The Warmth of a Candle முல்லா மெழுகுவர்த்தி சூப்:-முல்லாவுக்கு அடுத்தவங்களோட போட்டி போட்டு ஜெயிக்கிறதுல ஒரு தனி பிரியம் அவர் கூட யாராவது போட்டிக்கு வந்தாங்கன்னா அவரோட புத்திசாலித்த பயன்படுத்தி எப்பயும் ஜெயிச்சு கிட்டே தான் இருந்தாரு

அதனாலவே அந்த கிராமத்தில் இருக்க யாருமே முல்லா கிட்ட போட்டிக்கு போகவே மாட்டாங்க அப்படி இருக்கரப்பத்தான் வெளியூர்லருந்து ஒரு விருந்தாளி முல்லா ஓட பக்கத்து வீட்டுக்கு விருந்துக்கு வந்தாரு

அவர்கிட்ட முல்லாவை பத்தியும் அவரோட அறிவ பத்தியும் அவரோட புத்திசாலித்தனத்துனால அவர் எப்பவும் எல்லாரையும் ஜெயிக்கிறார் அப்படிங்கிற விஷயத்த பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டார் அந்த விருந்தாளி,அவருக்கு அது ரொம்ப ஆச்சரியமா இருந்தாலும உள்ளுக்குள்ள பொறாமையும் இருந்துச்சு

முல்லா என்ன அவ்வளவு பெரிய புத்திசாலியா அவரைவிட புத்திசாலி நான் தான்,வேணும்னா பாருங்க நான் இன்னைக்கு முல்லா கிட்ட போட்டு ஜெயிச்சு காட்டுறேன் அப்படின்னு சொன்னாரு அந்த விருந்தாளி

உடனே அவங்க ரெண்டு பேரும் முல்லா ஓட வீட்டுக்கு வந்தாங்க முல்லா அப்பதான் ரொம்ப குளிரா இருக்குன்னு ஒரு பெரிய துணியை எடுத்து தன்னோட உடம்ப சுத்திக்கிட்டு இருந்தாரு

அவர் கிட்ட வந்த பக்கத்து வீட்டுக்காரரும் அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியும் முல்லா அவர்களே எங்க வீட்டுக்கு வந்திருக்கிற இந்த விருந்தாளி உங்களைவிட புத்திசாலினு சொல்றாரு ,இவர்கிட்ட போட்டி போட்டு நீங்க ஜெயிச்சு காட்டுங்க அப்பத்தான் உங்களோட புகழ் இவருக்கு புரியும் அப்படின்னு சொன்னாரு அந்த பக்கத்து வீட்டுக்காரர்

இத கேட்டேனே உடனே முல்லாவுக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு அடடா இன்னைக்கு நம்மகிட்ட போட்டி போட்டு தோக்குறதுக்கு வெளியூரிலிருந்து ஒரு விருந்தாளி வந்திருக்காரு அப்படின்னு நினைச்சாரு , உடனே அந்த வியாபாரிகிட்ட நமக்குள்ள என்ன போட்டின்னு நீங்களே சொல்லுங்க எதுவா இருந்தாலும் அதை சந்திக்க நான் தயார் அப்படின்னு சொன்னாரு முல்லா

உடனே அந்த வியாபாரி சொன்னாரு உங்களுக்கு ரொம்ப குளிருது போல அதனால தான் இவ்வளவு பெரிய கம்பளி போர்வைய கட்டிக்கிட்டு இருக்கீங்க இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி வீட்டுக்குள்ள படுக்காம இந்த மரத்தடியில் படுத்து தூங்குங்க போர்வையோ ஸ்வட்டரோ எதுவும் போடக்கூடாது அப்படி இருந்துட்டீங்கன்னா நீங்க தான் ஜெயிச்சீங்க அப்படின்னு நான் ஒத்துக்குறேன் அப்படின்னு சொன்னாரு

அப்பத்தான் அந்த பக்கத்து வீட்டுகாரர் சொன்னாரு இது உடம்போட திறமையை கொண்டு நடக்கிற போட்டி இதில் எங்கே புத்திசாலித்தனத்தை நிரூபிக்கிறது அப்படின்னு கேட்டாரு அதுக்கு அந்த விருந்தாளி சொன்னாரு போட்டின்னு வந்துட்டா போட்டி போட்டி தான் அது உடம்பு வலிமையால் செய்கிறதா இருந்தாலும் சரி புத்தி கூர்மையாக செய்ததா இருந்தாலும் சரி,ஏன் உங்க முல்லாவுக்கு இந்த போட்டியில் கலந்து கொள்கிற விருப்பமில்லையா அப்படின்னு கேட்டாரு

