The Boy & the Filberts – பையனும் பட்டாணியும்

The Boy & the Filberts – பையனும் பட்டாணியும் :- ஒரு கிராமத்துல ஒரு சின்ன பையன் இருந்தான்

the-boy-the-filberts

அவன் அவுங்க அம்மா அப்பாவோட வாழ்ந்துகிட்டு வந்தான்

ஒருநாள் ஒரு சின்ன குடத்தை எடுத்து அதுல கொஞ்சம் பட்டாணியை போட்டு அந்த பையன வேணும்ங்கிற அளவு பட்டாணிய எடுத்து சாப்பிட சொன்னாங்க அந்த அம்மா

உடனே அந்த சின்ன கொடத்தோட சின்ன வாய் வழியா கைய விட்ட அந்த பையன் நிறய பட்டாணியை அள்ளுனான் ,அப்படி அள்ளுன அவனோட கை அந்த குடத்துல மாட்டிகிடுச்சு

அந்த குடத்துல இருந்து பட்டாணியோட சேர்த்து தன்னோட கைய வெளியில எடுக்க முடியாம போனதும் அந்த பையனுக்கு அழுகையா வந்துச்சு அதனால அவன் அழுக ஆரம்பிச்சான்

அப்பத்தான் அவுங்க அம்மா சொன்னாங்க உன்னோட ஆசைப்படி பட்டாணிய எடுக்க முடியலைன்னா எந்த அளவு பட்டாணி எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு உன்னோட ஆசைய சுருக்கிக்கொ

அப்பத்தான் உன்னால அந்த கைய வெளியில எடுக்க முடியும் ,மறுபடியும் உனக்கு சந்தர்ப்பம் கிடைக்குறப்ப திரும்பவும் பட்டாணிய எடுக்குற சந்தர்ப்பம் கிடைக்கலாம்

அத விட்டுட்டு உனக்கு தேவையான அளவுக்கு பட்டாணியை எடுத்தே தீருவேன்னு ஆடம் பிடிச்சா எதுவுமே நடக்காதுனு சொன்னாங்க

உடனே அந்த பையன் கொஞ்சம் பட்டாணிய மட்டும் எடுத்துட்டு ,அந்த குடத்துல இருந்து கைய வெளியில எடுத்தான்

இப்ப அவனுக்கு அவன் ஆச பட்ட அளவுக்கு கொஞ்சம் பட்டாணியும் , திரும்ப பட்டாணியை எடுக்கு வாய்ப்பும் நிறய கிடைச்சது