The Snake and the Foolish Forgs- பாம்பும் முட்டாள் தவளைகளும்-ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு பாம்பு வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த குளத்துல நிறைய தவளைகளும் அதுங்களுக்கு ஒரு ராஜாவும் இருந்துச்சு.

அந்த பாம்புக்கு ரொம்ப வயசாகிட்டதனால ஓடி ஆடி இரைகளை பிடிச்சி திங்க முடியல,ரொம்ப பசியில வாடுன அந்த பாம்பு ஒருநாள் அந்த ராஜாவயும் அவரோட குடும்பத்தையும் பாத்துச்சு.



மத்த தவளைகளை அந்த தவளை ராஜா நடத்துன விதத்த பாத்து ஆச்சார்ய பட்டுச்சு அந்த பாம்பு ,தன்னோட இனமான தவளைகளை ஒரு பொருட்டாவே மதிக்காம அதுங்களோட பாதுகாப்புக்கு ஒரு விஷயமும் செய்யாம ,தன் குடும்பத்தோட நலத்துல மட்டும் அதிக அக்கறையோடு இருந்தத கவனிச்சுச்சு அந்த பாம்பு.



ஒருநாள் அந்த தவளை ராஜா குடும்பத்துக்கிட்ட வந்த பாம்பு ,தவளை அரசரே என்ன பாத்து பயப்பட வேண்டாம் நான் சாதுவான பாம்பு என்மேல நீங்க உக்காந்துகிட்டீங்கன்னா ,நான் பாம்பு வாகனமா செயல்பட்டு உங்கள ஒவ்வொரு இடதுக்கா கூட்டிட்டு போறேன்னு சொல்லுச்சு



அடடா பாம்பு வாகனமான்னு ஆச்சர்யப்பட்ட தவளை அரசரும் அவரோட குடும்பமும் தவளை மேல ஏறி சவாரி செஞ்சதுங்க.மறுநாள் அங்க வந்த பாம்பு கிட்டா இன்னைக்கும் எங்கள உன் மேல உக்கார வச்சு கூட்டிட்டு போன்னு சொல்லுச்சு தவளை அரசன்



அப்ப பாம்பு சொல்லுச்சு ஐயா எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு ,ரொம்ப பசிக்குது உங்க ஆட்சி நடக்குற இடத்துல இருந்து ரெண்டு தவளைகளை தின்னுகிடுறேனு சொல்லுச்சு,மக்களோட நலத்துல அக்கறை இல்லாத அந்த அரசன் ரெண்டு தவளைத்தானே தின்னுக்கொன்னு சொல்லுச்சு.



ரொம்ப சந்தோசமான பாம்பு தினமும் அரசர் கிட்ட கேட்டு கேட்டு ரெண்டு ரெண்டு தவளையா சாப்பிட்டுக்கிட்டே வந்துச்சு
அதுக்கு பதிலா ராஜாவோட குடும்பத்த தன்னோட முதுகுல சுமந்துக்கிடு எல்லா இடத்துக்கும் போச்சு
கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறமா அந்த தவளை இனமே அழிஞ்சு போச்சு ,கடைசியா அந்த ராஜா குடும்பம் மட்டும்தான் இருந்துச்சு



அங்க வந்த பாம்பு இன்னைக்கு வேற தவளை கிடைக்க போறது இல்லைனு சொல்லிட்டு ராஜா குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு தவளையா பிடிச்சி திங்க ஆரம்பிச்சது
அத பாத்த ராஜா ஏன் இப்படி பண்றன்னு கேட்டுச்சு பாம்புகிட்ட ,உன்னோட சுகத்துக்காக உன் இனத்தையே அளிக்க நினச்ச நீ இப்ப மட்டும் ஏன் கத்துறன்னு சொல்லி ராஜாவையும் பிடிச்சி தின்னுடுச்சு
This is good