உடனே முல்லாவே சொன்னாரு நான் இந்த போட்டிக்கு தயார் அப்படின்னு சொல்லிட்டு அன்னைக்கு ராத்திரி முழுசும் எந்த துணியும் கம்பளி போர்வையோ போடாம பணியில் படுத்து கிடந்தாரு முல்லா

விடியப் போற நேரத்துல அங்க வந்த அந்த விருந்தாளியும் பக்கத்து வீட்டு காரரும் அங்க வந்தாங்க , என்ன முல்லா எதுவும் போடாம தூங்குனீங்களா அப்படின்னு பாக்குறதுக்கு தான் வந்தேன்னு சொன்னாரு அந்த விருந்தாளி ,அதுக்கு முல்லா ஏன் பார்த்தா தெரியலையா நான் ராத்திரி முழுசும் பனியில இப்படியேதான் படுத்து இருந்தேன் அப்படின்னு சொன்னாரு அதுக்கு

அப்பத்தான் அந்த விருந்தாளி சொன்னாரு அங்க பாத்தீங்களா அந்த வீட்டு ஜன்னலில் ஒரு மெழுகுவர்த்தி ஏத்தி இருக்கு. அதோட கத கதப்புல தான் நீங்க ராத்திரி பூரா பனியை தாங்கிக்கிட்டு உயிரோடு இருக்கீங்க அது மட்டும் இல்லேன்னா நீங்க வெறச்சி போயிருப்பீங்க குளிர்ல அப்படின்னு சொன்னாரு

இத கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் நீங்க விதண்டாவாதம் பண்றீங்க மெழுகுவர்த்தியை வச்சு மெழுகுவர்த்தியோட கதகதப்புல யாராவது உயிர் வாழ முடியுமா அப்படின்னு கேட்டாரு,அவர் அமைதியா இருக்க சொன்ன முல்லா இருங்க உங்க ரெண்டு பேருக்கு நான் சூப் போட்டு கொண்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனாரு

ரொம்ப நேரம் ஆகியும் முல்லா வெளிய வராது அதனால அந்த பக்கத்து வீட்டுக்காரரும் அந்த விருந்தாளியும் முல்லாவோட வீட்டுக்குள்ள போயி முல்லா என்னதான் செய்றாரு அப்படின்னு பார்க்க போனாங்க

உள்ள போய் பார்த்த அவுங்க ரெண்டு பேருக்கும் ஒரே அதிர்ச்சி அங்க ஒரு சட்டி நிறைய சூப் வைக்கிறதுக்கு எல்லாத்தையும் போட்டு வச்சிருந்த முல்லா அடுப்ப மட்டும் பத்த வைக்காம கொஞ்சம் தூரத்துல ஒரு மெழுகுவர்த்தியை பொருத்தி வச்சுட்டு உட்கார்ந்து இருந்தாரு

இது என்ன முல்லா அடுப்பு பத்த வைக்காம எப்படி சூப் வைக்கிறீங்க அப்படின்னு பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார் அப்பத்தான் முல்லா சொன்னாரு மெழுகுவர்த்தியோட கதகதப்புல ஒரு முழு மனிதனே குளிர்ல தாக்கு பிடிக்க முடியுதுன்னா அந்த மெழுகுவர்த்தியோட கதகதப்புல சூப்பே வைக்க முடியும் கொஞ்ச நேரம் காத்திருங்க உங்களுக்கு கொதிக்க கொதிக்க சூப் தயார் செஞ்சு தரேன் அப்படின்னு சொன்னாரு

இதை கேட்ட அந்த விருந்தாளிக்கு புரிஞ்சு போச்சு இந்த ஆள் உடல் வலிமையால ஜெயிக்க வேண்டிய போட்டியை கூட தன்னுடைய மனோ வலிமையாள,புத்திசாலித்தனத்தினால ஜெயிச்சுட்டாரு அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து போய்ட்டாரு ,அவரும் அவரோட ஊருல போயி முல்லாவோட புத்திசாலித்தனத்தை எல்லாருகிட்டயும் சொல்ல ஆரம்பிச்சாரு