யானையின் நடனம் -From Tears to Triumph

யானையின் நடனம் -From Tears to Triumph:-முன்னாடி ஒரு காலத்துல குவா காடுன்னு ஒரு மிகப்பெரிய அடர்த்தியான காடு இருந்துச்சு அந்தக்காடு ரொம்ப அடர்த்தியாவும் அதிக மரங்கள் நிறைந்ததாகவும் இருந்ததால அங்க நிறைய காட்டில மிருகங்கள் வாழ்ந்திட்டு வந்துச்சுங்க

 The Enchanted Forest of Kuva Kadu

அந்தக் காட்ட ஒரு மிகப்பெரிய பலசாலியான சிங்க ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவரோட ஆட்சி நீதி நேர்மைய உலகுக்கு எடுத்துச் சொல்ற மாதிரி நல்லா இருந்துச்சு அதனால குவா காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க

 The Enchanted Forest of Kuva Kadu

அந்தக் காட்டுல சின்னு அப்படின்னு ஒரு பெரிய யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த யானைக்கு அந்தக் காட்டுல வசிக்கிற மிருகங்களோட குழந்தைகளோட விளையாடுறது ரொம்ப பிடிக்கும்,

The Just Rule of Lion Raja

ஆனா அந்த யானை ரொம்ப குண்டா இருந்ததால எல்லாரும் கிண்டல் தான் செய்வார்களே தவறி அதோட நட்பா இருக்க மாட்டாங்க

The Lonely Chubby Elephant

இப்படி இருக்கிறப்பதான் குவா காட்ட ஆட்சி செய்து கொண்டு இருந்த சிங்க ராஜாவுக்கு பிறந்தநாள் வந்துச்சு உடனே காட்டுல இருக்கிற மிருகங்கள் எல்லாம் பிறந்தநாள் அன்னைக்கு திருவிழா மாதிரி கொண்டாடனும்னு முடிவு செஞ்சாங்க

Planning the Grand Birthday Celebration

அப்பத்தான் நரி கூட்டத்துல இருந்த எல்லாரும் நாங்க பிறந்தநாள் விழாவுக்கான எல்லா ஏற்பட்டயும் செய்யுறோம் அப்படின்னு சொல்லுச்சுங்க அப்ப அங்க வந்த குரங்கு கூட்டம் விழாவுக்கு வரவங்களுக்கு கொடுக்கிறதுக்கு பழங்களை எல்லாம் நாங்கள் பறிச்சு கொண்டு வர்றோம் அப்படின்னு சொல்லுச்சுங்க

Foxes and Monkeys Offer Their Help

மரத்து மேல உட்கார்ந்து இதை பார்த்துகிட்டு இருந்த பறவைகள் நாங்க சிங்க ராஜாவை போற்றி பாட்டுப்பாடி வந்த விருந்தினர்கள் எல்லாத்தையும் சந்தோஷப்படுத்துகிறோம் அப்படின்னு சொல்லுச்சுங்க அப்பத்தா அந்த சின்னு யானை எல்லாரையும் தள்ளி விட்டுவிட்டு நடுவுல வந்து நின்னு சொல்லுச்சு நான் வர்ற மிருகங்களை சந்தோஷப்படுத்துவதற்காக ஒரு நடனமாடுறேன் அப்படின்னு சொல்லுச்சு

Birds Sing Praises and the Elephant Steps Forward

அதக் கேட்ட எல்லாம் மிருகங்களும் சிரிப்பா சிரிக்க ஆரம்பிச்சாங்க நீயே இவ்வளவு பெரிய உடம்ப வச்சுக்கிட்டு தத்தக்காப்புதக்கான்னு நடக்குற உன்னால நேரா நடக்கவே முடியாதுப்பா நீ எப்படி நடனமாடி மத்தவங்கள சந்தோஷப்படுத்த முடியும் அப்படின்னு கிண்டல் செய்ய ஆரம்பிச்சாங்க

Laughter and Teasing Echo Through the Forest

இத கேட்டா அந்த சின்னு யானைக்கு ரொம்ப சங்கடமா போச்சு உடனே எதுவும் சொல்லாமல் பக்கத்துல இருக்கிற பெரிய மரத்தடியில போயி உட்கார்ந்து கிடைச்சு எல்லாரும் எல்லாரும் சந்தோஷமா இருக்கிறப்ப நான் மட்டும் இப்படி சோகமா இருக்கேனே எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை வந்துச்சு அப்படின்னு நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டே உட்கார்ந்து இருந்துச்சு. அந்த சின்னு யானை

The Elephant's Hidden Tears

இதையெல்லாம் தன்னோட குகை வாசலில் இருக்கிற பெரிய பாறை மேல இருந்து பாத்துக்கிட்டு இருந்த சிங்க ராஜா பக்கத்துல இருந்த குயில கூப்பிட்டு அது காதுல ஒரு விஷயம் சொன்னாரு உடனே அந்த குயில் நேரா பறந்து போயி சின்னு யானை பக்கத்துல இருக்கிற இடத்துல உட்கார்ந்துச்சு

