இளவரிசைகளின் ரகசியம் – The Twelve Dancing Princesses Story in Tamil

The Twelve Dancing Princesses Story in Tamil இளவரிசைகளின் ரகசியம் :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு 12 பெண் குழந்தைகள் பிறந்தாங்க,

The Twelve Dancing Princesses Story in Tamil

அவுங்க பெரிய பெண்களா வளர ஆரம்பிச்சதும் ராஜாவுக்கு ரொம்ப மனக்கஷ்டம் ஏற்பட்டுச்சு,

The Twelve Dancing Princesses Story in Tamil

ஏன்னா அந்த 12 இளவரசிகளும் தினமும் புதுசா ஒரு செருப்பு வாங்குறதுக்கு ,அந்த செருப்பும் அன்னைக்கே பிஞ்சு போய்டுறதும் வாடிக்கையா இருந்துச்சு.

பக்கத்துக்கு நாட்டுல இருந்து எவ்வளவு தரமான செருப்பு வாங்கி கொடுத்தாலும் தினமும் அது பிஞ்சு போறத நினச்சு அவருக்கு வருத்தமா இருந்துச்சு,

அதனால ஒருநாள் ஊர் எல்லாம் தண்டோரா போட்டு இளவரசிகளோட ரகசியம் என்னனு கண்டுபிடிக்கிறவங்களுக்கு நல்ல பரிசு கிடைக்கும்னு சொன்னாங்க.

The Twelve Dancing Princesses Story in Tamil

இத கேட்ட நிறைய பேரு அரண்மனைக்கு வந்து ரகசியத்த கண்டுபிடிக்க முயற்சி செஞ்சாங்க ஆனா எந்த பயனும் கிடைக்கல,

The Twelve Dancing Princesses Story in Tamil

ஒருநாள் ஒரு வேட்டைக்காரருக்கு இந்த செய்தி கிடைச்சது,உடனே அவர் அரண்மனைக்கு போனாரு,அப்ப ஒரு பாட்டி அவருகிட்ட பசிக்குதுனு உதவி கேட்டாங்க.

உடனே இறக்கமான மனசு உள்ள அந்த வேட்டைக்காரர் தங்கிட்ட இருந்த உணவு பொருட்கள அவர்கிட்ட கொடுத்தாரு ,

உடனே அந்த பாட்டி ரொம்ப நன்றி எனக்கு மந்திர சக்தி இருக்கு ,ரொம்ப நல்ல மனசுள்ளவங்களுக்குத்தான் என்னால உதவ முடியும்,

The Twelve Dancing Princesses Story in Tamil

நீ எங்க போறாங்கிறதும் ,எதுக்காக போறாங்கிறதும் என்னோட மந்திர சக்தி மூலமா எனக்கு தெரியும்,இந்தா இந்த போர்வைய வச்சுக்க இத நீ போர்த்திக்கிட்டா நீ யாரு கண்ணுக்கும் தெரியமாட்ட,

அதே நேரத்துல இளவரசிகள் உனக்கு எதாவது கொடுத்தாங்கன்னா அத சாப்பிடாத அப்படின்னு சொன்னாங்க அந்த பாட்டி

ஆச்சர்யத்தோட அந்த பாட்டி கொடுத்த போர்வைய வாங்கிகிட்டு அரசர சந்திக்க போனாரு அந்த வேட்டைக்காரரு,

The Twelve Dancing Princesses Story in Tamil

அவர பாத்த அரசர் சொன்னாரு இளவரசிகளோட ரகசியத்த நீ கண்டுப்பிடிச்சன்னா உனக்கு இந்த நாட்டோட ராஜ்யத்தையும் ,மூத்த இளவரசியையும் உனக்கு கொடுக்குறேன் ,

அப்படி இல்லைனா உனக்கு தண்டனை கிடைக்கும்,

நல்லா யோசிச்சு போட்டியில கலந்துக்கனு சொன்னாரு அரசர்,அத கேட்ட வேட்டைக்காரர் நான் போட்டியில கலந்துக்குறேன்னு தைரியமா சொன்னாரு ,

உடனே மூத்த இளவரசிய கூப்பிட்டு அரண்மனைல இளவரசிங்க வசிக்கிற இடத்துக்கு பக்கத்துலயே இவர தங்க வைக்க சொல்லி சொன்னாரு.

