Who stole the Donkey? Mulla -quick bedtime stories for kids- காணாமல் போன கழுதை

Who Will Feed the Donkey? Mulla -quick bedtime stories for kids- காணாமல் போன கழுதை :- என்னதான் முல்லா தன்னோட அறிவாற்றலை வச்சு ஊருல இருக்குற எல்லாத்தையும் சமாளிச்சிகிட்டு வந்தாலும் அவரோட மனைவியை திருப்தி படுத்துறது அவ்வளவு லேசா இல்ல முல்லாவுக்கு

எப்ப பாத்தாலும் குதர்க்கமான கேள்வியும் ,குதர்க்கமான பதிலும் சொல்ற பொண்டாட்டிய வச்சிட்டு முல்லா பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல ,அவுங்களுக்கு முல்லாவோட புகழ் உலகம் முழுசும் பரவி கிடக்கிறது கூட பிடிக்கல ,எப்பவும் முல்லாவ ஒரு முட்டாளாவே பார்த்தாங்க

அடுத்தவங்களுக்கு ஒரு பிரச்சனைனா அறிவுள்ள கருத்துக்களை சொல்ற முல்லா தன்னோட மனைவி கிட்ட மட்டும் எந்த வித பதிலும் சொல்லமுடியாம தவிச்சாரு ,அப்படி இருக்கிறப்ப ஒருநாள் முல்லாவும் அவரோட மனைவியும் தங்களோட நண்பர் வீட்டு திருமணத்துக்கு புறப்புட்டாங்க

தங்களோட உடைகளையும் உடமைகளையும் கழுதை மேல ஏத்திக்கிட்டு ரெண்டு பேரும் காட்டு வழியில நடந்து போக ஆரம்பிச்சாங்க ,

Hearing the Peacock Call in the Forest

அப்ப ஒரு மயில் கத்துற சத்தம் கேட்டுச்சு ,அப்ப முல்லா சொல்ல ஆரம்பிச்சாரு அடர்ந்த காட்டு பகுதியில இப்படி மயில் சத்தம் கேட்டா மழை வர்றதுக்கு அறிகுறின்னு சொன்னாரு

Wife's Mocking Response to Peacock Comment

இத கேட்ட முல்லாவோட மனைவி ஆமாம் இவர் பெரிய வானிலை அறிஞர் நிறய அறிவியல் கண்டு பிடிப்புகள் வச்சிருக்காருனு சொல்லி கிண்டல் செஞ்சாரு ,முல்லா அதுக்கு எதுவும் பேசாம நடக்க ஆரம்பிச்சாரு

Mulla Walking Silently After Mockery

அப்பத்தான் மாட்டு சாணம் கீழ கிடைக்கிறத ரெண்டு பேரும் பார்த்தாங்க ,உடனே முல்லா சொல்ல ஆரம்பிச்சாரு இவ்வளவு சாணம் மாடால போட முடியாது ஒரு வேல இது யானையோட சானியா இருக்கலாம்னு சொன்னாரு

Discovering the Dung on the Path

அதுக்கு முல்லாவோட மனைவி சொன்னாங்க அடடடா எப்ப பார்த்தாலும் உங்களோட வாய் பேச்ச கேட்டுகிட்டே தான் நான் இருக்கணுமா ,மயில் கத்துனா எனக்கு என்ன யானை சாணி கீழ கிடந்தா எனக்கு என்ன ,நீங்க பெரிய புத்தி சாலியா இருக்கலாம் ஆனா இந்த விஷயம் எல்லாம் எனக்கு தேவையில்லாதது

Wife's Long Scolding About Useless Thoughts

தயவு செஞ்சு உங்க யோசனை எல்லாம் உங்ககூடவே வச்சுக்கோங்க ஒரு நாளைக்கு ஒருதடவ என்ன யோசிக்குறீங்கன்னு நானா கேக்குறேன் அப்ப நீங்க யோசிச்சது எல்லாத்தையும் என்கிட்டே சொல்லுங்க ,