The Lion's Secret Observation

குயில பார்த்ததும் ஒண்ணுமே பேசாம அமைதியாவே இருந்துச்சு சின்ன யானை அப்பத்தா குயில் பேச ஆரம்பிச்சுச்சு இந்த குவா காட்ட ஆட்சி செய்யற சிங்க ராஜாவோட பிறந்தநாள் விழா நல்லபடியா நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை அப்படின்னு சொல்லுச்சு

The Cuckoo's Arrival

இதைக் கேட்ட உடனே சின்னு யான பதட்டம் ஆயிடுச்சு என்ன இப்படி சொல்ற நம்ம காட்டுல இருக்க எல்லாம் மிருகங்களும் ஒன்னா சேர்ந்து இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட போறோம் நீ மட்டும் இப்படி சொல்லுறியே அப்படின்னு கேட்டுச்சு அப்பத்தான் குயில் சொல்லுச்சு நாங்க பாட்டு பாட போறோம் எங்களுக்கு தாளம் போடுறதுக்கு யாருமே இல்ல

Doubts and Reassurance

உன்னால கூட உன்னோட பெரிய துதிக்கையை வச்சு பெரிய பெரிய கொட்டுகளை அடிச்சு எங்க பாட்டுக்கு தாளம் போட முடியும் ஆனா நீ இப்படி சோகமாக இருக்க அப்படின்னு சொல்லுச்சு உடனே சின்னு யான உற்சாகமாயிருச்சு

 Imagining the Flower Shower

அந்தக்குயில் மேலும் சொல்லுச்சு உன்னோட இவ்வளவு பெரிய துதிக்கையை வச்சுக்கிட்டு அந்த மரத்தை பிடித்து ஆட்டுனேனா அது மேல இருக்கிற பூக்கள் எல்லாம் கீழே விழும் அது பிறந்தநாள் விழாவில் டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கிற குட்டி குட்டி குழந்தை மிருகங்கள் மேல விழுந்துச்சுன்னா இந்த பிறந்தநாள் விழா எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா அப்படின்னு கேட்டுச்சு

The Water Splash Vision

இதைக் கண் கூட்டாம பாத்துக்கிட்டு இருந்தது சின்னு யானை குயில் மேலும் சொல்லுச்சு அங்க பாரு நம்ம பிறந்தநாள் விழா நடக்கிற இடத்துக்கு பக்கத்திலேயே குளம் இருக்கு அதுல உன்னோட துதிக்கையை பயன்படுத்தி நடனமாட்ற குழந்தை மிருகங்கள் மேல தூவி விட்டேனா அவங்களும் உற்சாகமாகி நடனமாடு வாங்க இது தெரியாம நீ இப்படி சோகமா இருக்க நான் என்ன செய்யப் போறேன் தெரியல அப்படின்னு சொல்லிட்டு பறந்து போயிடுச்சு

The Vow and Joyful Celebration

தன்னை நடனம் ஆடக்கூடாது அப்படின்னு தன்னோட உடல் உடலைப் பார்த்து கிண்டல் செஞ்சவங்களுக்கு முன்னாடி இந்த பிறந்தநாள் விழாவை நல்லபடியா கொண்டாடுவேன் அப்படின்னு சபதம் எடுத்துக்கிட்ட சின்னு யானை பிறந்தநாள் விழா அன்னைக்கு குயில் சொன்ன எல்லாத்தையும் செஞ்சுச்சு அதை பார்த்த எல்லா குட்டி குட்டி மிருகங்களும் ரொம்ப சந்தோசமாயிடுச்சுங்க அன்னைக்கு நடந்த சிங்க ராஜாவோட பிறந்தநாள் விழாவுல சின்னு யானை செஞ்சது தான் எல்லாருக்கும் பிடிச்சி இருந்துச்சு

The Heart of True Leadership

காட்டையே ஆட்சி செஞ்சுகிட்டு இருக்கிற ஒரு மிகப்பெரிய சிங்க ராஜாவுக்கு இவ்வளவு பெரிய பிறந்தநாள் விழா நடக்கிறது ஏன்னா அங்க இருக்கிற எல்லாரையும் புரிஞ்சுச்சு தன் கிட்ட வந்து தங்களுடைய குறையை சொல்லாம நிறைய பேரு இருப்பாங்க அவங்களோட குறைகளையும் தெரிஞ்சுக்கிட்டு ஆட்சி செய்யறவங்க தான் அவங்களுக்கு நல்லது செய்ய முடியும்

 A Lesson for the World

அதே மாதிரித்தான் இதை சின்னு யானையை பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டு , அது கேக்காமலே அதா உற்சாகப்படுத்தி நல்லபடியா பிறந்தநாள் விழாவை நடத்த வைத்து அதை சந்தோஷப்படுத்துண சிங்கராஜா உலகம் எல்லாத்துக்கும் இதை ஒரு பாடமாகவே எடுத்துச் சொல்லுச்சு