Thousands Of Slippers -Akbar Birbal Story in Tamil- பீர்பாலின் செருப்பு

Thousands Of Slippers -Akbar Birbal Story in Tamil- பீர்பாலின் செருப்பு:-ஒருநாள் அக்பருக்கு பீர்பால வம்பிழுக்க ஆச வந்துச்சு ,உடனே ஒரு வேலையாளை கூப்பிட்டு பீர்பாலோட செருப்ப ஒளிச்சு வைக்க சொன்னாரு,அவரும் அதே மாதிரி செஞ்சாரு

கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க பீர்பால் வெளியில நடந்துட்டு வருவோம்னு கூப்பிட்டாரு அக்பர்

அரண்மனைக்கு வெளிய வந்து பார்த்த பீர்பால் ,தன்னோட செருப்பு காணாம போனத பார்த்து வியப்படைஞ்சாரு

அத பார்த்த அக்பர் ,என்ன பீர்பால் தேடுறீங்கன்னு கேட்டாரு

அதுக்கு பீர்பால் தன்னோட செருப்பு காணோம்னு சொன்னாரு ,உடனே அக்பர் சொன்னாரு அப்ப என்னோட ஆட்சியில திருட்டு நடக்குதுன்னு சொல்றிங்களானு கேட்டாரு

பீர்பாலுக்கு அப்பத்தான் புரிஞ்சது அக்பர் தன்னோட விளையாடுறாருனு ,உடனே அக்பர் புது செருப்பு கொண்டுவந்து பீர்பாலுக்கு கொடுக்க சொன்னாரு

உடனே ஒரு புது செருப்ப ஒரு வேலைக்காரன் கொண்டுவந்து கொடுத்தான் ,அத போட்டுக்கிட்ட பீர்பால்

அக்பர் காதுபட ” இறைவா என்னோட செருப்பு அளவ சரியா தெரிஞ்சு வச்சிருக்கிற ,அந்த செருப்பு திருடன் நீடோடி காலம் வாழணும்னு வேண்டுனாரு “

இத கேட்ட அக்பர் என்ன பீர்பால் திருடன வாழ்த்துறீங்கன்னு கேட்டாரு

திருடன் அரசரா இருக்கும்போது வாழ்த்ததான செய்யணும்னு சொன்னாரு ,அதுக்கு அக்பர் கேட்டாரு எப்படி கண்டுபிடிசீங்க பீர்பல்ன்னு

அதுக்கு பீர்பால் சொன்னாரு ,எனக்கு கொடுத்த புது செருப்போட அளவு ரொம்ப சரியா இருந்துச்சு ,அத வச்சு நீங்கதான் என்கூட விளையாடுறீங்கன்னு நான் புரிச்சிகிட்டேனு சொன்னாரு பீர்பால்