தியாகி ஆன முள்ளம்பன்றி – The Porcupine’s Gift

தியாகி ஆன முள்ளம்பன்றி – The Porcupine’s Gift:-குவா காட்டுல நிறைய காட்டு மிருகங்களும் குட்டி குட்டி மிருகங்களும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுல ஒரு முள்ளம்பன்றியும் இருந்துச்சு அத உடம்பு முழுசு இருந்த ஊசிய பார்த்து நிறைய மிருகங்கள் பயந்துச்சுங்க

The Fearful Arrival of the Porcupine

தங்களை எல்லாம் சாப்பிட்டுடும் அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்த பாம்ப கூட முள்ளம்பன்றி சுலபமா தோற்கடிச்சு காட்டுக்குள்ள துரத்துவதை கண்கூட பார்த்த மத்த மிருகங்கள் முள்ளம்பன்றி கிட்ட நட்பு வச்சுக்கிடவே பயந்தாங்க இதனாலேயே முள்ளம்பன்றிக்கு தலைக்கனம் கூட ஆரம்பிச்சுச்சு

The Porcupine's Growing Arrogance and the Snake's Defeat

எல்லா மிருகங்களையும் தன்னோட ஊசி உடம்பால குத்தி துன்புறுத்த ஆரம்பிச்சுச்சு அந்த முள்ளம் பன்றி ,ஒரு நாள் அமைதியா தூங்கிக்கிட்டு இருந்த கழுதையை உரசி தன்னுடைய ஊசியால குத்தி அதோட தூக்கத்தை களைச்சு வேதனைப்படுத்திச்சு முள்ளம்பன்றி உடனே கோவமான கழுத நேரா சிங்கராஜா கிட்ட போயி முறையிட்டுச்சு

Tormenting the Donkey and the King's Warning

முள்ளம்பன்றிய கூப்பிட்டு எச்சரிச்சாரு சிங்கராஜா உனக்கு தலைக்கனம் கூடிப்போச்சு அதனால நம்ம கரடி மந்திரி கிட்ட ஒரு மாசம் பாடம் படிக்கணும் மத்தவங்கள மதிக்க பழகுற வரைக்கும் உன்னோட தகுதி என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு கரடி மந்திரி கிட்ட வேல பாரு அப்படின்னு கட்டளை இட்டுச்சு சிங்க ராஜா இதைத் தொடர்ந்து ஒரு மாசம் கரடி மந்திரி கூட வாழ ஆரம்பிச்சு முள்ளம்பன்றி அப்பத்தான் மத்த மிருகங்களுக்கு உதவனும் அப்படிங்கிற எண்ணம் அதுக்கு வர ஆரம்பிச்சுருச்சு

The Porcupine's Humble Lesson with the Bear Minister

ஒரு நாள் தன்னுடைய குட்டி குகைக்கு வெளியில இருந்த இடத்துல தூங்கிகிட்ட இருந்துச்சு முள்ளம் பன்றி அங்க வேகமா ஓடி வந்த எலி ஒன்னு நாங்க வாழுற இடத்துக்கு பக்கத்துல பூனை ஒன்னு எங்கள தொந்தரவு பண்ணுது எங்கள காப்பாத்துங்க அப்படின்னு சொல்லுச்சு உடனே எலி மேல் பரிதாப பட்ட முள்ளம்பன்றி தன்னோட உடம்புல இருந்து ஒரு ஊசிய பிடுங்கி எலி கிட்ட கொடுத்துச்சு பூனை உங்கள தொந்தரவு செய்ய வந்துச்சுன்னா இதை ஈட்டி மாதிரி பயன்படுத்தி தப்பிச்சுக்கோங்க அப்படின்னு சொல்லுச்சு

Helping the Desperate Mouse

கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குட்டி முயல் முள்ளம்பன்றிய பார்க்க வந்துச்சு தனக்கும் ஒரு ஊசி வேணும் அப்படின்னு கேட்டுச்சு அதை பற்றியும் யோசிக்காத முள்ளம்பன்றி தன்னுடைய உடம்புல இருந்து ஒரு ஊசிய பிச்சு குட்டி முயல் கிட்ட கொடுத்துச்சு இதே மாதிரி தினமும் ஒவ்வொருத்தர் வந்து ஒவ்வொரு ஊசி முள்ளம்பன்றி கிட்ட இருந்து வாங்கிட்டு போனாங்க

The Generous Gifts to Forest Friends

இப்படியே போனதுனால முள்ளம்பன்றியோட முள் ஊசி எல்லாமே தீர்ந்து போச்சு தனக்கு பாதுகாப்பு அரணா இருந்த ஊசி எல்லாத்தையும் அடுத்தவங்களுக்கு கொடுத்துட்டோமே அப்படின்னு கவலை கூட இல்லாம தன்னுடைய வாழ்க்கையை நல்லபடியா வாழ்ந்துகிட்டு இருந்துச்சு முள்ளம்பன்றி, முள்ளம்பன்றிக்கு இப்பொழுது பாதுகாப்பு இல்லை என்று தெரிந்து கொண்ட அதோட சண்டை போட்டு தோத்துப் போன பாம்பு திரும்ப காட்டுக்குள்ள வந்துச்சு

Quill-less and Unworried, the Snake Returns

பாம்பு காட்டுக்குள்ள வந்தது தெரிஞ்சதும் காட்டு மிருகங்கள் எல்லாம் பரபரப்பாகிடுச்சுங்க அது நேரா நமக்கு ஊசி கொடுத்த முள்ளம்பன்றி கிட்ட தான் சண்டைக்கு போகும் அப்படின்னு தெரிஞ்சுகிட்ட மொத்த மிருகங்களும் வேகமாக ஓடிவந்து முள்ளம்பன்றியோட குகையை சுத்தி வட்ட வடிவமாக நின்னுச்சுங்க முள்ளம்பன்றி கிட்ட இருந்து வாங்குன ஊசிகள் எல்லாத்தையும் ஈட்டி மாதிரி பயன்படுத்தி முள்ளம்பன்றிய காவல் காக்க ஆரம்பிச்சுடுச்சுங்க

The Animals' Protective Circle

முள்ளம்பன்றி இப்ப பாதுகாப்பு அரணான முட்கள் எதுவும் இல்லாம இருக்கு அப்படின்னு நினைச்சு சுலபமா அதை வீழ்த்தி அதை இன்னைக்கு சாப்பிடணும்னு நினைச்சுகிட்டு அங்க வந்த பாம்பு இதை பார்த்ததும் ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சு அப்பத்தான் அங்க வந்த கரடி மந்திரி சொல்லுச்சு பார்த்தியா பொறுமையின் பெருமைய நீ அடுத்தவங்களுக்கு உதவி செய்யறதுனால உன்னுடைய பெருமை தான் கூடுது அதுக்காக உன்னையே வருத்திக்கொண்டு அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு அவசியம் கிடையாது முதல்ல உன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு அடுத்தவங்களுக்கு உதவி செய் அப்படின்னு சொல்லுச்சு

The Porcupine's Renewal and Triumphant Return

உடனே முள்ளம்பன்றிக்கு அரண்மனை வைத்தியர் ஆன குரங்கு கிட்ட இருந்து தைலம் வாங்கி உடம்பு முழுவதும் சேர்த்து விட்டது கொஞ்ச நாளிலேயே புது ஊசி முள்ளம்பன்றி உடம்பு முழுசும் வந்துடுச்சு இப்ப இரக்க குணத்தோட முழு பலத்தோட அந்த காட்டுல உலா வந்துச்சு அந்த முள்ளம்பன்றி