கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral Story for Kids to read 002:-ஒரு மலை அடிவாரத்துல இருக்குற மரத்துல ஒரு காக்காய் வாழ்ந்துக்கிட்டு வந்துச்சு ,அந்த காக்கைக்கு அந்த மலைமேல வாழுற கழுகுபோல வாழணும்னு ரொம்ப ஆச
அதனால் கழுகு மாதிரியே வானத்துல பறக்கிறதும் ,வேட்டையாடுறதும் செஞ்சு பாத்துகிட்டே இருக்கும்
ஒருநாள் அந்த கழுகு தன்னோட கூட்டுல இருந்து இறை எதாவது கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருந்துச்சு ,அந்த கழுகு என்ன பண்ணுதுனு பாத்துகிட்டே இருந்துச்சு காக்கா ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு ஆட்டு கூட்டத்துல இருக்குற ஒரு ஆட்டுக்குட்டிய வேகமா பருந்து வந்த அந்த கழுகு தூக்கிட்டு போய்டுச்சு
இத பாத்த காக்காய் இது ரொம்ப சுலபமா இருக்கேனு நினச்சு ,அதுவும் வானத்துல வட்டமடிச்சிட்டு வேகமா பறந்து வந்து ஒரு பெரிய ஆட்டு குட்டிய தூக்க போச்சு
ஏற்கனவே ஆட்டுக்குட்டியை தூக்கிட்டு போன கழுகு மேல கோபத்துல இருந்த ஆட்டுகள் காக்காய ஒரே முட்டு முட்டி கீழ தள்ளி காலால மிதிச்சி கொன்னுடுச்சுங்க
தன்னோட நிலைமைய புரிச்சிக்காம அடுத்தவங்கள மாதிரி வாழ ஆசைப்படுறது எவ்வளவு பெரிய தப்புனு நினச்சுகிட்டே செத்து போச்சு அந்த காக்கா
இந்த கதையை PDF வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்
story is good