Mulla Buying An Elephant யானை வாங்கிய முல்லா –அறிவாற்றல் நிறைஞ்சி இருந்த முல்லா தன்னோட அறிவை பயன்படுத்தி தன்னோட பிரச்சினைகளை தீர்த்து கிட்டது மட்டுமில்லாம மத்தவங்களையும் கவனமா பாத்துக்கிட்டாரு தேவையில்லாத விஷயத்துல அவங்க போயி தங்களுடைய மனநிம்மதியை இழக்ககுறத முல்லா தடுத்துகிட்டே வந்தாரு

முல்லா சந்தையில போய் வியாபாரம் பார்க்கிறதுனால அங்க இருக்குற வியாபாரிகளோட நலனையும் அவர் பராமரிச்சுகிட்டு வந்தாரு அப்பத்தான் வெளியூரிலிருந்து ஒரு வட்டிக்கு பணம் கொடுக்கிறவர் அந்த ஊருக்கு குடி வந்தாரு

சந்தையில் வியாபாரம் பாக்குற வியாபாரிகளுக்கு கொஞ்சம் கொஞ்சம் கடன் கொடுத்து அவங்க கிட்ட இருந்து வட்டி வாங்கி பொழப்பு நடத்துனாரு அந்த புதுசா வந்த நபர்

இத முதல்ல சாதாரணமாகத்தான் பார்த்தாலும் உள்ள ஆனா கொஞ்ச காலத்துக்கு அப்புறம் அவரு தேவையில்லாத செலவுகளை வியாபாரிகளுக்கு இழுத்து விட்டு அதிக பணம் சம்பாதிக்கிறதா கவனிச்சாரு முல்லா

நீங்க என்ன வெறும் பஞ்சுமூட்ட மட்டும் வச்சு வியாபாரம் பார்த்துகிட்டு இருக்கீங்க நீங்க தலையணை வியாபாரமும் சேர்ந்து பார்த்தீங்கன்னா நீங்க உலகத்திலேயே பணக்காரனா ஆயிடுவீங்க நான் உங்களுக்கு பணம் தரேன் நீங்க எனக்கு வட்டி மட்டும் கொடுங்க அசல நான் அப்புறமா வாங்கிக்கிறேன் இது மாதிரி ஒவ்வொருத்தர்டையும் ஒவ்வொரு மாதிரி பேசி அவர் பணம் கொடுத்து வாரவாரம் வட்டின்ற பேர்ல அதிக பணத்தை வசூல் பண்ணி அங்கே இருக்கிற வியாபாரிகள தொந்தரவு செஞ்சுகிட்டு இருந்தாரு

வியாபாரிகளும் தாங்க சம்பாதிக்கிறத விட நிறய பணத்த வட்டின்ற பேருல வீணடிச்சு கிட்டு இருக்கோம்னு தெரியாம வட்டி கட்டி கிட்டு இருந்தாங்க ,இத பார்த்த முல்லாவுக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு இந்த ஆளுக்கு சரியான பாடம் கற்பிச்சி இந்த ஊரை விட்டு துரத்தணும்னு முடிவு செஞ்சாரு

அப்படித்தான் ஒரு நாள் வட்டி பணம் வசூலிக்கிறதுக்கு சந்தையில வந்து எல்லாரையும் அதட்டி பணம் வாங்கிட்டு இருந்த அந்த வட்டிக்கடைக்காரர் கிட்ட ஐயா நானும் ஒரு புது தொழில் செய்யப் போறேன் எனக்கு நீங்க பணம் குடுங்க அப்படின்னு கேட்டாரு ஆஹா புதுசா ஒரு அடிமை நம்மகிட்ட மாட்டி கிடிச்சு அப்படின்னு நினைச்ச அந்த வட்டிக்கு கொடுக்குறவரு நீங்க என்ன தொழில் செய்ய போறீங்க ஐயா உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும் அப்படின்னு கேட்டாரு

நான் பொதி தூக்கிட்டு போறதுக்கு கழுதை வச்சிருக்கேன் ஆனா நான் நிறைய வியாபாரம் செய்ய போறேன் அதனால கழுதைக்கு பதிலா யானை வாங்கலாம்னு இருக்கேன் அதுக்கு நீங்க தான் பணம் கொடுத்து உதவனும் அப்படின்னு சொன்னாரு

அத கேட்ட அந்த வட்டிக்கு விடுபவருக்கு தூக்கி வாரி போட்டுச்சு ஐயா இங்க உண்மையா தான் சொல்றீங்களா யானை வாங்குவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா அதுக்கு எவ்வளவு பணம் செலவு பண்ணனும் தெரியுமா யானை வாங்கினா மட்டும் போதாது அதுக்கு தினமும் சாப்பாடு கொடுக்கணும் அதுக்கும் பணத்துக்கு எங்க போவீங்க அப்படின்னு கேட்டாரு

சாதாரண வியாபாரம் செய்யுறவர்களை மேலும் வியாபாரம் செஞ்சு உலகத்திலேயே பணக்காரனா மாத்தி விடற உங்களுக்கு தெரியாதா ,அதோட உணவு செலவு ,மருத்துவ செலவு எல்லாத்துக்கும் உங்க கிட்ட தான் பணம் கேப்பேன் ,அதை வச்சு என்னோட யானைய நல்ல படியா வச்சு வியாபாரம் செஞ்சு உலகத்துலயே பணக்காரனா ஆகிடுவேன் , நீங்க தினம் எனக்கு வந்து காசு கொடுத்துக்கொண்டே இருங்க அப்படின்னு சொன்னாரு

தன்னோட வட்டிக்கு வர்ற தொழில் நாணயமா இல்லைங்கறது தான் முல்லா சுட்டி காட்டுகிறாருனு அவருக்கு புரிஞ்சி போச்சு , அந்த வட்டி கடைக்காரர் அன்னையிலருந்து தேவையில்லாத ஆசை வார்த்தைகள கூறி அடுத்தவங்களை மோசம் பண்ற விஷயத்தை சுத்தமா விட்டுட்டாரு

அத பார்த்த வியாபாரிகளும் இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆச படுற மாதிரி ,வட்டிக்கு பணம் கொடுக்கிறவர் சொன்னத கேட்டு தேவை இல்லாம கடன் வாங்குனத நினைச்சு வறுத்த பாத்தாங்க ,உடனே அந்த கடனை அடிச்சிட்டு தங்களோட வியாபாரத்த நல்ல படியா செஞ்சு கிடைக்குற பணத்தை எல்லாம் சேமிச்சு வச்சு வாழ்க்கையில உயர்ந்தாங்க ,இதுக்கு காரணமான முல்லாவுக்கு நன்றி சொல்ல மறக்கல அவுங்க