Mulla and two beggers – முல்லாவும் இரண்டு பிச்சை காரர்களும் :-முல்லாவுக்கு பிச்சைக்காரர்களை பார்த்தாலே பிடிக்காது அதுவும் நல்ல உடம்ப வச்சுக்கிட்டு உழைக்காம ஊரார் காசை பிச்சை எடுத்து சாப்பிடறவங்கள பாத்தா முல்லாவுக்கு எப்பவும் கோபம் தான் வரும்

முல்லா ஒரு தடவ பக்கத்து ஊர் சந்தைக்கு போயி வியாபாரம் பண்ணலாமானு நினைச்சாரு அந்த ஊருக்கு முல்லா அடிக்கடி பயணம் போயி சந்தையில வியாபாரம் பார்த்தவர் தான் அதனால அங்க இருக்கிறவங்க நிறைய பேத்த முல்லாவுக்கு தெரிஞ்சி இருந்துச்சு

சந்தையில வியாபாரத்தை முடிச்ச முல்லா வீட்டுக்கு கிளம்புறப்ப தான் பார்த்தாரு அந்த சந்த ஆரம்பிக்கிற இடத்துல ரெண்டு பிச்சைக்காரங்க உட்கார்ந்து பிச்சை எடுத்து கிட்டு இருக்கிறத ,ஆனா அவங்க ரெண்டு பேரோட முகம் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கே அப்படின்னு உள்ள சந்தேகப்பட்டாரு முல்லா ,ஒரு வேலை நமக்கு தெரிஞ்சவங்களா இருக்குமோனு அவுங்க யாருனு பார்க்க போனாரு ,

கிட்டக்க போய் பார்த்தப்ப தான் தெரிகிறது அந்த ரெண்டு பிச்சைக்காரர்களும் இதே சந்தையில வியாபாரம் செஞ்சிட்டு வந்தவங்க தான் என்ன காரணம் இப்படி பிச்சை எடுக்கிற நிலைமைக்கு அவங்க வந்து இருக்காங்கனு யோசிச்சாரு முல்லா ,

அவங்க முகத்தை நல்ல பார்த்தப்பததும் முல்லாவுக்கு புரிஞ்சு போச்சு அவங்க ஏன் பிச்சை எடுக்க நிலைமைக்கு வந்தாங்கன்னு முல்லாவுக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருந்துச்சி, இருந்தாலும் முதல்ல பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவர் கிட்ட போயி நீ தானே கிடைக்கிற காசை எல்லாம் வீணடிச்சுட்டு தீய சவகாசங்கள் வச்சுக்கிட்டு இந்த சந்தையில சுத்திக்கிட்டு இருந்த ஆளு அப்படின்னு கேட்டாரு அதுக்கு அந்த பிச்சைக்காரர் சொன்னாரு ஆமாங்க ஐயா நான் தான் அது நிறைய சம்பாதிச்சு எல்லாத்தையும் ஊதாரித்தனமா செலவழிச்சிட்டு இப்படி பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன் அப்படின்னு சொன்னாரு உடனே முல்லா நூறு ரூபாய் தாளை எடுத்து அவருக்கு பிச்சை போட்டாரு

இத பார்த்த இரண்டாவது பிச்சைக்காரர் தனக்கும் இன்னைக்கு 100 ரூபாய் பிச்சை கிடைக்கும் ஏன்னா நான் முதல் பிச்சைக்காரன் மாதிரி ஊதாரித்தனமா செலவு செஞ்சவன் கிடையாது அதனால முல்லா எனக்கு நிறைய ரூபா தனக்கு பிச்சை போடுவாரு அப்படின்னு நினைச்சாரு

ஆனா முல்லா அவனுக்கு ஒண்ணுமே போடாம நடக்க ஆரம்பிச்சாரு அப்பத்தான் அந்த இரண்டாவது பிச்சைக்காரன் கேட்டாரு ஐயா தீய சவகாசங்களோட ஊதாரித்தனமா சுத்திட்டு இருந்த அவனுக்கே நிறைய பணம் பிச்சை போட்டீங்க எனக்கு ஏன் பிச்சை போடாம போறீங்க அப்படின்னு கேட்டாரு அந்த ரெண்டாவது பிச்சக்காரரு

அப்பத்தான் அந்த முல்லா சொன்னாரு இந்த முதல் பிச்சைக்காரனாவது கொஞ்சம் நஞ்ச உழைப்பை போட்டு சம்பாதிச்சு அந்த காசை சேர்த்து வைக்க தெரியாம அழிச்சு இப்படி பிச்சைக்காரனா இருக்கான் ஆனா உன்ன பத்தி எனக்கு தெரியும் நீ ஒழுங்கா உழைக்கவும் இல்லை அடுத்தவங்க கிட்ட வேலை செஞ்சு சம்பாதிக்கவும் இல்ல உனக்கு எதுக்கு நான் எதுக்கு காசு கொடுக்கணும் அப்படின்னு கேட்டார் எல்லாம்

அத கேட்ட அந்த இரண்டாவது பிச்சைக்காரனுக்கு முல்லா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம்னு உரசிச்சு உழைத்து பிழைக்கிறதுக்கு நிறைய வழி இருக்கிறப்ப இப்படி பிச்சை எடுக்கக் கூடாது என்பததான் முல்லா தனக்கு நல்லபடியா உணர்த்திட்டாரு அப்படின்னு நினைச்ச அந்த பிச்சைக்காரன் உடனே அங்கிருந்து எந்திரிச்சு சந்தை குள்ள போய் வேலை தேட ஆரம்பிச்சான்
இத பார்த்த முல்லாவுக்கு அப்பாடா தன்னோட அறிவுரை கேட்டு இந்த பிச்சை காரன் திருந்திட்டானு நினைச்சாரு ,உடனே அந்த முதல் பிச்சைக்காரனை ஒரு எத்து எத்தி போ நீயும் போயி உழைச்சி சம்பாரினு சொல்லிட்டு அவனோட தட்டுல தான் போட்ட பிச்சை காசான 100 ரூபாயையும் எடுத்துகிட்டாரு