The Twelve Dancing Princesses Story in Tamil

இளவரசி அறைகளுக்கு பக்கத்துலயே ஒரு படுக்கை கொடுத்து ,குடிக்க பழரசமும் கொடுத்தாங்க மூத்த இளவரசி.

The Twelve Dancing Princesses Story in Tamil

அப்பத்தான் அந்த வேட்டைக்காரருக்கு அந்த பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு ,உடனே பழரசத்த குடிக்கிறமாதிரி நடிச்சிட்டு செடி இருக்குற தொட்டியில ஊத்திட்டாரு.

The Twelve Dancing Princesses Story in Tamil

கொஞ்ச நேரம் கழிச்சி எல்லா இளவரசிகளும் ரகசிய பாதை வழியா வெளிய போறத ஓரக்கண்ணால பாத்தாரு,

உடனே பாட்டி கொடுத்த மந்திர போர்வைய போத்திகிட்டு மெதுவா அவுங்க பின்னாடியே நடந்து போனாரு

The Twelve Dancing Princesses Story in Tamil

ரகசிய அறை வழியா வெளிய போன இளவரசிங்க ,தங்களோட பக்கத்து நாட்டு இளவரசர் நண்பர்களோட சேர்ந்து நடனமாடுறத பாத்தாரு ,

The Twelve Dancing Princesses Story in Tamil

ஓஹ் இதனாலதான் எவ்வளவு நல்ல செருப்பு வாங்குனாலும் இவுங்க நடனத்தால பிஞ்சி போய்டுதானு மனசுக்குள்ள நினச்சுகிட்டாரு ,ஆனா மூத்த இளவரசி மட்டும் யார் கூடையும் சேராம தனியா நடனமாடுறத பாத்தாரு ,

The Twelve Dancing Princesses Story in Tamil

மறுநாள் காலைல நடந்த விஷயத்தை அரசர் கிட்ட சொன்ன வேட்டைக்காரர்,நீங்க இன்னும் இளவரசிங்கள குழந்தைகள்னு நினைச்சுகிட்டு இருக்கீங்க ,

ஆனா அவுங்களுக்கு கல்யாண வயசு வந்துடுச்சு ,அதனால அவுங்க விருப்ப படுற இளவரசர்களையே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னாரு ,

The Twelve Dancing Princesses Story in Tamil

எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்ட அரசர் ,மூத்த இளவரசியை கூப்பிட்டு நீ மட்டும் ஏன் தனியா நடனமாடுறனு கேட்டாரு,

எனக்கு உங்களுக்கு பிடிச்சவர தான் கல்யாணம் பண்ணிக்க ஆச ,அதனாலதான் எந்த இளவரசர் மேலயும் ஆசைப்படாம இருந்தேன் ,

The Twelve Dancing Princesses Story in Tamil

ஆனா என்னோட தங்கைகள் மேல இருந்த பாசத்தால அவுங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டேன் ,இந்த உண்மைய கண்டுபிடிக்க வந்தவங்களையும் ,

அரண்மனை காவலர்களையும் மயக்க மருந்து கலந்த பழரசத்த கொடுத்து தூங்க வச்சேன் ,என்ன மன்னிச்சிடுங்கனு சொன்னாங்க,

The Twelve Dancing Princesses Story in Tamil

இத கேட்ட இளவரசர் ஒரு முடிவுக்கு வந்தாரு , மூத்த இளவரசியை அந்த வேட்டைக்காரருக்கு கல்யாணம் பண்ணி வச்சி ,

தனக்கு அப்புறமா நீங்க ரெண்டுபேரும் இந்த நாட்ட ஆளணும்னு சொன்னாரு.