குவா காட்டில் குட்டிப்புலி – The Roar That Saved the Jungle

குவா காட்டில் குட்டிப்புலி – The Roar That Saved the Jungle:-குவா காட்டுல புதுசா ஒரு குட்டி புலி பொறந்துச்சு அத பாக்குறதுக்கு அந்த காட்டுல இருந்த பெரிய பெரிய காட்டு மிருகங்கள் எல்லாம் வந்துச்சு

The Birth of the Little Tiger

அப்பத்தான் அந்த குட்டிப் புலியோட குரலை எல்லாரும் கேட்டாங்க அது சாதாரண புலிகள் உருமறது மாதிரி இல்லாம வித்தியாசமா இருந்துச்சு அத கேட்டுட்டு அந்த இருந்த மிருகங்கள் எல்லாம் கிண்டலா பேச ஆரம்பிச்சுதுங்க

The Unusual Roar

குட்டிப்புலி வளர ஆரம்பிச்சதும் அதோட குரல் இன்னும் மோசமா தான் போச்சு நண்பர்கள் ஆன குட்டி மிருகங்களோட விளையாடும் போது கூட எல்லாரும் குட்டிப்புலியோட உறுமல் சத்தத்தை கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க

Growing Pains and Playtime Mockery

அது குட்டி புலிக்கு ரொம்ப சங்கடத்தை ஏற்படுத்துச்சு அப்படி இருக்கிறப்ப தான் ஒரு நாள் அந்தக் காட்ட ஆட்சி செய்து கொண்டு இருந்த சிங்கராஜாவுக்கு அடியில வேலை பார்த்த ஒரு கரடி மந்திரிய சந்திச்சு குட்டி புலி

A Chance Encounter

கரடி மந்திரி கிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்த புலி தன்னோட வருத்தத்தை சொல்ல ஆரம்பிச்சுச்சு நான் பிறக்கும்போதே எனக்கு குரல் வேற மாதிரி இருந்துச்சு இது போக போக எல்லாரும் கிண்டல் பண்ற ஒரு விஷயமா மாறிடுச்சு அதனால என்னோட தன்னம்பிக்கையே போயிடுச்சு அப்படின்னு சொல்லுச்சு புலி

Pouring Out the Heart

அதக் கேட்ட கரடி மந்திரி சொல்லுச்சு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயத்துல தனித்திறமை இருக்கும் அது சிலருக்கு வித்தியாசமா ஆனதா கூட இருக்கலாம் அப்படின்னு சொல்லுச்சு இதுக்கெல்லாம் நீ கவலைப்பட்டேனா உன்னால காட்ட ஆளுற சிங்க ராஜா மாதிரி பெரிய ஆளா வர முடியாது அதனால யார் கிண்டல் செஞ்சாலும் அவங்கள ஒதுக்கி தள்ளிட்டு உன்னோட வாழ்க்கையை நீ வாழு அப்படின்னு சொல்லுச்சு

Words of Wisdom

என்னதான் கரடி மந்திரி ஆறுதல் சொன்னாலும் குட்டி புலி மனவருத்த தோட இருந்துகிட்டே இருந்துச்சு அப்பத்தா கரடி மந்திரி குட்டி புலிய பார்க்க வந்தாரு சிங்க ராஜாவோட ஆட்சியில புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்து இருக்கோம் அந்தத் திட்டத்தை காட்டுல இருக்கிற எல்லாம் மிருகங்களுக்கு கிட்டயும் சொல்லணும் அதுக்கு சரியான ஆள் நீ தான் உன்னோட குரல் வித்தியாசமா இருக்கு அதனால பாறை மேல நின்னு பேசினா கடைக்கோடி காட்டுல இருக்குற மிருகங்கள் வரைக்கும் உன்னோட குரல் கேட்கும் அப்படின்னு சொல்லுச்சு

From Sorrow to Opportunity

இதைக் கேட்ட குட்டி புலி உற்சாகம் ஆயிடுச்சு உடனே சிங்க ராஜா சொன்ன செய்தியை ஒரு பாறை மேலே ஏறி நின்னு சத்தமா சொல்லுச்சு சாதாரண புலி உறுமல் மாதிரி இல்லாம வித்தியாசமான கரகர குரலில் அரச சொன்ன விஷயம் எல்லா மிருகங்களுக்கும் கேட்டுச்சு உடனே எல்லாம் மிருகங்களும் ஒன்று கூடி சிங்க ராஜா சொன்ன திட்டத்தை ஏத்துக்கிட்டாங்க

 The Grand Announcement

அன்னையிலிருந்து குவா காட்டுல இருக்கிற அரசு அதிகாரியாக அந்த குட்டி புலி மாறிடுச்சு அவசர காலங்களில் மிருகங்களை காப்பாத்துறதுக்கும் சிங்கராஜா சொல்ல நினைச்ச செய்திய எல்லா காட்டு விலங்குகளுக்கும் கொண்டு போய் சேர்க்கறதுக்கும் உதவியா இருக்க குட்டி புலி ஆரம்பிச்சுச்சு

Rising to Official Duty

ஒரு தடவ காட்டுக்குள்ள தீ விபத்து ஒன்னு நடந்துச்சு அப்பத்தான் சிங்க ராஜா துரிதமா செயல் பட்டு யானைகளை உடனடியா தீ ஏறியிற இடத்துக்கு வர சொன்னாரு ,இது கேட்ட குட்டி புலி ஒரு பாறை மேல ஏறி நின்னு சத்தமா சொல்லி யானைகளை வர சொல்லுச்சு ,தொலை தூரத்துல இருந்த யானைகளுக்கு இது தெளிவா கேட்டுச்சு உடனே அதுங்க வேகமா சிங்க ராஜா கிட்ட ஓடி வந்தாங்க

The Fire Emergency Call

கூடாமா வந்த யானைகள் குளத்துல இருக்குற தன்னிய தங்களோட துதி கையில உறிஞ்சி தீ எறிஞ்சி கிட்டு இருந்த இடத்துல தூவுனாங்க ,குட்டி புலியோட திறமையினால தான் இந்த விபத்து கூடிய விரைவுல தடுக்க முடிஞ்சதுனு கரடி மந்திரி சொல்லுச்சு ,உடனே குட்டி புலிக்கு வீர பதக்கம் கொடுத்தாரு சிங்க ராஜா

Quenching the Flames and Hero's Honor

தன்னோட குறைய நிறைய மாத்துன கரடி அமைச்சர தன் வாழ்நாள் முழுவதும் குருவா நினைச்சு தன்னுடைய வாழ்க்கையை ஒரு அரசு அதிகாரியா வாழ்ந்துச்சு அந்த குட்டி வீரப் புலி

A Life Transformed