்த காதுல காயம் இருந்துச்சு ,அத பார்த்த முல்லா அடடா உன் காதுல எப்படிம்மா எவ்வளவு பெரிய காயம்னு கேட்டாரு ,அதுக்கு அந்த அம்மா சொல்லுச்சு ,இதோ என்னோட புருஷன்தான் நான் தூங்கும் போது காதை கடிச்சி வச்சுட்டாருனு சொன்னாங்க அந்த அம்மா

Showing the Injured Ear

உடனே அந்த கணவர் சொன்னாரு இல்ல இல்ல இவ பொய் சொல்லுறா ,நான் அவ காத கடிக்கல அவளே அவ காத கடிச்சிகிட்டான்னு சொன்னாரு ,

 Husband's Denial

இத கேட்டா முல்லா உட்பட எல்லாரும் ஒரு நிமிஷம் திகைச்சு போய்ட்டாங்க ,அங்க இருந்த சிறு குழந்தைக்கு கூட தெரியும் தன்னோட காதையே ஒருத்தர் கடிச்சிக்க முடியாதுனு,உடனே எல்லாரும் குஷியாகிட்டாங்க ,இந்த மாதிரி பொய் சொல்லிக்கிட்டு ,விதண்டா வாதம் செஞ்சா புத்திசாலியான முல்லா சரியான பதிலடி கொடுத்து அவுங்கள திணறடிப்பாருனு அவுங்களுக்கு தெரியும்

Everyone Stunned and Excited

அடுத்து முல்லா என்ன சொல்லப்போறாருனு எல்லாரும் ஆவலா இருந்தாங்க ,அப்பதான் முல்லா சொன்னாரு அப்படியா ,தன்னோட காத தானே கடிக்க முடியுமான்னு தெரியல ,இருங்க நானே என் காத கடிக்க முடியுதான்னு பார்ப்போம்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனாரு

Mulla Decides to Test It

கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்குள்ள இருந்து ஓடி வந்த முல்லா ,இங்க பாருங்க என்னோட காத நானே கடிச்சதும் வானத்துல இருந்து இந்த தங்க காசு வந்து விழுந்துச்சு ,அப்ப யாரெல்லாம் தங்களோட காத கடிக்குறாங்களோ அவுங்களுக்கு வானத்துல இருந்து தங்க காசு கிடைக்குது

Mulla Returns with Gold Coin Story

அதனால இந்த கணவர் இப்ப , தன்னோட காத கடிச்சி 100 தங்க காசு வர வெச்சு நம்ம எல்லாருக்கும் கொடுப்பாரு ,அப்படி இல்லைனா 100 வெள்ளி காசு பஞ்சாயத்துக்கு அபாரதமா கெட்டுவாருனு சொன்னாரு

Mulla's Challenge to the Husband

இப்ப அந்த கணவரால வேற எதுவும் சொல்ல முடியல , தன்னோட காத தானே கடிச்சிகிட்டான்னு சொன்னா பஞ்சாயத்து ,அப்படி கடிக்க முடியாதுனு சொல்லுவாங்கனு பார்த்த ,கடிக்க முடியும் நீ கடிச்சி காட்டுனு நம்மளையே செஞ்சு காட்ட சொல்ராங்கலேன்னு நினைச்சாரு

Husband Realizes He's Trapped

உடனே முல்லா கிட்டயும் அந்த அம்மா கிட்டயும் மன்னிப்பு கேட்டாரு ,இருந்தாலும் அந்த 100 வெள்ளிக்காசு அபராதத்தை வாங்காம விடல முல்லா

Apology and Fine