Mulla's Instruction to Stay Quiet Until Asked

அப்படி எதாவது உருப்படாத விஷயம் சொல்லணும்னு தோணுச்சுனா வாயில விறல் வச்சிக்கிட்டு அமைதியா இருங்க ,நானா கேக்கற வரைக்கும் அமைதியா இருங்க ,இப்ப என்ன நிம்மதியா நடக்க விடுங்கனு சொன்னாங்க

Mulla Walking Like a Child Behind Her

இத கேட்ட முல்லா வாயில விரலை வச்சிக்கிட்டு சின்ன பிள்ளை மாதிரி அவுங்க பின்னாடி நடக்க ஆரம்பிச்சாரு ,கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா ரெண்டு பேருக்கும் கால் வலிச்சுச்சு ,ஒரு பெரிய ஆலமரத்தை பார்த்தாங்க ,அதோட நிழல்ல கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிட்டு போகலாம்னு நினைச்சாங்க அவுங்க ரெண்டு பேரும்

Feet Aching, Spotting the Banyan Tree

உடனே ரெண்டு பேரும் தங்களோட கழுதைய ஒரு செடியில கட்டி வச்சிட்டு , ஒரு பெரிய துணிய எடுத்து ஆலமரத்து நிழல்ல விரிச்சி போட்டுட்டு படுத்து ஓய்வெடுத்தாங்க ,ரொம்ப தூரம் நடந்து வந்த தலைப்புல முல்லாவோட மனைவி தூங்க ஆரம்பிச்சாங்க ,கூட படுத்த முல்லா ஆலமர விழுது ஆடுறத பார்த்துகிட்டே இருந்தாரு

Resting Under the Banyan Tree

ரொம்ப தூரம் அயர்ந்து தூங்குன முல்லாவோட மனைவி தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சாங்க ,அப்பத்தான் பார்த்தாங்க முல்லா தன்னோட வாயில விறல் வச்சிக்கிட்டு உக்காந்து இருக்குறத ,ஆமா இப்ப என்ன யோசிச்சீங்க சொல்லுங்கன்னு சொன்னாங்க

Wife Wakes and Asks What He's Thinking

உடனே தன்னோட வாயில இருந்து விரலை எடுத்த முல்லா ,இல்ல நீ கழுதைய கட்டி போட்டுட்டு தூங்குற ,நான் தூங்காம கழுத்தியவே பார்த்துகிட்டு இருக்கேன் ,இது தெரிஞ்சும் மெல்லமா வந்த திருடன் கழுதைய அவுத்து தன்னோடயே இழுத்துகிட்டு போறானே அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்னு யோசிச்சிகிட்டு இருக்கேனு சொன்னாரு

Mulla Explains the Thief and the Donkey

இத கேட்ட முல்லாவோட மனைவிக்கு தூக்கி வாரி போட்டுச்சு என்னது கழுதையை திருடன் திருடிட்டு போய்ட்டானா ,ஏன் அவன தடுக்கல ,என்னையாவது எழுப்பு இருக்க வேண்டாமா ,ஏன் இப்படி செஞ்சீங்கன்னு கத்த ஆரம்பிச்சாங்க ,முல்லா தன்னோட வாயில திரும்பவும் விரலை வச்சிக்கிட்டே சொன்னாரு

Wife's Shocked Outburst

நீ தான் எத யோசிச்சாலும் வாயில விரலை வச்சிக்கிட்டு அமைதியா இருக்க சொன்ன அதனால தான் அந்த திருடன் வந்து கழுதையை இழுத்து கிட்டு போறத பார்த்ததும் வாயில விரலை வச்சிகிட்டேனு சொன்னாரு

Mulla Reminds Her of the Silence Rule

தன்னோட தவறுநாள கழுதை இப்படி திருடு போயிடுச்சேன்னு நினைச்ச முல்லாவோட மனைவி வேகமா நடந்து போக ஆரம்பிச்சாங்க ,அன்னையில இருந்து முல்லாவோட விசயத்துல தலையிடாம இருந்தாங்க அவுங்க

Wife's Regretful Fast Walk Homeward