Woodpecker and watch tower-மரம்கொத்தியும் பறவைகளும் :- ஒரு காட்டுல நிறய பறவைகள் இருந்துச்சு
அந்த பறவைகள் அங்க இருக்குற தானியங்களை தின்னு வாழ்கை நடத்திக்கிட்டு இருந்துச்சுங்க
ஒருநாள் ஒரு நரி கூட்டம் அந்த காட்டுக்குள்ள வந்துச்சுங்க
அதுங்கள பார்த்ததும் எல்லா பறவைகளுக்கும் பயம் வந்துடுச்சு ,அந்த நரிங்க கிட்ட இருந்து தங்களை பாதுகாக்க ஒரு யோசனை செஞ்சுச்சுங்க அந்த பறவைகள்
அத்துப்படி ஒரு பெரிய மரத்து மேல ஒரு கன்கானிப்பு பாதுகாப்பு வீடு கட்டி அதுல தினமும் ஒரு பறவை பாதுகாப்புக்கு உக்காரனும்
அப்படி உக்காருற பறவை நரிகள் கூட்டம் வந்தா எல்லாருக்கும் தெரியப்படுத்தணும்னு முடிவு பண்ணுச்சுங்க
அத்துபடி தினமும் ஒரு பறவை நரிகளோட நடமாட்டத்தை சொல்லி எல்லா பறவைகளையும் பாதுகாத்துச்சு
அப்ப ஒருநாள் மரங்கொத்தி பறவையோட முறை வந்துச்சு ,கங்காணிப்பு கோபுரத்துக்கு வந்த மரம்கொத்தி அங்க இருந்து பாதுகாக்க ஆரம்பிச்சுச்சு
கொஞ்ச நேரம் ஆனதும் அதுக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு ,உடனே அந்த கோபுரம் கட்டி இருந்த கட்டைய கொத்த ஆரம்பிச்சுச்சு
கொஞ்ச நேரத்துல அந்த கோபுரம் ஒடஞ்சு கீழ விழுந்துடுச்சு ,
மறுநாள் வந்த எல்லா பார்வைகளும் பிறவி குணம் தெரியாம மரம்கொத்திய வேலைக்கு விட்டுட்டு போனது தங்களோட தப்புனு புரிஞ்சிகிட்டு
இனிமே பாதுகாப்பு வேலைக்கு மரம்கொத்திய விட கூடாதுனு முடிவு செஞ்சுச்சுங்க