முட்டாள் விறகுவெட்டி-Stupid woodcutter-Kids Story

முட்டாள் விறகுவெட்டி-Stupid woodcutter-Kids Story:-ஒரு ஊருல ஒரு விறகுவெட்டி இருந்தாரு அவருக்கு ரொம்ப வயசாகிட்டதால இனிமே தன்னோட மகன விறகு வெட்ட அனுப்ப நினைச்சாரு

ஆனா அந்த விறகுவெட்டியோட மகன் ரொம்ப முட்டாளா இருந்தான் ,அவனுக்கு என்ன படிப்பு சொல்லி கொடுத்தாலும் அறிவுரை சொன்னாலும் அவனுக்கு அறிவு வளரவே இல்ல

இருந்தாலும் தன்னோட மகனை விறகுவெட்ட அனுப்பிச்சு வச்சாரு அந்த அப்பா

முட்டாள் விறகுவெட்டி-Stupid woodcutter-Kids Story

எனக்கு விறகு வெட்ட தெரியுமே தவிர ,எந்த மரத்தை வெட்டனும்னு தெரியாதுன்னு சொன்னான் அந்த பையன்

நீ நேரா கட்டுக்குக்கு வண்டிய எடுத்துட்டு போ ,அங்க நிறைய விறகுவெட்டிங்க விறகு வெட்டிக்கிட்டு இருப்பாங்க அவுங்க வெட்டுற மரங்கள் பக்கத்துல அதுமாதிரியே இருக்குற மரத்த வெட்டுனு சொல்லி அனுப்பிச்சாரு அந்த விறகுவெட்டி

காட்டுக்கு போன அந்த பையன் விறகுவெற்றவங்க மரத்தை வெட்டி கீழ தள்ளி அப்புறமா வண்டியில ஏத்துறத பாத்தான்

இது எதுக்கு எப்படி ரெண்டு வேல செய்யுராங்கனு நினச்சு மரத்துக்கு அடியில கட்ட வண்டிய நிப்பாட்டி மரத்தை வெட்ட ஆரம்பிச்சான்

முட்டாள் விறகுவெட்டி-Stupid woodcutter-Kids Story

மரம் சடார்னு வண்டி மேல விழுந்து வண்டி உடைஞ்சு போச்சு

தன்னோட முட்டாள் தனத்தால வண்டி உடைஞ்சு போச்சேன்னு கூட அவனுக்கு புரியல வண்டி ரொம்ப பலம் குறைவா இருக்குனு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டான்

முட்டாள் விறகுவெட்டி-Stupid woodcutter-Kids Story

அவன் செஞ்ச முட்டாள் தனத்தை நம்பி அவனுக்கு வேலை சொல்லி அனுப்பிச்ச அவுங்க அப்பா ரொம்ப வறுத்த பட்டாரு