வாசலில் செல்வம் அக்பர் பீர்பால் கதைகள்-Akbar Birbal Story

வாசலில் செல்வம் அக்பர் பீர்பால் கதைகள்-Akbar Birbal Story:- அக்பர் அரசவையில் செல்வம் என்ற வேலையாள் ஒருவன் வேலை செய்து வந்தான். ஒருமுறை அரசவை நடந்து கொண்டிருக்கும் பொழுது அக்பருக்கு நீர் கொண்டு வந்த அவன் தவறுதலாக அரசரின் மேல் நீரை சிந்தி விட்டான்.

 மக்களின் குறைகளை கேட்டு வந்துகொண்டிருந்த அக்பருக்கு கோபம் வந்தது இவனை வேலை விட்டு அனுப்பி விடுங்கள் என்று கூறிவிட்டு அரண்மனை வேலைகளை தொடர்ந்து செய்ய தொடங்கினார் அவர்.

வாசலில் செல்வம் அக்பர் பீர்பால் கதைகள்-Akbar Birbal Story:- அக்பர் அரசவையில் செல்வம் என்ற வேலையாள் ஒருவன் வேலை செய்து வந்தான். ஒருமுறை அரசவை நடந்து கொண்டிருக்கும் பொழுது அக்பருக்கு நீர் கொண்டு வந்த அவன் தவறுதலாக அரசரின் மேல் நீரை சிந்தி விட்டான்.

 ஏழ்மை நிலையில் இருந்த செல்வம் மிகுந்த மனவேதனைக்கு ஆளானான். அன்று இரவு பீர்பாலை சந்தித்த செல்வம் பீர்பால் அவர்களே நான் மிகுந்த ஏழ்மையில் உள்ளேன் நான் செய்த சிறு தவறுக்கு அரசர் எனக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து விட்டார்.

 அரண்மனைச் சேவகம் மட்டும் இல்லை என்றால் என்னால் எனது குடும்பத்தை பராமரிக்க முடியாது தயவு செய்து என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டு எனக்கு மீண்டும் பணி வழங்குமாறு அரசிடம் அனுமதி பெற்று தாருங்கள் என்று வேண்டி கேட்டுக் கொண்டான்.

வாசலில் செல்வம் அக்பர் பீர்பால் கதைகள்-Akbar Birbal Story:- அக்பர் அரசவையில் செல்வம் என்ற வேலையாள் ஒருவன் வேலை செய்து வந்தான். ஒருமுறை அரசவை நடந்து கொண்டிருக்கும் பொழுது அக்பருக்கு நீர் கொண்டு வந்த அவன் தவறுதலாக அரசரின் மேல் நீரை சிந்தி விட்டான்.

 அவனது நிலையையும் அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் பெரியது என்பதையும் உணர்ந்து இருந்த பீர்பால் நாளை அரசவைக்கு வருமாறு செல்வத்திடம் கூறினார். நீ வரும்போது அரண்மனை வாசலில் நின்று செல்வம் வந்துள்ளேன் நீங்கள் அனுமதித்தால் உள்ளே வருகிறேன் என்று மட்டும் கூறு. உனக்கு வேலை கிடைக்கும் வரை இந்த வாசகத்தை திரும்பத் திரும்ப கூறவும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 மறுநாள் காலை அரண்மனை வாசலுக்கு வந்த செல்வம் பீர்பாலின் சொல்படி செல்வம் வந்துள்ளேன் உள்ளே வர அனுமதி வேண்டும் என்று கூறினான் இந்த செய்தி அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. செல்வத்தை வேண்டாம் எனக் கூறுவது வாய்மொழியாக கூட தவறு என்பதை அறிந்திருந்த அரசர் அவனை உள்ளே வரச் சொல்லுங்கள் என்று கூறினார்.

 அரசவை வாசலில் வந்து நின்ற செல்வம் மீண்டும் செல்லம் வந்துள்ளேன் உள்ளே வர அனுமதியுங்கள் என்று கூறினான் இதைக் கேட்ட அக்பர் அவனை உள்ளே வரச் சொல்லுங்கள் என்று கூறினார் உள்ளே வந்த  செல்வமும் மீண்டும் கூறினான் செல்வம் வந்துள்ளேன் என்னை அனுமதியுங்கள் என்றான்.

 இதைக்கேட்ட அரசருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது  நீ மீண்டும் பணியில் சேர்வதற்கு பீர்பால் சொல்லிக் கொடுத்தது தானே இது என்று கேட்டார்.

வாசலில் செல்வம் அக்பர் பீர்பால் கதைகள்-Akbar Birbal Story:- அக்பர் அரசவையில் செல்வம் என்ற வேலையாள் ஒருவன் வேலை செய்து வந்தான். ஒருமுறை அரசவை நடந்து கொண்டிருக்கும் பொழுது அக்பருக்கு நீர் கொண்டு வந்த அவன் தவறுதலாக அரசரின் மேல் நீரை சிந்தி விட்டான்.

 ஆம் அரசே என்னை செல்வமாக அறிமுகப்படுத்த சொல்லி கூறினார் பீர்பால்,செல்வத்தை வேண்டாம் என சொல்பவர் எவரும் இல்லை ஆகையால் உனக்கு கண்டிப்பாக மன்னிப்பு கிடைக்கும் எனவே இவ்வாறு கூறு என்று பீர்பால் சொன்னதாகவும் அரசரிடம் கூறினார் செல்வம்.

 சாதுரியமாக தண்டனை பெற்ற ஒருவனை என்னை சந்திக்கும் படி செய்த பீர்பாலின் மதி நுட்பத்தை எண்ணி மகிழ்ந்தார் அரசர்