Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது

Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது:-ஒரு கிராமத்துல இருக்குற வீட்டுல நிறய எலிங்க வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

அந்த எலிங்க எல்லாம் எப்பவும் வீட்டுல இருக்குற சாப்பாடு எல்லாத்தையும் திருடி தின்னுகிட்டு இருந்துச்சுங்க

அது அந்த வீட்டு பாட்டிக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு ,

இந்த வீட்டுல ஒரு பொருளை கூட பத்திரமா வைக்க முடியலையேன்னு வருத்தப்பட்டுச்சு அந்த பாட்டி

அதனால ஒரு பெரிய பூனையை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சாங்க அந்த பாட்டி

அந்த பூனை வந்ததும் எல்லா எலிங்களையும் ஒவ்வொண்ணா தின்ன ஆரம்பிச்சுசு

அத பார்த்த எலிங்க எல்லாம் தங்களோட வளைக்குள்ளயே இருக்க ஆரம்பிச்சுச்சுங்க

அப்பத்தான் ஒரு வயசான எலி செயல்லுச்சு , நாம எல்லாம் நிம்மதியா இருக்கணும்னா அந்த பூனை வர்த்த முன்கூட்டியே தெரிஞ்சிக்கிடனும்

அதுக்கு அந்த பூனை கழுத்துல ஒரு மணிய கட்டி விட்டுடுவோம் ,அப்புறம் அந்த பூனா எங்க இருக்குனும் ,எங்க போகுதுனும் நாம சுலபமா தெரிஞ்சிக்கிடலாம்

நாம சாப்பிடும்போது அந்த பூன வந்தாலும் அந்த மணியோட சத்தை கேட்டு நாம ஓடி ஒளிஞ்சிக்கிடலாம்னு சொல்லுச்சு அந்த வயசான எலி

அப்பத்தான் அங்க இருந்த குட்டி எலி ஒரு முக்கியமான கேள்வி கேட்டுச்சு ” எல்லாம் சரி ஆனா அந்த பூன கழுத்துல யார் மணிய கட்டுவாங்கனு”

அதுக்கு அங்க இருந்த யார் கிட்டயும் பதிலும் துணிவும் இல்ல

நீதி : ஒன்றைச் செய்ய வேண்டும் என்று சொல்வது ஒன்று, ஆனால் அதைச் செய்து முடிப்பது வேறு